டெல்லி: டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் வங்கியியல் மற்றும் நிதியியல் செயல்பாட்டை மேம்படுத்தவும் எளிமையாக்கவும் ஐசிபிஐ வங்கியுடன் இணைந்துள்ளது.
சீன தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கியான ICBC வங்கி, டாடா சன்ஸ் நிறுவத்துடன் நீண்ட கால மூலோபாய வங்கியியல் பங்குதாரராக இணைந்துள்ளது என டாடா குழுமம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இணைப்பு
இந்த இணைப்பின் மூலம் ICBC வங்கி, டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு நிதியியல் சார்ந்த சேவைகள், சர்வதேச நாணய மேம்பாடு, கன்சல்டிங், சர்வதேச நிதியியல் வர்த்தகம், முதலீட்டு வங்கியியல், நாணய பரிமாற்றம், பங்கு முதலீடு மற்றும் பிற சர்வதேச நிதியியல் சேவைகளை வழங்க உள்ளது.

உலக நாடுகள்
மேலும் இக்கூட்டணி வர்த்தகம் மற்றும் நிதியியல் சார்ந்த விஷயங்களை இந்தியா உட்படச் சீனா, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பிராந்திய சந்தையை டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கவனிக்க உள்ளது.

சைரஸ் மிஸ்திரி
இப்புதிய கூட்டணிக்காக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி ICBC வங்கி தலைவர்களை நேற்று சந்தித்தார்.

100 நிறுவனங்கள்
டாடா குழுமம் தலைமையில் உலக நாடுகளில் சுமார் 100 நிறுவனங்கள் இயங்கி வருகிறது. 2014-15ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 108.78 பில்லியன் டாலர்.

ICBC வங்கி
சர்வதேச நிதியியல் சேவையில் ICBC வங்கி முதன்மையானது, உலகில் சுமார் 40 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அரசுகளுக்குத் தனது சேவையை அளித்து வருகிறது.