209 கோடி ரூபாய் மோசடி.. 4 முன்னாள் வங்கி அதிகாரிகள் கைது.. சிபிஐ விசாரணை..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

மத்திய புலனாய்வுத் துறை சிண்டிகேட் வங்கியின் 4 முன்னால் வங்கி ஊழியர்களையும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வணிகர் மற்றும் ஆறு நபர்களை 209 கோடி ரூபாய் மோசடி, கிரிமினல், சதி மற்றும் இதனால் ஏற்பட்ட இழப்பு போன்றவற்றின் கீழ் கைது செய்துள்ளது.

சனிக்கிழமை மத்திய புலனாய்வுத் துறை 4 இடங்களில் நடத்திய இந்த ஆய்வில் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோசடி ஆவணங்களைச் சமர்ப்பித்து கடன்

வீட்டுக் கடன் மற்றும் கடன் வசதிகள் மூலமாக சிண்டிகேட் வங்கியின் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீர் கிளையில் இருந்து மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பித்து கடன் பெற்றுள்ளனர். இந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு வங்கிக் கடனும் அளித்துள்ளது, அந்தக் கடனை சில நிறுவனங்களுக்கும் மோசடியாக அளித்துள்ளதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மோசடி வழக்கில் கைதானவர்கள்

மோசடி வழக்கில் சிக்கியவர்களில் உதவிப் பொது மேலாளர்கள் ஒரு கே திவாரி, ஆதர்ஷ் மன்சண்ந்தா, முன்னாள் தலைமை நிர்வாகி தேஷ்ராஜ் மீனா மற்றும் சந்தோஷ் குப்தா ஆகியோர் உள்ளதாகவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்கி அதிகாரிகள் மட்டும் இல்லாமல் பட்டய கணக்காளர் பாரத் பாம்ப், அவரது சகோதரர் அண்ணி பவித்திரா கோதாரி, மற்றும் பாம்பின் ஊழியர்கள் வினீத் ஜெயின் மற்றும் பியுஷ் ஜெயின் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜெய்ப்பூர் மற்றும் சங்க்கர் லால் கந்தல்வாலில் உள்ள வார்ல்ட் டேரேட் பார்க்கினை கட்டிய கட்டட வல்லுநர் அனூப் பாரதியவும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

சோதனை

இதற்காக சிபிஐ ஜெய்ப்பூரில் உள்ள பாரதிய வளாகம் மற்றும் கோதாரி குடியிருப்பு மற்றும் அஜ்மீரில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தியது.

திட்டம் தீட்டிய பாம்ப்

இந்த ஆய்வின் போது பாம்ப் திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. பாம்ப் மீது ஏற்கனவே 2016 மார்ச் மாதம் ஒரு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Four ex bank officials booked for Rs 209 crore graft

Four ex bank officials booked for Rs 209 crore graft
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns