காக்னிசன்ட் நிறுவன ஊழல் விசாரணை: நிறுவன தலைவர் அதிரடி மாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப் நிறுவனம் அமெரிக்க அயல்நாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் மற்றும் மற்றும் விதிகளின் கீழ் விதி மீறலுக்கான சாத்திய கூறுகளைப் பற்று உள்நிலை விசாரணை மேற்கொண்டு வருவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

 

தலைவர் ராஜினாமா

தலைவர் ராஜினாமா

காக்னிசன்ட் நிறுவன தலைவர் கோர்டன் கோபர்ன் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவருக்குப் பதிலாக ராஜிவ் மேத்தா ஐடி சேவைக்கான தலைவர் பொறுப்பை ஏற்பார் என்றும் கூறியுள்ளது.

இந்திய சேவைகளுக்கான பணப் பரிவர்த்தனை ஊழல்

இந்திய சேவைகளுக்கான பணப் பரிவர்த்தனை ஊழல்

கோர்டன் கோபர்னின் ராஜினாமாவிற்கும் இந்தியாவில் இயங்கி வருகின்ற காக்னிசன்ட் நிறுவன பண பரிவர்த்தனையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழலுக்கும் ஏதேனும் சம்மதம் உள்ளதா என்று விசாரிக்க முயன்ற போது நிறுவனம் இது குறித்த தகவலை அளிக்க மறுத்துவிட்டது.

பங்கு வர்த்தகம்

பங்கு வர்த்தகம்

அதே நேரத்தில் காக்னிசன்ட் நிறுவனத்தின் பங்கின் விலை அமெரிக்காவில் வரலாறு காணாத விதமாக 16 சதவீதம் சரிந்து 46.71 டாலருக்கு நேற்று விற்பனையாகி உள்ளது. இது இரண்டு ஆண்டுகளாக இல்லாத மிகக் குறைந்த விலை என்று நிறுவனம் கூறியுள்ளது.

காக்னிசன்ட்
 

காக்னிசன்ட்

அமெரிக்காவில் உள்ள டீநெக், நியு ஜெர்ஸியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களில் நான்கில் மூன்று சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காக்னிசன்ட் நிறுவனம் இந்த விசாரணை குறித்து அமெரிக்கா ஜஸ்ட்டிஸ் மற்றும் அமெரிக்கா பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க:வீட்டில் வீணாகும் உணவைக் கட்டுப்படுத்தி 30 வருடத்தில் 20.5 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க..!

அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் சீஇஓ யார் தெரியுமா..? நம்ம கறிச்சோறும், தயிர்சோறும் தான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant corruption Probe; Company Invesigates improper payments in India

Cognizant Conducting Corruption Probe; Company Investigates improper payments in India President Replaced
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X