சென்னை மழை வெள்ளத்தால் ரூ.15,000 கோடி நஷ்டம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் சில இடங்களில் பெய்த கன மழை தற்போது வெள்ளமாக மாறி தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது. உண்ண உணவு.. இருக்க இடம்.. இல்லாமல் பொது இடங்களில் சரியான வசதிகள் இல்லாமல் மக்கள் படும்பாட்டை விவரிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது மக்களின் கண்களிலும் கண்ணீர் தேங்கி இருக்கிறது.

 

இத்தகைய நிலையில் அசோசாம் ஆய்வு நிறுவனம் தமிழக மழை வெள்ளித்தின் மூலம் சுமார் 15,000 கோடி ரூபாய் அளவிலான இழப்புகளைச் சந்தித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

சென்னை மழை வெள்ளம்: இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வந்தது புதுப் பிரச்சனை..!

சென்னை வெள்ளத்தில் உடைமைகளைப் பாதுகாக்கும் சிறந்த காப்பீட்டு திட்டங்கள்..!

அசோசாம்

அசோசாம்

இந்நிறுவனத்தின் ஆய்வில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கடலூர், சென்னை ஆகியவை மூழ்கியுபோனது. இதனால் மக்களின் சொத்துக்களும், அரசின் சொத்துக்களும் அதிகளவில் பாதித்துள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் தமிழ்நாடு சுமார் 15,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் இழப்பைச் சந்திக்க உள்ளது என அசோசாம் அமைப்பு தெரிவித்துள்ளது.

நிதியுதவி

நிதியுதவி

சென்னை வெள்ளம் நிவாரண நிதியாக, மத்திய அரசு தமிழகத்திற்கு 940 கோடி ரூபாய் அறிவித்த நிலையில், நேற்று சென்னை மற்றும் பிற முக்கியப் பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி கூடுதலாக 1,000 கோடி ரூபாய் நிதியுதவியை அளித்தார்.

இதனால் தமிழக அரசிற்கு மத்திய அரசின் சார்பாகச் சுமார் 1,940 கோடி ரூபாய் நிவாரண நிதியாகக் கிடைத்துள்ளது. இதனைத் தமிழக அரசு எங்கே எப்படிப் பயன்படுத்தப் போகிறது என்பது அந்தக் கடவுளுக்கு வெளிச்சம்.

மக்களின் பங்கு
 

மக்களின் பங்கு

மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்பிரச்சனையைத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த நிலையில், மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை நேரடியாக மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றும் பணியில் முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானது. மேலும் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது சென்னை வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம், இண்டர்நெட் டேட்டா எனவும் அளித்த தனது பங்கை முக்கியமாகியது.

இதேபோல் பாதிக்கப்பட்ட இடங்களைத் தவிர இந்தியாவில் பல இடங்களில் இருந்து நிதி மற்றும் பொருள் உதவிக் கிடைத்து வருகிறது.

என்ஆர்ஐ

என்ஆர்ஐ

மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கிற்கு அதிகளிவிலான பணத்தை அனுப்பி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

திங்கட்கிழமை பெய்யத் துவங்கிய மழையால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை நிறுவனத்திற்குள்ளேயே முக்கிய வசதிகள் மட்டும் கொடுக்கப்பட்டுத் தங்க வைத்தனர்.

தற்போது ஹெச்பி, அக்சென்சூர், டிசிஎஸ், சிடிஎஸ், டெக் மஹிந்திரா போன்ற முக்கிய நிறுவன பணியாளர்களைச் சென்னை மற்றும் பிற நகர அலுவலகங்களுக்கு இடம் மாற்றி வருகின்றனர்.

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

மக்கள் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து ஒரு பக்கம் தவிக்கும் நிலையில், மற்றொரு பக்கம் சென்னையில் அதிகளவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பல உற்பத்தி நிறுவனங்களின் நிலையைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.

இவர்களின் இழப்பை இன்சூரன்ஸ் மூலம் பெறலாம் என்றால் அதற்கும் ஒரு பிரச்சனை உள்ளது. இதைப் பற்றித் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Floods in Tamil Nadu may have led to Rs 15,000 crore losses: Assocham

Floods in Chennai and other parts of Tamil Nadu may have resulted in financial losses to the tune of Rs 15,000 crore said by Assocham.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X