பயணிகளின் புகர்களால் உணவு பொருட்கள் விலை பட்டியலை அதிகாரப்பூர்வமாக டிவிட் செய்தது இந்தியன் ரயில்வேஸ்

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்திய ரயில்வேஸ் நிர்வாகம் ரயில் பயணங்களின் போது விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை பட்டியலை அதிகாரப்பூர்வமாகத் தனது டிவிட்டர் பங்கத்தில் வெளியிட்டது.

பயணிகள் கோபம்

பயணிகள் உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ரயில்களில் டி மற்றும் காபி விலை அதிகமாக உள்ளன என்று பயணிகள் தொடர்ந்து ரயில்வே அமைச்சகத்திற்கு அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேட்டரிங் விதிகள்

ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின் படி பயணிகள் உணவுகளின் தரம் மற்றும் கேட்டரிங் சேவை வழங்கும் ஐஆர்சிடிசி வெண்டார்கள் ஊழியர்கள் பற்றியும் தொடர் புகார்கள் அளித்து வந்துள்ளன.

ஒப்பந்தத்தின் படி இனி வெண்டார்கள் ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ள விலை பட்டியலும் படியே பொருட்களை விற்க வேண்டும்.

 

ரயில்வேயின் டிவிட்

ஐஆர்சிடிசி கேட்டரிங் விலைப் பட்டியை இங்கே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்றும், புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் என்றும் அந்த டிவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

rn

புதிய விதிகள்

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பிப்ரவரி மாதம் புதிய கேட்டரிங் விதிகள் கொண்டு வரப்படும் என்றும், உணவு சமைப்பது தனியாகவும், விநியோகம் செய்ய தனியாகவும் குழு நியமிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி உணவு ரயில்களில் தயாரிப்பது நிறுத்தப்பட்டு ரயில் நிலைகளில் இருந்தும், புகழ்பெற்ற தனியார் உணவகங்களில் இருந்தும் பெறப்பட்டு ஐஆர்சிடிசி விநியோகம் மட்டும் செய்யும் என்றும் சுரேஷ் பிரபு கூறினார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian Railways tweets food price list after complaints

Indian Railways tweets food price list after complaints
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns