பெட்ரோல், டீசல் மீது புதிய வரி. . மத்திய அரசின் புதிய திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய நாட்டின் மறைமுக விதிப்பை முற்றிலும் மாற்றியமைக்கும் முயற்சியாக மத்திய அரசு ஜிஎஸ்டி விரி விதிப்பை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்டி மசோதாவில் தொடர்ந்து பல மாற்றங்கள், மேம்படுத்தும் பணிகளைச் செய்து வரும் மத்திய அரசு தற்போது புதிய திட்டத்தை ஜிஎஸ்டி வரி அமைப்பு முன் வைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவிற்கு ஒப்புதல் பெறும்போது இவ்வரிவிதிப்பின் கீழ் பெட்ரோலியம் மற்றும் அதன் உற்பத்தி பொருட்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு பெட்ரோலியம், கச்சா எண்ணெய் மற்றும் சில முக்கிய உற்பத்தி பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஜிஎஸ்டி மசோதா

ஜிஎஸ்டி மசோதா

தற்போது ஜிஎஸ்டி மசோதாவில் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இடையில் நடக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு விடை காணும் விதமாக மத்திய அரசு, பெட்ரோலியம், கச்சா எண்ணெய் மற்றும் சில முக்கியப் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஜிஎஸ்டி மசோதாவில் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அதிகளவில் குறைக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

 

3 சதவீத வரி..

3 சதவீத வரி..

ஜிஎஸ்டி விதிப்பின் கீழ் பெட்ரோலிய பொருட்களை இணைப்பதன் மூலம் மத்திய அரசு 2-3 சதவீத வரியை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்குக் கூடுதல் வருவாய் பெறும்.

வரி விலக்கு

வரி விலக்கு

நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற ஜிஎஸ்டி மசோதாவில் பெட்ரோலிய பொருட்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு அளித்த பரிந்துரை ஏற்கப்பட்டால் பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி கீழ் 2-3 சதவீத வரி விதிக்கப்படும்.

இதுமட்டும் அல்லாமல் மாநில அரசுகளுக்கு விருப்பம்போல் விற்பனை வரியை விதிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

 

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில்

இப்புதிய வரி விதிப்பைப் பின் பெட்ரோலிய பொருட்களைச் சேர்ப்பது குறித்த பரிந்துரையை ஆலோசனை மற்றும் ஆய்வு செய்வதற்கா மத்திய அரசு தனது பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் சமர்ப்பித்துள்ளது.

இவ்வமைப்பின் ஆய்வின் முடிவில் இதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் மற்றும் பாதிப்புகள் தெரிய வரும்.

 

மாநில அரசுகள்

மாநில அரசுகள்

இந்தியாவில் மாநில அரசுகள் தங்களது திடீர் நிதி தேவையைத் தீர்க்கும் ஒரு கருவியாகவே பெட்ரோல், டீசல் பொருட்கள் உள்ள நிலையில் ஜிஎஸ்டி மசோதாவிற்குள் இதனைக் கொண்டு வர மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது.

இதில் உள்ள தாக்கத்தை உணர்ந்த மத்திய அரசு இத்துறையையும், இதன் விலையும் கட்டுக்குள் வைக்க, ஜிஎஸ்டி கீழ் சில சதவீத வரியை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

 

ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டி 18 சதவீத ஜிஎஸ்டி விரியை பிரிந்துரை செய்தது. இதனால் நாட்டின் பணவீக்கத்தில் மிகப்பெரிய பாதிப்பு உருவாகும் எனத் தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு 16 சதவீதமாக இருக்க வேண்டும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 பாதிப்பு

பாதிப்பு

ஜிஎஸ்டி கீழ் பெட்ரோலிய பொருட்களுக்காக விதிக்கப்படும் வரி நுகர்வோரைப் பாதிக்காது, மேலும் இத்தகைய வரி விதிப்புத் தத்தம் துறைகளுக்கு மிகப்பெரிய லாபத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இடமில்லை..

இதற்கு இடமில்லை..

ஜிஎஸ்டி மசோதாவின் முன் அறிக்கையில், இந்த விரி விதிப்பில் விலக்கும் அளிக்கப்பட்டுள்ள அல்லது ஜிஎஸ்டி மசோதா பொருந்தாத சில பொருட்கள் உள்ளது. அவை..

1. பெட்ரோலியம் பொருட்கள்
2. பொழுதுபோக்கு மற்றும் தீம் பார்க் வரி விதிப்பு மற்றும் பஞ்சாயத், நகராட்சி / மாவட்ட சபை வசூல் செய்யும் வரி
3. மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி
4. முத்திரைத் தாள் கட்டணம்
5. கஸ்டம்ஸ் வரி
6. மின்சாரம் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குச் செலுத்தப்படும் வரி.

 

இந்தியா வளர்ச்சி

இந்தியா வளர்ச்சி

நாட்டில் பெட்ரோலியம் மற்றும் மின்சாரத் துறையை முழுமையாக ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்தால் இந்தியா தனது வளர்ச்சி பாதையில் மிகப்பெரி மாற்றத்தை சந்தித்கும் என முக்கிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நுகர்வோர்

நுகர்வோர்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு பொருளின் உற்பத்தி செலவுகளைப் பொருத்தே அதன் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் சந்தைப்படுத்தும், விற்பனை வரி என அடுத்தடுத்து விதிக்கப்படும் வரிகள் களையப்பட்டுக் குறைவான விலையில் உற்பத்தி பொருட்கள் நுகர்வோர் கையில் கிடைக்கும்.

இப்படி இருக்கும் போது நுகர்வோர் சந்தையில் முக்கியப் பொருட்களாக இருக்கும் பெட்ரோலியம், மின்சாரம் வந்தால் இந்தியாவில் வளர்ச்சி பஞ்சம் இருக்காது.

 

நாடுகளும்.. வரி விதிப்பும்..

நாடுகளும்.. வரி விதிப்பும்..

பொதுவாக வரி விதிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மையமாக வைத்து நிர்ணயம் செய்யப்படும். வளரும் நாடுகளில் மறைமுக வரி அதிகளவில் இருக்கும் வல்லரசு மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் மறைமுக வரி விதிப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

உதாரணமாக ஆஸ்திரேலியாவில் மொத்த வரி வசூல் தொகையில் 13 சதவீதம் மட்டுமே மறைமுக வரி, இந்தியாவில் இதன் அளவு 34 சதவீதம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt trying to bring Petroleum products under GST

Govt trying to bring Petroleum products under GST regime. Its really biggest boost to consumer industry. - Tamil GoodReturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X