ஜிஎஸ்டி-யால் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் மாற்றங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, நாட்டின் மறைமுக வரி விதிப்பை முழுமையாக மாற்றியமைக்க உள்ளது. இதில் சாமானியர்களின் தினசரி வாழ்வில் புழக்கத்தில் இருக்கும் சேவை வரி, மதிப்பு கூட்டு வரி என அனைத்தும் முழுமையாக நீக்கப்பட உள்ளது.

 

சரி இந்த மாற்றங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட் துறையில் எவ்வாறு பாதிக்கிறது..? வாங்க பார்ப்போம்.

ஜூலை1

ஜூலை1

வருகிற ஜுலை1 2017இல் ஜிஎஸ்டி முழுமையாக அமலாக்கம் செய்ய அனைத்துப் பணிகளும் நடந்து வருகிறது. மேலும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அனைவரும் ஜிஎஸ்டி விரி விதிப்பிற்கு ஏற்ப தங்களது கணக்குகளை மாற்றி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் ரியல் எஸ்டேட் துறையில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது எவ்வாறு சாமானியர்களைப் பாதிக்கிறது என்பதைப் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஜிஎஸ்டி-யின் கீழ் under construction நிலையில் இருக்கும் வீட்டை வாங்க 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

 

12 சதவீத வரி
 

12 சதவீத வரி

இந்த 12 சதவீத வரி நடைமுறையில் இருக்கும் வரி விதிப்பை விட அதிகமானதாகக் குறைவானதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன் தற்போது எவ்வாறு விரி விதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பல வரிகள்

பல வரிகள்

தற்போது சேவை வரி, ஸ்வச் பாரத் செஸ், கிரிஸ் கல்யாண் செஸ், மதிப்பு கூட்டு வரி, பத்திர கட்டணம், பதிவு கட்டணம் என ஒரு வீட்டை வாங்கப் பல வரிகள் செலுத்த வேண்டி உள்ளது.

ஜிஎஸ்டி கீழ் ஓரே வரி தான். 12 சதவீதம் மட்டுமே, பத்திர கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இது மாநில அரசு நிர்ணயம் செய்யும் அளவுகள் தொடரும்.

 

சேவை வரி

சேவை வரி

under construction நிலையில் இருக்கும் வீட்டை நீங்கள் வாங்க வேண்டுமெனில் அதன் மதிப்பில் ஸ்வச் பாரத் செஸ், கிரிஸ் கல்யாண் செஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து சேவை வரி 15 சதவீதமாக விதிக்கப்படுகிறது.

இது வீட்டின் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவும், 2,000 சதுரடிக்கு குறைவாக இருந்தால் மொத்த மதிப்பில் 25 சதவீத தொகைக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும். 1 கோடி ரூபாய்க்கு ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் 30 சதவீத தொகைக்கு 15 சதவீத சேவை வரி விதிக்கப்படும்.

 

குழப்பம்..

குழப்பம்..

ஆனால் சதவீத வரி தற்போது சேவை வரியில் இருக்கும் தளர்வுகளின் (மொத்த மதிப்பீட்டில் 25% அல்லது 30%) மீது விதிக்கப்படுமா, அல்லது மொத்த தொகையில் விதிக்கப்படுமா என்பது முழுமையாக தெரியவில்லை. 

இதுக்குறித்து பல பில்டர்கள் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

முழுமையாக மதிப்பீட்டின் மீது விதித்தால் அதிகளவிலான தொகைய வரியாக மட்டுமே செலுத்த வேண்டி நிலை உருவாகும். 

 

மதிப்பு கூட்டு வரி

மதிப்பு கூட்டு வரி

இந்தியாவில் மதிப்பு கூட்டு வரி மாநிலங்களில் வாரியாக மாறுபடுகிறது. மகாராஷ்டிராவில் 1 சதவீதமாகவும், கர்நாடாகாவில் 5.5 சதவீதமாகவும், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 0% அளவில் வாட் எனக் கூறப்படும் மதிப்பு கூட்டு வரி மாறுபடுகிறது.

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் மதிப்பு கூட்டு வரிச் சுமை சமானியர்களுக்குக் குறைகிறது. மேலும் டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் கட்டிய வீட்டை வாங்குவதற்குக் கூட மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது.

 

பத்திர கட்டணம் மற்றும் பதிவு கட்டணம்

பத்திர கட்டணம் மற்றும் பதிவு கட்டணம்

ஜிஎஸ்டி மாநில அரசு விதிக்கும் பத்திர கட்டணம் மற்றும் பதிவு கட்டணங்களில் தலையிடவில்லை. இதனால் மாநில அரசுகள் இதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈரக்க இதனை உயர்த்தலாம் எனக் கூறப்படுகிறது.

சாமானியர்களுக்கு லாபம்..

சாமானியர்களுக்கு லாபம்..

under construction நிலையில் இருக்கும் வீட்டை வாங்கும் சாமானியர்களுக்கு ஜிஎஸ்டி (12%) அமலாக்கத்தின் மூலம் சேவை வரி (15%) மற்றும் மதிப்பு கூட்டு வரி (1-5%) முழுமையாக நீக்கப்பட்டு ஒற்றை வரியாக இருக்கும்.

ஜிஎஸ்டி மாற்றத்தின் மூலம் 3-4 சதவீதம் வரிப் பணம் சேமிக்கப்படும்.

 

பில்டர்கள்

பில்டர்கள்

தமிழ்நாட்டில் ஏற்கனவே மணல் விலை தலைக்கு மேல் இருக்கும் நிலையல் ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில முக்கியக் கட்டுமான பொருட்களின் விலை மாறுப்படுகிறது. இதனால் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பில்டர்களின் செலவுகள் அதிகரிக்கும் (அவர்களின் லாபம் குறையும்).

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில் மலிவு விலை வீட்டுத் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் பில்டர்கள், ப்ரோமோட்டர்கள் செய்யும் சேவைக்கும் இதில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டின் விலையும் உயராது எனத் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How GST will impact real estate sector

How GST will impact real estate sector
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X