ரிலையன்ஸ் ஜியோவின் ஜிஎஸ்டி ஸ்டார்ட்ர் கிட், ஜியோஃபை சாதனத்துடன் 1,999 ரூபாய்.. அப்படினா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

வணிகச் செய்து வரும் ரிடெய்ல் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வணிகம் செய்யக் கூடிய மென்பொருள் ஒன்றை ரிலையன்ஸ் ஜியோ ஸ்டார்ட்ர் கிட் மூலம் அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள் மூலம் 1,999 ரூபாய்க்கு மொபைல் போன் உதவியுடனும் வியாபாரிகள் பில் செய்ய முடியும். இதே போன்ற இரு சேவையினைச் சோஹோ நிறுவனமும் சோஹோ புக்ஸ் என்ற பெயரில் இணையதளம் மற்றும் செயலி மூலமாகப் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் ஜியோ நிறுவனத்தின் இந்த ஜிஎஸ்டி மென்பொருள் பல சலுகைகளுடன் வெளிவந்துள்ளது. இதன் முழு விவரங்களையும் இங்கே பார்ப்போம்.

ஜியோ ஜிஎஸ்டி

ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள், ஒரு வடத்திற்கு 24 ஜிபி தரவுடன் ஜியோஃபை சாதனம், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ப்ல கருவிகளுடன் பெறலாம் என்று ஜியோ ஜிஎஸ்டி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சுவிதா சேவை

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் ஜிஎஸ்டி சுவிதா சேவையையும் அளிக்கத் துவங்கியுள்ளது. ஜிஎஸ்டி சட்ட விதிகளின் படி இணையதளச் செயலி மூலமாகச் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்கை எளிமையாகப் பயன்படுத்தும் படி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஜிஎஸ்டி உதவியுடன் என்னவெல்லாம் செய்யலாம்?

ஜியோ-ஜிஎஸ்டி தீர்வு மூலமாக வணிகர்களால் தங்களது ரெக்கார்டளை முறைப்படுத்த முடியும், ஜிஎஸ்டி தாக்கல் செய்ய முடியும், ஜிஎஸ்டி சட்டத்திற்கு இணங்கி வணிகம் செய்ய முடியும்.

ஜியோ ஜிஎஸ்டி ஸ்டார்ட் கிட்டில் ஜிஎஸ்டி தாக்கல் சேவை, ஜியோஃபை சாதனம், வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் 24 ஜிபி தரவு, ஜியோ பில்லிங் செயலி, ஜியோ ஜிஎஸ்டி அறிவுத் தொடர் ஆகியவை கிடைக்கும். இதன் மொத்த சந்தை மதிப்பு 10,888 ரூபாய் என்றபோதிலும் பெக்கேஜ் ஆஃபராக ஜியோ நிறுவனம் 1,999 ரூபாய்க்கு வழங்கியுள்ளது.

 

1,999 ரூபாய்க்கு ஜியோ ஜிஎஸ்டி பேக்கேஜில் என்ன சேவை எல்லாம் கிடைக்கும்?

1. ஒரு வருடத்திற்கு ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள் தீர்வு
2. வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் 1 வருடத்திற்கு 24 ஜிபி தரவு
3. ஜியோஃபை சாதனம்
4. பில்லிங் செயலி மற்றும் பல

ஜியோ

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் 2016-2017 4வது காலாண்டு முடிவதற்குள் 108 மில்லியன் பயனர்களைப் பெற்றது. இப்போது அந்த நிறுவனத்தின் ஜியோ சேவையில் 80 மில்லியன் பயனர்கள் ஆக்டிவாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது நாளில் அமர்க்களம்

போட்டிபோட்டு விலையை குறைக்கும் நிறுவனங்கள்.. ஜிஎஸ்டியின் 2வது நாளில் அமர்க்களம்..!

ஒரு பார்வை

ஜிஎஸ்டி துறை வாரியாக எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்: ஒரு பார்வை

பெரிய தலை

ஜிஎஸ்டி-யை உருவாக்கிய பெரிய தலை..!

மாருதி சுசூகி

கார் விற்பனை திடீர் சரிவு.. மாருதி சுசூகி மட்டும் தப்பித்தது..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio Offers GST Starter Kit, JioFi For Rs. 1,999. Details Here

Reliance Jio Offers GST Starter Kit, JioFi For Rs. 1,999. Details Here
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns