பர்ஸை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.. சாமானியர்கள் ஜிஎஸ்டி-யில் கவனிக்க வேண்டியவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றும் ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வியாபாரிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கு மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால், அது முழுமையாகத் தவறு.

காரணம் ஜிஎஸ்டி சாமானியர்களின் அன்றாடத் தேவை மற்றும் சேவைகளின் விலையைக் கூட மாற்றியுள்ளது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி நீங்களும் நானும் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் வரியில் ஏற்றப்பட்டுள்ள மாற்றத்தை முதலில் கவனியுங்கள்

இந்த வரி மாற்றத்தால் பல பொருட்களின் விலை உயரவும், குறையவும் செய்யும், இந்த மாற்றத்தால் உங்கள் வீட்டுச் செலவுகள் உங்கள் பர்ஸை பதம் பார்க்கவும் செய்யும். ஆகவே சாமானியர்கள் அனைவரும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மீதான வரியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரி என்பது கலால் வரி, சேவை வரி, மற்றும் வாட் வரி ஆகியவை இணைத்து ஒற்றை வரியாக விதிக்கப்படுவது.

வருவாய் துறையின் ஒரு பகுதியாக மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை மற்றும் மத்திய நிதியமைச்சகம் இணைந்து ஜிஎஸ்டி கவுன்சில் வாயிலாக அனைத்துச் சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

வரி விதிப்பு

வரி விதிப்பு

இதன் படி சமானியர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு வரி விதித்துள்ளது என்பதையே இப்போது பார்க்க போகிறோம். இந்த வரி சில பொருட்களுக்கு 0% முதல் 28 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக வரி விலக்குப் பெற்ற பொருட்கள் (0%)

முழுமையாக வரி விலக்குப் பெற்ற பொருட்கள் (0%)

பாக்கெட் செய்யப்படாத தானியங்கள், வெல்லம், பால், முட்டை, தயிர், லசி, பாக்கெட் செய்யப்படாத பன்னீர், பிராண்ட் இல்லாத தேன், காய்கறிகள், பிராண்ட் இல்லாத கோதுமை மாவு, பிராண்ட் இல்லாத மைதா மாவு, பிராண்ட் இல்லாத கடலை மாவு, உப்பு, கருத்தடை சாதனங்கள், மூல சணல் (Raw Jute), மூல பட்டு ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி கீழ் முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சேவைக்கு வரி விலக்கு

சேவைக்கு வரி விலக்கு

மேலே நாம் பார்த்தது அனைத்தும் சரக்குப் பிரிவில் சேருவது. சேவைப்பிரிவில் சுகாதாரம் மற்றும் கல்விக்கு முழுமையாக வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது.

5 சதவீத வரி

5 சதவீத வரி

சர்க்கரை, டீ, வறுத்த காபி கொட்டைகள், எண்ணெய் வகைகள், பால் பவுடர், குழந்தைகளுக்கான பால் பவுடர், பாக்கெட் செய்யப்பட்ட பன்னீர், காட்டன் யான், பேப்ரிக், துடப்பம், 500 ரூபாய்க்கு குறைவான காலணிகள், செய்தித்தாள் அச்சடித்தல், பொது விநியோக கடைகளில் அளிக்கப்படும் மண்ணெண்ணெய், எல்பிஜி சிலிண்டர், நிலக்கரி, சோலார் செல், காட்டன் பைபர், 1000 ரூபாய்க்கு குறைவான துணிகள்

இந்தப் பொருட்கள் அனைத்திற்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

12 சதவீத வரி

12 சதவீத வரி

வெண்ணெய், நெய், மொபைல், முந்திரி, பாதம், கொத்தமல்லி, பலச்சாறு, பாக்கெட் செய்யப்பட்ட இளநீர், பத்தி, குடை, 1,000 ரூபாய்க்கும் அதிகமான துணிகள் இவை அனைத்திற்கும் 12 சதவீத வரி.

18 சதவீத வரி

18 சதவீத வரி

ஹோர் ஆயில், சோப், டூத்பேஸ்ட், கேபிடல் கூட்ஸ், தொழில்துறை இடைத்தரகர்கள், பாஸ்தா, corn flakes, ஜாம், சூப், ஐஸ்கிரீம், டிஸ்யூஸ், எஃகு/ஸ்டீல், பேனா, கம்பியூட்டர், கைத்தரி துணிகள், 500 ரூபாய்க்கு அதிகமான காலணிகள்.

ஜிஎஸ்டி வரியின் கீழ் மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்திற்கும் 18 சதவீத வரி.

 

28 சதவீத வரி

28 சதவீத வரி

நுகர்வோர் சாதனங்கள், சிமெண்ட், மெல்லும் கோந்து, கஸ்டர்ட் பவுடர், வாசனைத் திரவியம், ஷாப்பு, மேக்அ பொருட்கள், பட்டாசுகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்

டிவீட்

இதுகுறித்து மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை டிவிட்டரில் பதிவிட்ட டிவீட் உங்களுக்காக.

கோயம்புத்தூர் பேராசிரியர்

கோயம்புத்தூர் பேராசிரியர்

கோயம்புத்தூர் அம்ரிதா பல்கலைக்கழக பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..! கோயம்புத்தூர் அம்ரிதா பல்கலைக்கழக பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!

சமோசா

சமோசா

கூகிள் வேலையை விட்டுவிட்டு சமோசா விற்க சென்ற முனாப் கபாடியா..! கூகிள் வேலையை விட்டுவிட்டு சமோசா விற்க சென்ற முனாப் கபாடியா..!

வீட்டு கடன்

வீட்டு கடன்

இனி குறைவான வட்டியில் வீட்டு கடன்.. ஆர்பிஐ அறிவித்த புதிய தளர்வுகள்..! இனி குறைவான வட்டியில் வீட்டு கடன்.. ஆர்பிஐ அறிவித்த புதிய தளர்வுகள்..!

புதிய பார்மூலா

புதிய பார்மூலா

அதிகம் சம்பளம் வாங்க ஐடி ஊழியர்களுக்கு புதிய பார்மூலா..! அதிகம் சம்பளம் வாங்க ஐடி ஊழியர்களுக்கு புதிய பார்மூலா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST For Common Man Low Prices and High on Happiness: CBEC

GST For Common Man Low Prices and High on Happiness: CBEC
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X