பெட்ரோல் பங்க்-இல் நீங்கள் இப்படியும் ஏமாற்றப்படலாம்.. உஷாரா இருங்க..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை அளிக்கப்படவும், தங்களின் கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும் எனவும் இந்தியா முழுவதும் இருக்கும் அதன் உரிமையாளர்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவது குறித்து மக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் லக்னோ நகரில் இருக்கும் பெட்ரோல் பங்க்-களில் சிறப்புப் படை போலீஸார் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.

மோசடிகள்

இந்தச் சோதனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் மோசடி செய்கிறார்கள் என அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்கள்

பொதுவாக மக்கள் அனைவரும் தங்களது வாகனங்களுக்குப் பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது லீட்டர் அல்லது ரூபாய் மதிப்பீட்டில் எரிபொருளை நிரப்புவார்கள்.

இவ்வாறு வாகனத்தில் எரிபொருளை நிரப்பும்போதும் அனைவரும் இந்த இயந்திரத்தில் சரியான ரூபாய்க்கும், அளவிற்கும் பெட்ரோல் நிரப்பப்படுகிறாதா என்பதை உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

ஆனால் லக்னோ பெட்ரோல் பங்க்-களில் சரியான அளவை இயந்திரத்தில் காட்டப்பட்டாலும் குறைவான அளவில் மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படுகிறது. இதற்காக எலக்ட்ரானிக் சிப் வைக்கப்பட்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

 

எலக்ட்ரானிக் சிப்

இந்த எலக்ட்ரானிக் சிப் பொருத்துவதன் மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஒவ்வொரு முறையும் கிட்டதட்ட 5 முதல் 10 சதவீதம் வரையிலான எரிபொருளைத் திருடி வருவது இந்தச் சோதனையின் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.

ரிமோட் கன்ட்ரோல்

இந்தச் சிப் பெட்ரோலை வெளியேற்றும் ரிமோட் கன்ட்ரோல் வயருடன் இணைக்கப்படும். இதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோலுக்கு வெறும் 940ml பெர்டோல் தான் வெளியேறும்.

3000 ரூபாய் மட்டுமே

மேலும் இந்தச் சிப் விலை வெறும் 3000 மட்டுமே என்பது பங்க் உரிமையாளர்களை விசாரிக்கும் போது தகவல் கிடைத்துள்ளது.

விற்பனை

மேலும் சோதனை செய்த சிறப்புப் படை போலீஸார் இந்தச் சிப் உத்தரப் பிரதேசம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கலாம் எனச் சந்தேகப்படுகின்றனர்.

மக்கள் நலன்

இத்தகைய நிலையில் மக்கள் தங்களது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளத் தண்ணீர் பாட்டில் ஒரு லீட்டர் பெட்ரோலை வாங்கி அளவைச் சரிபார்த்துக்கொள்ளவும்.

சில பெட்ரோல் பங்க்-களில் பாட்டிலில் பெட்ரோல் அளிக்கமாட்டோம் எனக் கூறினால் விபரத்தைக் கூறி உறுதி செய்துகொள்ளுங்கள். அளிக்க மறுத்தால் உடனடியாகப் புகார் அளிக்கவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

petrol pump might be cheating you

petrol pump might be cheating you - Tamil Goodreturns
Story first published: Sunday, April 30, 2017, 14:51 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns