பட்ஜெட் 2016: கணிப்புகளும்.. லாபம் அடையும் நிறுவனங்களும்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடாகப் பார்க்கப்படுவது பங்குச்சந்தை முதலீடு. மத்திய பட்ஜெட் (Budget 2016) அறிவிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் பட்ஜெட் அறிவிப்பைப் பொருத்து முதலீடு செய்யக் காத்துக்கிடக்கின்றனர்.

தற்போதைய நிலையில் மத்திய பட்ஜெட் கணிப்புகளை வைத்து துறைவாரியான எதிர்பார்ப்புகள் மற்றும் அதனால் லாபமடையும் நிறுவனங்கள் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

இக்கட்டுரை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல் சாமானிய மக்களுக்கு அதிகளவில் பயன்படும்.

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறை

மத்திய அரசு இந்தியாவில் 10 முதல் 15 வருடம் வரையில் பயன்பாட்டில் உள்ள வாகனங்களைக் கொள்முதல் செய்ய மக்களுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டில் அதிகளவிலான மாசுபாடு குறையும்.

அதுமட்டும் அல்லாமல் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக ஆட்டோமொபைல் ஏற்றுமதி சில முக்கியச் சலுகையை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என நம்பப்படுகிறது.

இத்தகைய அறிவிப்புகளால் ஹீரோ மோட்டோகார்ப், மாருதி போன்ற முக்கிய நிறுவனங்கள் அதிகளவிலான நன்மை அடையும்.

 

வங்கி மற்றும் நிதியியல் நிறுவன துறை

வங்கி மற்றும் நிதியியல் நிறுவன துறை

இந்திய வங்கி மற்றும் நிதியியல் துறையில் சொத்து இருப்பு மற்றும் வளர்ச்சி குறித்த பிரச்சனைகளைக் களைய மத்திய அரசு இன்பரா திட்டத்தை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும் முதல் தர நகர வங்கிகளில் வர்த்தகத்தை அதிகரிக்கப் பொதுத்துறை வங்கிகளில் கூட மூலதனத்தைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் அடையும்.

 

கேப்பிடல் கூட்ஸ்

கேப்பிடல் கூட்ஸ்

மத்திய அரசின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளைப் பார்க்கும்போது சாலை, ரயில்வே, மெட்ரோ, பாதுகாப்பு மற்றும் நகர மேம்பாடு திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் எல் அண்ட் டி, Sadbhav, ஏபிபி, சிமென்ஸ், பெல் போன்ற நிறுவனங்கள் அதிக லாபம் அடையும்.

 

சிமென்ட்

சிமென்ட்

மத்திய அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டுமானம், கான்கிரீட் சாலை மற்றும் ஊரக வீட்டு வசதி திட்டங்கள் முக்கிய இடத்தைப் பிடிப்பதால் அடுத்தச் சில வருடங்களுக்குச் சிமென்ட் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களின் தேவை அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் அல்ட்ரா டெக், கிராசிம், ஏசிசி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியும் லாபமும் அடையும்.

 

எப்எம்ஜிசி மற்றும் ரீடைல்

எப்எம்ஜிசி மற்றும் ரீடைல்

அரசு, கார்பரேட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்க ஆலோசனை செய்து வருவதால் 5 சதவீத வரிக் குறைப்பின் மூலம் கார்பரேட் நிறுவனங்கள் அதிகளவிலான லாபம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு கார்பரேட் வரியை 25 சதவீதமாகக் குறைத்தால், ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஜிஎஸ்கே போன்ற நிறுவனங்கள் அதிக நன்மை அடையும்.

 

ஐடி சேவை

ஐடி சேவை

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகளவில் வளர்ச்சி அடையவும், இதன் மத்தியில் பணப் புழக்கம் அதிகரிக்கவும் இந்நிறுவனங்கள் மீதான நேரடி மற்றும் மறைமுக வரி மட்டும் அல்லாமல் மாட் (MAT) வரிகளிலும் சலுகை அளிக்க மத்திய அரசின் பட்ஜெட் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் இந்த முடிவு சாத்தியப்பட்டால் இன்போசிஸ், ஓஎப்எஸ்எஸ் போன்ற அதிக வரி செலுத்தும் நிறுவனங்களுக்குச் சில முக்கியச் சலுகையைப் பெறும்.

 

பவர்

பவர்

மின் உற்பத்தித் துறையில், 32-AC மற்றும் 80-IA சட்ட பிரிவுகளின் கீழ் முதலீட்டை அதிகரிக்க வழிவகைச் செய்யப்படும். இதனால் என்டிபிசி போன்ற மின் உற்பத்தி மற்றும் பரிமாற்ற நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தக லாபத்தை அடையும்.

இன்பராஸ்டக்சர்

இன்பராஸ்டக்சர்

தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறை திட்டங்களுக்கான முதலீட்டை அதிகரிக்க உள்ள நிலையில் பிபிபி திட்டங்களுக்கு வழிவகைச் செய்யப்படுவதால் அனைத்து EPC மற்றும் PPP நிறுவனங்களும் இதன் மூலம் லாபமடையும்.

மெட்டல்

மெட்டல்

தற்போது ஸ்டீல் இறக்குமதி வரியை 5 சதவீதத்தில் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது இந்திய ஸ்டீல் மற்றும் எஃகு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் ஸ்டீல் இறக்குமதியில் உள்ள சலுகைகளையும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், ஹின்டால்கோ, வென்டேட்டா மற்றும் நால்கோ நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை அடைய உள்ளது.

 

எண்ணெய் மற்றும் எரிவாயு

எண்ணெய் மற்றும் எரிவாயு

இத்துறை நிறுவனங்களின் மீதான வரி மற்றும் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதால் ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு ஏற்ற ஒன்றாக உள்ளது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

சிறப்புப் பொருளாதாரப் பகுதிக்கு மாட் மற்றும் டிடிடி தளர்க்கப்பட்ட உள்ளது. இதனால் மக்கள் மலிவு விலையில் வீடுகள் கிடைக்க உள்ளது. எனவே டிஎல்எப், பிரஷ்டீஜ், பீனீக்ஸ், ஓப்ராய் மற்றும் SEZ நிறுவனங்களின் லாபமும் சரி வர்த்தகமும் சரி அதிகரிக்கும்.

டெலிகாம்

டெலிகாம்

ஸ்பெக்ட்ரம் கட்டணத்தில் மத்திய அரசின் தெளிவான விளக்கும் இத்துறையின் ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையும்.

பார்மா

பார்மா

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் கலால் வரியில் எதிர்பார்க்கப்படும் குறைப்பு ஆகியவை சன் பார்மா மற்றும் டாக்டர் ரெட்டி போன்ற மிகப்பெரிய பார்மா நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investors are expected to focus on stocks that may get impacted from budget announcements.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X