வியாபாரிகளே..! ‘ஜிஎஸ்டி’ இம்சையில் இருந்து தப்பிக்க ஸ்மார்ட்டான ஐடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருகின்ற ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி ஆட்சி முறை இந்தியாவில் அமலுக்கு வருவதினால் ஒரு தேசம் ஒரு வரி என்ற சொல் பிரபலமாகப் பேசிக்கொண்டு வரப்படுகின்றது.

 

என்ன தான் பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே ஜிஎஸ்டி முறைக்கு மாறுவதற்கான வழிகள் எடுத்து இருந்தாலும் இன்னும் சில நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி முறையில் மாற்ற எந்த மென்பொருளினை வாங்குவது என்பதில் குழப்பத்தில் தான் உள்ளனர்.

எனவே தான் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளம் ஏற்கனவே சொந்த தொழில் செய்து வருபவர்களுக்கும், புதிதாகத் தொழில் துவங்க உள்ளவர்களுக்கு ஏற்ற ஜிஎஸ்டி மென்பொருள் மற்றும் செயலிகளின் பட்டியலை உங்களுக்குத் தொகுத்து வழங்குகின்றோம்.

மார்க் ஈஆர்பி 9+

மார்க் ஈஆர்பி 9+

மார்க் ஈஆர்பி 9+ நீங்கள் செய்யும் வணிகத்தில் வாடிக்கையாளர்களுக்கான ரசீதுகள் உருவாக்க மற்றும் வியாபாரத்தின் கணக்கு விவரங்களைச் சேகரித்து வைத்துக்கொள்வதற்கு ஏற்ற மென்பொருளாகும்.

இந்த மென்பொருள் பயன்படுத்த மற்றும் அமல்படுத்த எளிமையானது. அதுமட்டும் இல்லாமல் உங்கள் வணிகத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கக் கூடிய மென்பொருள் ஆகும்.

எங்கு வாங்கலாம், விலை எவ்வளவு?

எங்கு வாங்கலாம், விலை எவ்வளவு?

இணையதளம்: http://margcompusoft.com/ என்ற தளத்தில் 7,200 ரூபாய் முதல் இந்த மென்பொருளினை விலை கொடுத்து வாங்கலாம்.

சோஹோ புக்ஸ் ஜிஎஸ்டி
 

சோஹோ புக்ஸ் ஜிஎஸ்டி

சிறு நிறுவனங்களின் வணிகத்தை எளிமையாகக் கணக்கிட சோஹோ உதவும். ஜோஹோ செயலியைப் பயன்படுத்தி அனைத்துத் துறைகள் சார்ந்த உங்கள் வணிகத்தின் நிதிய நிர்வகிக்கலாம். நிமிடத்தில் சோஹோ செயலியினை உங்கள் வணிகத்திற்கு நிறுவிச் செயல்படுத்தலாம். முழுமையாக இணையதளத்தில் இயங்கும். ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம்.

எங்கு வாங்கலாம், விலை எவ்வளவு?

எங்கு வாங்கலாம், விலை எவ்வளவு?

www.joho.com என்ற இணையதளத்தின் மூலம் 2,499 ரூபாய் முதல் சோஹோ புக்ஸ் ஜிஎஸ்டி செயலி சேவையினைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யலாம்.

கிளியர் டேக்ஸ் ஜிஎஸ்டி

கிளியர் டேக்ஸ் ஜிஎஸ்டி

கிளியர் டேக்ஸ் ஜிஎஸ்டி ஒரு எளிமையான ஜிஎஸ்டி மென்பொருள் ஆகும். இது அக்கவுண்டண்ட்களுக்குப் பெறும் பயன் அளிக்கும்.

எந்தப் பழைய மென்பொருளில் உள்ள தரவையும் இதில் பதிவேற்றி கணக்கை நிர்வகிக்கலாம்.

எங்கு வாங்கலாம், விலை எவ்வளவு?

எங்கு வாங்கலாம், விலை எவ்வளவு?

www.cleartax.in என்ற இணையதளத்திற்குச் சென்று 10,000 ரூபாய் செலுத்தி இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

ஜென் ஜிஎஸ்டி

ஜென் ஜிஎஸ்டி

ஜென் ஜிஎஸ்டி சேக் இன்ஃபோடெக் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட மென்பொருள் ஆகும். இணையதளம் மற்றும் ஆப்லைன் என இரு வடிவங்களிலும் இந்தச் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம்.

கணினியில் இயங்கும் மென்பொருள் .net மூலமாகவும், இணையதளத்தில் இயங்கும் முறை ஜாவா மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கு வாங்கலாம், விலை எவ்வளவு?

எங்கு வாங்கலாம், விலை எவ்வளவு?

www.saginfotech.com என்ற இணையதளத்தின் மூலம் 5,000 ரூபாய் செலுத்தி இந்த மென்பொருளினை பயன்படுத்தலாம்.

டால்லி ஈஆர்பி 9

டால்லி ஈஆர்பி 9

வர்த்தகர்களிடம் மிகவும் பிரபலமான ஒரு மென்பொருள் என்றால் அது டால்லி ஈஆர்பி செயலி ஆகும். டால்லி ஜிஎஸ்டி அறிமுகத்தினால் டால்லி ஈஆர்பி 9 வெளியீடு 6-ஐ அறிமுகம் செய்துள்ளது.

எங்கு வாங்கலாம், விலை எவ்வளவு?

எங்கு வாங்கலாம், விலை எவ்வளவு?

டால்லி நிறுவனத்தின் இணையதளம் மூலமாக 18,000 ரூபாய் முதல் இந்தச் செயலியை வங்கி பயன்படுத்தலாம்.

சைன்வேர் ஜிஎஸ்டி பிரோ

சைன்வேர் ஜிஎஸ்டி பிரோ

வாட் தேவைகளைப் பூர்த்திச் செய்து வந்த சைன்வேர் நிறுவனம் ஜிஎஸ்டி பிரோ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது முக்கியமாகச் சிஏ-க்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை.

விலையும் எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை.

யார் இவர்கள்

யார் இவர்கள்

ஜிஎஸ்டி வந்ததற்கு இவர்கள் தான் காரணம்..!

ஜிஎஸ்டி எதிரொலி

ஜிஎஸ்டி எதிரொலி

நாளைக்கு இதெல்லாம் நடக்கும்.. ஜஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலி..!

கடிவாளம்

கடிவாளம்

ஒரு பொருளுக்கு இரண்டு எம்ஆர்பி: கடிவாளம் போட்ட மத்திய அரசு..!

கார், பைக் விலை பட்டியல்

கார், பைக் விலை பட்டியல்

ஜூலை1 முதல் விலை குறையும் கார், பைக்-இன் முழுமையான விலை பட்டியல்.. ஆனால்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 5 GST software in India Price, Features in Tamil

Top 5 GST software in India Price, Features in Tamil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X