500 கோடி இணைய மோசடி.. ஷாருக்கான் மீது வழக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காஸியாபாத் நகரை தலைமையாக கொண்டு இயங்கும் வெப்வொர்க் டிரேட் லிங்க்ஸ் நிறுவனம் இணைய வழியாக போலியான திட்டத்தில் 500 கோடி ரூபாய் அளவில் மக்கள் பணத்தை ஏமாற்றியுள்ளது என வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிஐ தற்போது விசாரணையில் இறங்கியுள்ளது.

இந்த வழக்கில் பாலிவுட் நடிகரான ஷாருக்கான், நவாஸ்சுதின் சித்திக் ஆகியோர் மீதும் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Addsbook.com

Addsbook.com

வெப்வொர்க் டிரேட் லிங்க்ஸ் நிறுவனம் Addsbook.com இணைய தளம் மூலம் பல ஆயிரம் மக்களை ஏமாற்றி சுமார் 500 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது.

இந்த நிறுவனத்திற்கு விளம்பர தூதராக ஷாருக்கான், நவாஸ்சுதின் சித்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பணத்தை இழந்தவர்கள் இந்த பாலிவுட் நடிகர்கள் மீதும் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

பாலிவுட் நடிகர்களின் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு பல முதலீட்டாளர்களை Addsbook.com ஈர்த்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் தலைவர்களான ஜெயின் மற்றும் வர்மா ஆகியோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 500 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர்.

என்ன மோசடி..

என்ன மோசடி..

இந்த இணையதளத்தில் சேர்வோர் இணைப்புகளை கிளிக் செய்தால் பணம் என்ற வகையில் வாடிக்கையாளர்களை ஈர்த்து மோசடி செய்துள்ளது இந்நிறுவனம். இதில் சேர்வதற்கு ஆரம்ப தொகை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

4 லட்சம் வாடிககையாளர்கள்

4 லட்சம் வாடிககையாளர்கள்

இந்த மோசடியின் முதல்கட்ட விசாரணையில் கார்க் மற்றும் சுதேஷ் ஆகியோர் இந்நிறுவனத்தில் சுமா்ர் 4 லட்சம் பேரை சேர்த்துள்ளனர். மேலும் மோசடி செய்யப்பட்ட 500 கோடி ரூபாய் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ

சிபிஐ

தற்போது இந்த வழக்கு சிபிஐ-யிடம் விசாரணைக்காக கைமாறியுள்ளது. மேலும் இது தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு முற்றிலும் மாறுப்பட்ட ஓன்று என வெப்வொர்க் டிரேட் லிங்க்ஸ் நிறுவன தலைவர்களான ஜெயின் மற்றும் வர்மா ஆகியோர் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CBI takes over Rs 500 cr online ponzi scam probe

CBI takes over Rs 500 cr online ponzi scam probe
Story first published: Thursday, June 29, 2017, 14:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X