சம்பளமே சரியாக கொடுக்காத நிறுவனங்கள் மத்தியில் விடுமுறைக்கு காசு கொடுத்தால் எப்படி இருக்கும்..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் எப்போதும் வேலை மட்டும் தான், விடுமுறையே இல்லை என்றால் என்ன செய்வது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் விதிகள் அப்படி உள்ளது.

பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை எங்கேயாவது சுற்றுலா அழைத்துச் சென்று மகிழ்விக்கும். நாம் பணி புரியும் நிறுவனங்களில் சம்பளத்துடன் விடுமுறை அல்லது சில நாட்கள் மட்டும் விடுமுறை அளிப்பார்கள்.

ஆனால் நாம் இங்குப் பார்க்க இருக்கும் நிறுவனங்கள் சற்று வித்தியாசமானவை இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு விடுமுறையில் செல்லும் போது செலவுக்குப் பணமும் அளிக்கின்றன, சொன்னால் நம்ப முடிகின்றதா.. வாருங்கள் பார்ப்போம்.

பேஸ்கேம்ப் (Basecamp)

கடந்த 7 வருடங்களாக வெப் டெவலப்மெண்ட் நிறுவனமான பேஸ்கேம்ப் நிறுவனம் தங்களது ஊழியர்களின் விடுமுறைக்குப் பணம் அளிக்கின்றது.

ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 16 விதமான சுற்றுலா பேக்கேஜ்களை வழங்குகின்றது. இது குறித்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேசன் ஃபிரைடு கூறும் போது 4,000 முதல் 5,000 டாலர்கள் வரையிலான மதிப்புடைய இந்த டிரப்புகளுக்கு ஒற்றை ஆள் அல்லது தம்பதியினராகவும் செல்லலாம்.

 

ஸ்டீல் ஹவூஸ் ( SteelHouse)

மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நிறுவனமான ஸ்டீல் ஹவுஸ் 2011-ம் ஆண்டு முதல் தங்களது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 2,000 டாலர்களை விடுமுறை செலவுக்காக அளிக்கின்றது. இது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் டவுக்லாஸ் எங்களது வேலைக் கலாச்சாரம் மிகவும் எளிமையானது, இது நம்பிக்கை குறிக்கோளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும்.

நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு விடுமுறை சுற்றுலா பேக்கேஜினை திங்கட்கிழமை வாங்குகிறார் என்றால் அதனைச் செவ்வாய்க்கிழமையே அவர்கள் நிறுவனத்திடம் சமர்ப்பித்து அதற்கான தொகையாக 2,000 டாலர்கள் வரை பெற்றுக்கொள்ளலாம். ஒரு வேலை அவர்களால் செலவு செய்து சுற்றுலா திட்டத்தை வாங்க முடியவில்லை என்றால் நிறுவனத்தின் கிரெடிட் கார்டு பயன்படுத்தியும் வாங்கலாம்.

 

பேம்பூ எச்ஆர் (BambooHR)

மனித வளங்கள் மென்பொருள் நிறுவனமான பேம்பூ எச்ஆர்-ல் ஆறு மாதம் பணியாற்றிய பிறகு உலகம் முழுவதும் எங்கு வேண்டும் என்றாலும் விடுமுறையில் சுற்றுலா செல்ல 2,000 டாலர்களைப் பெறலாம்.

ஜி அட்வென்ச்சர்ஸ் (G Adventures)

சுற்றுலா நிறுவனமான ஜி அட்வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு வருடம் பணி புரிந்த பிறகு ஊழியர்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படும். இவர்கள் நிறுவனம் பட்டியலிட்டுள்ள உல சுற்றுலா பட்டியலில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்து 17 பகல் மற்றும் 16 இரவு பயணத்திற்கு 3,000 டாலர்களும், விமானக் கட்டணமாக 750 ரூபாயும் பெறலாம். அது மட்டும் இல்லாமல் சின்னதாகக் குடும்பச் சுற்றுலா ஆஃபர்களும் இந்த நிறுவனம் வழங்கும்.

ஃபுல் காண்டக்ட் (FullContact)

உள்ளடக்க மேலாண்மை நிறுவனமான ஃபுல் காண்டக்ட்
2012-ம் ஆண்டு முதல் 7,500 டாலர்கள் செலவில் தங்களது நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியர்களுக்கு விடுமுறை படியாக அளிக்கின்றது. இதனைப் பயன்படுத்தி 15 நாட்கள் சம்பளத்துடன் 7,500 டாலர்களும் பெற்றுச் சுற்றுலா சென்று வரலாம்.

மோஜ் (Moz)

மார்க்கெடிங் அனலிட்டிக்ஸ் நிறுவனமான மோஜ் 21 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறையை அளிக்கின்றது. சுற்றுலா படியாக 3,000 டாலர்களையும் இந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அளிக்கின்றது.

எவர்நோட் (Evernote)

டாஸ்க் மேனேஜ்மெண்ட் நிறுவனமான எவர்நோட்டில் ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறையுடன் 1,000 ரூபாய் போனஸ் அளிக்கப்படும்.

திங்க் பேராலேக்ஸ் (thinkParallax)

கிரியேட்டிவ் ஏஜென்சி நிறுவனமான திங்க் பேராலேக்ஸ் கடந்த இரண்டு வருடங்களாக ஊழியர்களுக்குச் சுற்றுலா செல்வதற்காக 1,500 டாலர்கள் அளிக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் 2016-ம் ஆண்டு மெக்சிகோ நகரத்திற்குச் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.

அஃபர் மீடியா (AFAR Media)

முழுநேர ஊழியர்கள் பயண நிறுவனமான அஃபர் மீடியா தங்களது ஊழியர்களுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை உடன் 2,000 டாலர் ஊக்கத்தொகையும் அளிக்கின்றது.

ஏர்பன்ப் (Airbnb)

2016-ம் ஆண்டுப் பணி புரிவதற்காகச் சிறந்த நிறுவனமாகத் தேர்வு செய்யப்பட்ட இந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 2,000 டாலர் தொகையை ஆண்டு ஊக்கத்தொகையாக அளிக்கின்றது.

தி மோட்லி ஃபூல் (The Motley Fool)

நிதி சேவை அளிக்கும் தி மோட்லி ஃபூல் நிறுவனம் தங்களது ஊழியர்களில் இருந்து மாதம் ஒருவரைக் குழுக்கள் முறையில் தேர்வு செய்து இரண்டு வாரம் விடுமுறை மற்றும் செலவுக்கு 1,500 டாலர்களையும் அளிக்கின்றது. நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு இன்னும் பல சலுகைகளும் உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

11 companies that pay their employees to go on vacation

11 companies that pay their employees to go on vacation
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns