கேஷ் ஆன் டெலிவரியில் ரயில் டிக்கெட்.. ஐஆர்சிடிசி சேவை துவங்கியது..!

கேஷ் ஆன் டெலிவரியில் ரயில் டிக்கெட்.. ஐஆர்சிடிசி சேவை துவங்கியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய நவீனமயமான உலகில் அனைத்துப் பொருட்களும் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் நிலையில், ரயில்வே துறையும் தனது தேவையை அடுத்தக் கட்டத்திக்குக் கொண்டு சென்றுள்ளது.

 

இந்நிலையில் ஏற்கனவே இந்திய ரயில்வே துறை அறிவித்ததைப் போல் ரயில் டிக்கெட்-களைக் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பயணிகளுக்கு அளிக்கும் சேவை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

ஐஆர்சிடிசி அமைப்பு

ஐஆர்சிடிசி அமைப்பு

இந்திய ரயில்வே துறையின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் திட்டமாக ஐஆர்சிடிசி அமைப்பு ஆன்லைனில் புக் செய்யப்பட்ட டிக்கெட்களைப் பணிகளுக்குத் தங்களது வீட்டிகே கொண்டு வந்து சேர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கேஷ் ஆன் டெலிவரி

கேஷ் ஆன் டெலிவரி

பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஈகாமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவதைப் போல் தற்போது IRCTC தளத்தில் டிக்கெட்களைப் புக் செய்துவிட்டு டிக்கெட் கையில் கிடைத்த பின்பு பணத்தைச் செலுத்தலாம்.

இதன் இடைத்தரகர்கள் இனி ரயில் டிக்கெட் முன்பதிவில் இருந்து வெளியேறுவார்கள்.

 

மக்கள் நிம்மதி
 

மக்கள் நிம்மதி

இதன் மூலம் இனி மக்கள் ரயில்வே நிலையத்தின் ரிசர்வேஷன் வரிசையில் நின்று டிக்கெட் முன் பதிவு செய்ய அவசியம் இருக்காது.

இத்தகைய சேவையின் மூலம் புதிய பயணிகளை ஈர்க்கவும், மக்களைத் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்யும் அளவிற்கு மனநிலையை உருவாக்க முடியும் என இந்திய ரயில்வே துறை நம்புகிறது.

 

பதிவு

பதிவு

IRCTC தளத்தின் கேஷ் ஆன் டெலிவரி சேவையைப் பெற வேண்டும் என்றால் தளத்தின் பயனாளர் ஒரு முறை பதிவை (one-time registration) செய்ய வேண்டும் . இதனை ஆதார் அல்லது பான் கார்டு கொண்டு செய்யலாம் என IRCTC அதிகாரி தெரிவித்துள்ளார்.

கட்டணம்

கட்டணம்

5000 ரூபாய் மதிப்பிலான ரயில் டிக்கெட்களுக்கு 90 ரூபாய் வரையும், 5000 ரூபாய்க்கு அதிக மதிப்புடை டிக்கெட்களுக்கு 120 ரூபாய் வரையும் சேவை கட்டணங்கள் வசூல் செய்யப்படும். மேலும் இதற்கு விற்பனை வரியும் உண்டு.

டிக்கெட் ரத்து

டிக்கெட் ரத்து

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் பயணிகள் ரத்துக் கட்டணம் மற்றும் டெலிவரி கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRCTC starts cash on delivery service for train tickets

IRCTC starts cash on delivery service for train tickets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X