40 பில்லியன் டாலர் சாம்ராஜியம்..!

லோரியல் (L'Oréal) உலகின் பல நாடுகளில் தனது கிளைகளை ஆரம்பித்து உலக சாதன பொருட்கள் வர்த்தகத்தில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லோரியல் (L'Oréal) என்ற நிறுவனம் உலகின் மிகச்சிறந்த அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம். முகம், தோல் மற்றும் முடிகளை பாதுகாக்கும் தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இந்நிறுவன்ம் தற்போது உலகின் பல நாடுகளில் தனது கிளைகளை ஆரம்பித்து உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

 

20ஆம் நூற்றாண்டு

20ஆம் நூற்றாண்டு

முதன்முதலாக 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டில் இந்நிறுவனம் தலைமுடியை கருப்பாக்கும் டை'ஐ தயாரித்தது. 1909ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள Eugène Schueller என்பவர் முதன்முதலாக தலைமுடியை கருப்பாக்கும் தயாரிப்பை உருவாக்கினார்.

புது பெயர்

புது பெயர்

இரவுபகலாக இந்த தயாரிப்புக்காக தனது நேரத்தை செலவு செய்த Eugène Schueller, அந்த தயாரிப்பை தானே அழகு நிலையங்களிலும், சலூன்களுக்கும் சென்று மார்க்கெட்டிங் செய்தார்.

இரண்டே வருடத்தில் இந்நிறுவனம் நம்பகத்தன்மையை கொண்டதால் SFTIC என்ற பெயரில் மிகப்பெரிய நிறுவனமாக தொடங்கப்பட்டது. பின்னரே இந்நிறுவனம் லோரியல் என்ற பெயர் மாற்றப்பட்டது.

 

10 வருடம் வளர்ச்சி
 

10 வருடம் வளர்ச்சி

1909ல் ஆரம்பித்த இந்நிறுவனம் சுமார் பத்தே வருடங்களில் அதாவது 1920ஆம் ஆண்டில் உலகின் இருபது நாடுகளில் காலடி எடுத்து வைத்தது. இத்தாலி, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஹாலந்து ஆகிய நாடுகளும் இதில் அடங்கும்.

13 ஊழியர்கள்

13 ஊழியர்கள்

ஆரம்பத்தில் 3 வேதியியல் நிபுணர்கள் மற்றும் 10 சேல்ஸ் அதிகாரிகளை மட்டுமே கொண்டு ஆரம்பித்த இந்நிறுவனம் குறுகிய காலத்தில் நம்ப முடியாத அளவில் முன்னேற்றம் கண்டது

புதிய பொருட்கள்

புதிய பொருட்கள்

தலைமுடியை கருப்பாக்கும் வியாபாரம் வெற்றிகரமாகியதை அடுத்து மேலும் அழகு சாதன பொருட்களின் மீது இந்நிறுவனம் கவனத்தை செலுத்தியது. அழகு சாதன பொருட்களின் தயாரிப்புகளுக்கான ஆர்&டி என்ற நிறுவனத்தை தொடங்கி நவீன அழகு சாதனை பொருட்களை தயாரித்தது.

ஹேர் ஸ்பிரே, சன் ஸ்க்ரீன் க்ரீம், லோஷன், முகத்திற்கு போடும் லோஷன் ஆகிய தயாரிப்புகள் இந்நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புகள் ஆகும்.

 

தலைவரின் மரணம்

தலைவரின் மரணம்

மேலும் கடந்த 1957 ஆம் ஆண்டு Schueller அவர்களின் மரணத்திற்கு பின்னர் அவருடைய மகள் Liliane Bettencourt இந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று அடுத்த லெவலுக்கு நிறுவனத்தை கொண்டு சென்றார்.

உலகளவிலான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போட்டியாக அவர் தனது நிறுவனத்தை வெற்றிகரமாக கொண்டு சென்றார்.

 

முன் அனுபவம்

முன் அனுபவம்

டீன் ஏஜ் வயதில் இருந்தே தனது தந்தைக்கு உதவி செய்து வந்த Liliane Bettencourt, முழு பொறுப்பையும் கையில் எடுத்ததும் நிறுவனத்தின் வளர்ச்சி ஆச்சரியப்படும் வகையில் இருந்தது.

புதிய சந்தை

புதிய சந்தை

ஜப்பான் உள்பட பல முன்னணி நாடுகளில் கிளைகளை தொடங்கி உலகின் பல பெண்கள் தனது தயாரிப்புகளை உபயோகப்படுத்துவம் வகையில் அவரது நிர்வாகம் மிகச் சிறப்பாக இருந்தது.

1970ஆம் ஆண்டில் ஜப்பானில் தனது கிளையை தொடங்கிய இந்நிறுவனம் ஜப்பான் மக்களின் மாபெரும் ஆதரவை பெற்றது.

 

ஊழியர்கள்

ஊழியர்கள்

கடந்த 2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்த நிறுவனத்தில் 78,000 ஊழியர்கள் பணி செய்கின்றனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் இந்நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு தொழிற்சாலைகளை தொடங்கி உற்பத்தியை ஆரம்பித்தது. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இன்று வரை உள்ளார்.

இந்தோனேஷியா

இந்தோனேஷியா

இந்தியாவை அடுத்து 2012ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இந்நிறுவனம் தனது கிளையை தொடங்கியது.

100 மில்லியன் அமெரிக்க டாலரில் இந்தோனேஷியால் முதலீடு செய்த இந்நிறுவனம் இங்கு தயாராகும் அழகு சாதன பொருட்களின் தயாரிப்புகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்து வருகிறது.

 

38 பில்லியன் டாலர் சொத்து

38 பில்லியன் டாலர் சொத்து

கடந்த 2013ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற பெருமையை Liliane Bettencourt பெற்றார். இவருடைய சொத்து மதிப்பு $38 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

$40 Billion LOreal Family

$40 Billion L’Oréal Family - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X