விமானத்தை விட குறைவான புல்லட் ரயில் டிக்கெட் கட்டணம் - சுரேஷ் பிரபு தகவல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் பணிகள் ஆறு ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் டிக்கெட் கட்டணம் விமான டிக்கெட் கட்டணங்களை விடக் குறைவாக இருக்கும் எனவும் நேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

 

இது குறித்து நேற்று லோக்சபா கேள்வி நேரத்தில் பதில் அளித்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு லட்சிய திட்டமான புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதினால் பராமறித்தல் செலவு குறைவாக இருக்கும்.

மும்பை-அகமதாபாத் 508 கிலோ மீட்டர்

மும்பை-அகமதாபாத் 508 கிலோ மீட்டர்

இந்த அதிவேக புல்லட் ரயில் மூலமாக மும்பை-அகமதாபாத் இடையேயான 508 கிலோ மீட்டரை 2 மணி நேரத்தில் கடக்க இயலும் என்றும், மணிக்கு 350 கிமீ வரை இயக்க இயலும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இயக்கப்பட்டு வரும் அதிவேக துரந்தோ எக்ஸ்பிரஸ் இந்த இரண்டு நிதி மையங்களுக்கு இடையில் 7 மணிநேரத்தில் சென்றடைவது குறிப்பிடத்தக்கது.

பிற பகுதிகளுக்கான நிதி

பிற பகுதிகளுக்கான நிதி

இத்திட்டத்திற்கான நிதி பிற பகுதிகளுக்கான நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது என்று சுட்டி காட்டியதற்குப் பிற மாநிலங்களுக்கு இதற்கு முன்பு அளித்ததை விட இருமடங்கு அதிகமான நிதியை அளித்துள்ளதாகக் கூறினார்.

தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவி
 

தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவி

அதிவேக ரயில் திட்டத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியை ஜப்பான் அரசாங்கம் அளிக்கிறது. இதற்கான ஜப்பனீஸ் சர்வதேச நிறுவனத்தின் கூட்டு செயலாக்க ஆய்வு ஏற்கனவே முடிந்துவிட்டது.

ஜப்பான் அரசு அளிக்கும் கடன்

ஜப்பான் அரசு அளிக்கும் கடன்

மும்பை - அகமதாபாத் இடையேயான இந்த 508 கிமீ திட்டத்தை செயல்படுத்த ரூ. 97,636 கோடி செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளதாகவும் இதில் 81 சதவீதத்தை ஜப்பான் நமக்குக் கடனாக வழங்கும் என்றும் கூறினார்.

திட்ட மற்றும் சாத்தியமான செலவு அதிகரிப்பு, கட்டுமான இறக்குமதி தீர்வைகள், வட்டி என அனைத்தும் இதில் அடங்கும்.

கடனுக்கான வட்டி ஆண்டிற்கு 0.1 சதவீதம்

கடனுக்கான வட்டி ஆண்டிற்கு 0.1 சதவீதம்

இத்திட்டத்திற்கு ஜப்பான் வழங்கும் கடனுக்கான வட்டி ஆண்டிற்கு 0.1 சதவீதமாக 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சிக்னல் மற்றும் மின் அமைப்புகளைப் போன்ற பிற உபகரணங்கள் ஜப்பானில் இருந்து கடன் ஒப்பந்தத்திற்கு ஏற்றார் போல இறக்குமதி செய்யப்படும்.

இரு அதிவேக ரயில் திட்டங்கள்

இரு அதிவேக ரயில் திட்டங்கள்

அதிவேக ரயில் மற்றும் செமி அதிவேக ரயில்கள் என இத்திட்டத்தை இரண்டு வகையாக, இரண்டு சேவைக்கும் சாத்தியமான தடங்களை அடையாளம் காணப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

பிற அதிவேக பாதைகள்

பிற அதிவேக பாதைகள்

பிற அதிவேக பாதைகளுக்கான சத்தியக் கூறுகளைப் பற்றி கூறும் போது டெல்லி - மும்பை இடையேயான அதிவேக பாதைக்கு மூன்றாவது ரயில்வே சர்வே மற்றும் வடிவமைப்பு நிறுவன குரூப் கார்ப்பரேஷன் (சீன ஆலோசகர்) மற்றும் இந்தியாவில் இருந்து லாச்மெயர் (Lahmeyer) இண்டர் நேஷனல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மும்பை - சென்னை, டெல்லி - கொல்கத்தா, டெல்லி - நாக்பூர் மற்றும் மும்பை நாக்பூர் பாதைகளுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய பிற உலக நிபுணர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செமி-அதி வேகப் பாதைகள்

செமி-அதி வேகப் பாதைகள்

தில்லி-சண்டீகர், சென்னை-பெங்களூர்-மைசூர், தில்லி-கான்பூர், நாக்பூர்-பிலாஸ்பூர், மும்பை-கோவா, மும்பை-அகமதாபாத், சென்னை-ஹைதெராபாத் மற்றும் நாக்பூர்-செகந்திராபாத் என ஒன்பது வழித்தடங்களில் செமி அதி வேகப் பாதைகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bullet Train Ticket Will Cost Less Than Flight between Mumbai-Ahmedabad - suresh prabhu

Bullet Train Ticket Will Cost Less Than Flight between Mumbai-Ahmedabad - suresh prabhu
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X