ஜிஎஸ்டி வரியால் ரூ.50,000 கூடுதல் வருமானம்.. மாநில அரசின் இழப்பை முழுமையாக ஏற்க மத்திய அரசு ஒப்புதல்

ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஏற்கும் என 3 நாள் ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துவிட்டதா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடும் செய்யும் வகையில் அடுத்த 5 வருடத்திற்கு மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரியின் வருவாய் அளவு 14 சதவீதம் உயரும், இதனைத் தாண்டி ஏற்படும் வருவாய் இழப்புகளை மத்திய அரசு முழுமையாக அளிக்கும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

ஜிஎஸ்டி விரி நிர்ணயம் மற்றும் மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய இழப்பீடு குறித்து ஆலோசனை செய்ய மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் முன்னிலையில் 3 நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை துவங்கி நடந்து வருகிறது.

4 அடுக்கு ஜிஎஸ்டி விரி விதிப்பு

4 அடுக்கு ஜிஎஸ்டி விரி விதிப்பு

இக்கூட்டத்தில் 4 அடுக்கு ஜிஎஸ்டி விரி விதிப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் வருவாய்ப் பாதிக்கப்படும் 11 மாநிலங்களுக்கான இழப்பீடு தொகை 19,000 கோடி ரூபாய் இதனைச் சரியான இழப்பீடு திட்டத்தின் வாயிலாக மத்திய அரசு தீர்க்கும் என அருண் ஜேட்லி தெரிவித்தார். இந்தக் கணக்கீடு அனைத்தும் 2015-16ஆம் ஆண்டு வரித் தரவுகள் வைத்துத் தயாரிக்கப்பட்டவை.

 

மாநில அரசு கோரிக்கை

மாநில அரசு கோரிக்கை

ஜிஎஸ்டி விதிப்பின் மூலம் தங்களது வருவாய் அளவுகள் 4 சதவீதம் உயர வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், 2 சதவீத உயர்வை மட்டுமே அளிக்க முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இதுகுறித்த விவாதம் செய்யப்பட உள்ளது.

மதிப்பு கூட்டு வரி

மதிப்பு கூட்டு வரி

மேலும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி எனப்படும் VAT வரியின் மூலம் 14 சதவீத வரி வருவாய் உயர்வை அடையலாம் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக 5 வழிமுறைகளை விவரித்தார்.

ஆய்வு மற்றும் கணிப்புகள்

ஆய்வு மற்றும் கணிப்புகள்

வருவாய் கணிப்புகள், வரி விதிப்புகள் அனைத்தும் கடந்த 5 வருடத்தில் அதிக வருவாய் பெற 3 வருடம் மற்றும் நிலையான வருவாய் பெற்ற 3 வருடங்களின் அடிப்படையில் ஜிஎஸ்டி விரி விதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

2 நிலையான வரி விதிப்பு

2 நிலையான வரி விதிப்பு

செவ்வாய்க் கிழமை நடந்த கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் நிதியமைச்சகம் இணைந்து உருவாக்கப்பட்ட வரி விதிப்புத் திட்டத்தில் 4 அடுக்கு வரி விதிப்பை அறிவித்துள்ளது.

இதில் 2 நிலையான வரி விதிப்பாக (standard rates) 12% மற்றும் 18% வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

உணவு மற்றும் ஆடம்பர பொருட்கள்

உணவு மற்றும் ஆடம்பர பொருட்கள்

உணவுப் பொருட்கள் மற்றும் இதர அன்றான தேவை பொருட்கள் மீது 6 சதவீத வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. இதுமட்டும் அல்லாமல் அடிக்கடி நாட்டில் நிலவும் அதிக விலை நிலைகள் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.

ஆடம்பர பொருட்கள்

ஆடம்பர பொருட்கள்

வொயிட் கூட்ஸ் எனப்படும் எலக்ட்ரிக் பொருட்கள் கீழ் பிரிட்ஜ், வாசிங் மெஷின், மொபைல் போன் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.

ஆடி, பென்ஸ், ரோல்ஸ்ராய்ஸ் கார்

ஆடி, பென்ஸ், ரோல்ஸ்ராய்ஸ் கார்

மேலும் தங்கம், தங்க நகைகள், வெள்ளி பொருட்களுக்கு 4 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. ஆடி, பென்ஸ், ரோல்ஸ்ராய்ஸ் கார் போன்ற அனைத்து உயர் அடம்பர் பொருட்கள், புகையிலை, சிகரெட், பான் மசாலா, மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் தற்போது விதிக்கப்படும் அதே வரியை அறிவித்துள்ளது மத்திய அரசு.

 ரூ.50,000 கோடி கூடுதல் வருமானம்

ரூ.50,000 கோடி கூடுதல் வருமானம்

இப்புதிய வரி விதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு 50,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதனைக் கொண்டு மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4-tier tax structure on GST: 50,000 crore Additional income for center

4-tier tax structure on GST: 50,000 crore Additional income for center - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X