15 பொதுத்துறை நிறுவனங்களை மூடுகிறது மத்திய அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அரசு லாபத்தில் இயங்காத 15 பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூட முடிவு செய்துள்ளதது. அதில் 5 நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதலும் அளித்துள்ளது.

 
15 பொதுத்துறை நிறுவனங்களை மூடுகிறது மத்திய அரசு..!

அது மட்டும் இல்லாமல் மேலும் அரை டஜன் நிறுவனங்களை மூடும் பட்டியலை நிதி ஆயோக் தயாரித்து உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்குப் பல அமைச்சர்கள் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர். பெட்ரோலிய துறை அமைச்சகம் எச்பிசிஎல் பையோ ஃபீயூல் நிறுவனத்தை மூட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஜவுளித் துறை அமைச்சகம் பிரிட்டிஸ் இந்தியா கார்ப்ரேஷன் மற்றும் எலிஜின் மில் போன்றவற்றை மூட மத்திய அரசிடம் சம்மதித்துள்ளது.

மூன்று பார்மா நிறுவனங்கள் மூடப்படலாம் என்றும் ஆனால் ஹிந்துஸ்தான ஆண்டி பயோடிக்ஸ் நிறுவனம் மூட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

எச்எம்டி நிறுவனத்தின் சில பிரிவுகள்,
மத்திய உள்நாட்டு நீர் போக்குவரத்துக் கழகம் போன்ற நட்டத்தில் இயக்கி வரும் நிறுவனங்களையும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிக்கையைப் பிரதமரின் முதன்மைச் செயலர் நிர்பெந்த்ரா மிஷ்ராவிடம் நிதி ஆயோக் ஒப்படைத்து உள்ளது.

இதற்கான ஆய்வில் 74 நட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி அறிக்கையை நிதி ஆயோக் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளது. இதில் சிலவற்றை மட்டும் மொத்தமாக மத்திய அரசு மூடும் என்றும், பிற நிறுவனங்களில் சில பங்குகளைத் தனியாருக்கு அளித்து இயக்கும் முயற்சியில் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government to shut down 15 loss making PSUs

Government to shut down 15 loss making PSUs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X