இந்தியாவில் முதல் புல்லட் ரயில்.. சீனாவுடனான போட்டியில் ஜப்பான் வெற்றி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 4 வருடத்திற்கு முன் சீனாவில் நடந்த புல்லட் ரயில் விபத்தின் காரணமாக, 98,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மும்பை - அகமதாபாத் வழித்தட புல்லட் ரயில் அமைக்கும் திட்டத்தை ஜப்பான் வென்றது.

 

இதன் மூலம் இந்தியாவில் முதல் புல்லட் ரயில் அமைக்கும் பெருமையை ஜப்பான் நாட்டு ஷின்கேன்சென் சிஸ்டம்ஸ் மூலம் அமைக்கப்படுகிறது.

டெல்லி வரை சீறும்..

டெல்லி வரை சீறும்..

இந்தத் திட்டத்திற்குக் குறைந்த அளவிலான நிதி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உதிரி பாகங்களைத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாறுதல் ஆகியவற்றை அளிக்க ஜப்பான் நாட்டு ரயில் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளது.

எதிர்காலத்தில் வாய்ப்புகள் மற்றும் சூழல்நிலைகளைச் சரியாக அமைந்தால் மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் அமைக்கப்படும் இத்திட்டம், டெல்லி வரை நீட்டிக்கப்படும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஒப்புதல்

நாடாளுமன்ற ஒப்புதல்

இந்த 98,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இத்திட்டம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை மாலை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாரத்தின் இறுதியில் ஜப்பான் பிரதமர் ஜன்சோ அபே இந்தியாவிற்கு வருகிறார், ஆதலால் இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வமான ஒப்புதல் அறிவிப்பை அப்போது வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜப்பான் நிறுவனம்
 

ஜப்பான் நிறுவனம்

சீனாவுடனான மிகப்பெரிய போட்டியில் வெற்றிபெற்ற ஷின்கேன்சென் சிஸ்டம்ஸ் இதுவரை பாதுகாப்பு குறித்து எவ்விதமான பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை. மேலும் இந்நிறுவனத்தின் ரயில் இயக்கங்களில் காலதாமதத்தின் அளவு 1 நிமிடத்திற்குக் குறைவாகவே உள்ளது என நிட்டி அயோ குழுவின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.

சீனா விபத்து

சீனா விபத்து

தவறான வடிவமைப்பு, மட்டமான மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகவே சீனாவின் தென்கிழக்கு நகரமான வென்சூவில் புல்லட் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40 பேர் உயிரை இழந்தனர். மேலும் 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

புல்லட் ரயில் அமைப்பதில் ஜப்பான் நாட்டு நிறுவனங்களைப் போல் சீனாவும் உலக நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

பிற நாட்டு நிறுவனங்கள்

பிற நாட்டு நிறுவனங்கள்

இந்தியாவில் அமைக்கப்படும் இதர புல்லட் ரயில் திட்டங்களுக்கு ஜப்பான் நிதியுதவி அளிக்கத் தயாராக உள்ளபோது பிற நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிதியுதவி

நிதியுதவி

இத்திட்டத்தில் ஜப்பான் நிறுவனத்திற்கு இந்தியா 0.1 சதவீத வட்டியில் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் இத்தகைய திட்டங்களுக்கு 0.3 சதவீதத்தில் மட்டுமே கடன் அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இக்கடனைத் திருப்ப செலுத்த 50 வருடங்கள் வரையும், 10-15 வருடங்கள் வரை இதனை நீட்டித்துக்கொள்ளவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

இத்திட்டத்திற்குத் தேவையான 70-80 சதவீத பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஜப்பான் இத்திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றை அளிக்கவும் உறுதி அளித்துள்ளது.

நிலம்

நிலம்

மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் அமைக்கப்படும் இந்த 98,000 கோடி ரூபாய் திட்டத்தில் 17,000-18,000 கோடி ரூபாய் நிலக் கைப்பற்றுவதற்காக மட்டும் செலவிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japan pips China to build India's first bullet train

The bullet train accident in China four years ago along with low-cost finance and a promise to have a substantial 'Make in India' component and transfer of technology clinched the deal for Japan to build the first high-speed train that will run between Mumbai and Ahmedabad
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X