வெறும் ரூ.2,500இல் இனி எல்லோரும் விமானத்தில் பறக்கலாம்.. புதிய திட்டத்தை துவக்கிவைக்கும் 'மோடி'..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பிரதமர் மோடி இன்று வியாழக்கிழமை சிம்லாவில் இருந்து உதான் எனப்படும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கின்றார், இதனால் உள்நாடு விமானப் போக்குவரத்து டிக்கெட்களின் விலை குறையும்.

இந்தத் திட்டத்தின் முதல் விமானச் சேவை சிம்லாவில் இருந்து டெல்லி வரை செல்லும் விமானம் மற்றும் கடப்பாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம், நந்தீத்-ஹைதராபாத் வழித்தடத்திலும் பிரதமர் இந்தச் சேவையை முதன் முதலில் கொடி அசைத்துத் துவக்கி வைப்பார் என்று பிரதமர் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.

உதான்

உலகளவில் முதன் முதலாக உள்நாடு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்தத் திட்டம் இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் டிவிட் செய்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணங்களில் முக்கியமான அனைத்து நகரங்களையும் இணைக்கும் விதமாக இந்த உதான் சேவை இருக்க வேண்டும் என்பதற்காக 2016 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உதான் திட்டம் முதன் முதலில் 2016 ஜூன் 15 -ம் தேதி தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கை (NCAP) மூலம் துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

என்ன சிறப்பு

அதில் 1 மணி நேர விமானப் பயணத்திற்கு அதாவது கிட்டத்தட்ட 500 கிமி வரை பயணத்திற்கும் , 30 நிமிட ஹெலிகாப்டர் பயணத்திற்கும் 2,500 ரூபாய் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

5 விமான நிறுவனங்கள்

உதான் திட்டத்தின் கீழ் 5 விமான நிறுவனங்கள் இணைந்து 128 வழித்தடங்களில் 70 விமான நிலையங்களுக்குத் தங்களது சேவையை அளிக்க உள்ளன.

ஏர் இந்தியா துணை நிறுவன விமானச் சேவைகள், ஸ்பைஸ் ஜெட், ஏர் டெக்கன், ஏர் ஒதிசா மற்றும் டர்போ மெகா ஆகிய நிறுவனங்கள் உதான் திட்டத்தின் கீழ் சேவை அளிக்க உள்ளன. அதற்காக இந்த நிறுவனங்கள் 19 முதல் 78 நபர்கள் மட்டுமே அமரக்கூடிய விமானங்களையும் பயன்படுத்த இருக்கின்றன.

 

பயனடையும் மாநிலங்கள்

இந்த விமானச் சேவை நிறுவனங்கள் அனைத்தும் 20 மாநிலங்களில் விமான நிலையங்கள் அதாவது தமிழ் நாடு, பஞ்சாப், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேஷ், குஜராத், ஹிமாச்சல் பிரதேஷ், கர்நாடகா, புதுச்சேரி மட்டும் இல்லாமல் பிற யூனியன் பிரதேசங்களுக்கும் இந்தச் சேவையை அளிக்கும் என்று கூறுகின்றனர்.

பிற சிறு நகரங்கள்

உதான் திட்டத்தின் கீழ் நெய்வேலி, பட்டிசா, சிம்லா, பிலாஸ்பூர், கூச் பிஹார், நாந்தேட் மற்றும் கடப்பா ஆகிய விமான நிலையங்களுக்கும் விமானச் சேவை அளிக்கப்படும்.

சீட்டுகள் ஒதுக்கீடு

இத்திட்டத்திற்காக விமான நிறுவனங்கள் 2,500 ரூபாய் விலை டிக்கெட்களுக்கு 50 சதவீத டிக்கெட்களை ஒதுக்க முடிவு செய்துள்ளன. ஏர்லைன்ஸ் கூட்டுச் சேவைகள் 15 வழித்தடங்களிலும், ஸ்மப்ஸ் ஜெட் 11 வழித்தடங்களிலும், டர்போ மெகா ஏர்வேஸ் 18 வழித்தடங்களிலும், ஏர் டெக்கன் 34 வழித்தடங்களிலும், ஏர் ஒதிசா 50 வழித்தடங்களிலும் தங்களது விமானச் சேவையை அளிக்க உள்ளன.

விமான நிலைய கட்டணம் சலுகை

உதான் திட்டத்தில் விமானச் சேவை அளிக்கும் விமானங்களுக்கு விமான நிலைய கட்டணம் மூன்று வருடத்திற்கு இல்லை என்றும் அது மட்டும் இல்லாமல் இன்னும் பல சலுகைகளை அளிக்க உள்ளதாகவும் இந்திய KPMG ரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் அம்பர் துபே தெரிவித்தார்.

மோடியின் சிம்லா பயணம்

பிரதமர் மோடி அவர்கள் சிம்லா செல்லுவதும் வரலாற்றில் இடம்பிடிக்கப் போகின்றது. பிரதமராக மோடி அவர்கள் பதவி ஏற்ற பிறகு முதன் முறையாகச் சிம்லா செல்லும் பிரதமர் மோடி அவர்கள் செல்கிறார்.

கிங்பிஷர் 'ஸ்ட்ராம்'

கிங்பிஷர் பீர் நிறுவனத்தின் புதிய அறிமுகம் 'ஸ்ட்ராம்'.. தீயாய் வேலை செய்யும் மல்லையா..!

#kingfisherStrom #Beer #NewArrival

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Narendra Modi to flag off first Udan flight today: All you need to know about the scheme

Narendra Modi to flag off first Udan flight today: All you need to know about the scheme
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns