ஆதார், பான் எண்ணை இணைக்கவில்லை எனில் வருமான வரி துறையின் நேரடி கண்காணிப்பில் நீங்கள் சிக்கலாம்!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால் பாம் கார்டிற்குப் பெரிய சிக்கல் இல்லை என்று நீங்கள் இருந்தால் வருமான வரித் துறைக்கு நீங்கள் உங்கள் வருமானத்தினைச் சரியாகக் காண்பிக்கவில்லை என்ற நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

இதனால் நீங்கள் வருமான வரியினைச் சரியாகச் செலுத்தவில்லை என்றும் அரசை ஏமாற்றி வருகிறீர்கள் என்ற உங்கள் வீட்டைச் சோதனை நடத்தும் நிலைக்கும் தள்ளப்படுவீர்கள்.

விரைவில் புதிய தேதி

வருமான வரித் துறை விரைவில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடைசித் தேதி எப்போது என்பதை விரைவில் அறிவிக்கும். ஆதார், பான் இணைப்பைச் செய்யாமல் இருக்கும் போது ஒருவர் தெரிந்தே வரி ஏய்ப்பு செய்துள்ள நிலைக்குத் தள்ளப்படுவார்.

வருமான வரி தாக்கல்

ஆதார், பான் இணைப்பைச் செய்யாதவர்கள் மற்றும் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது அளிக்கப்பட்ட பதிவு எண் இல்லாதவர்களால் 2017 ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய முடியவில்லை.

வருமான வரித் துறையின் நோக்கம் என்ன?

வருமான வரித் துறையின் நோக்கம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண்ணை நீக்க வேண்டும் என்பது இல்லை என்பது ஜூன் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இருந்து தெரியவந்துள்ள நிலையில் இரண்டு தனிநபர்கள் எண்கள் இருந்தால் தான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார், பான் என்ன வித்தியாசம்?

தனிப்பட்ட அடையாள எண்ணான 12 இலக்க ஆதார் எண் பான் கார்டு போன்று இல்லாமல் சம்மந்தப்பட்ட நபரின் பையோமெட்ரிக் தரவுகளைப் பெற்றுக்கொண்டு வழங்குவதாகும்.

எதற்காக இந்த இணைப்பு?

ஆதார் விவரங்களை உங்கள் வங்கி கணக்கிற்கு நீங்கள் அளித்து இருந்தால் வருமான வரித் துறையினரால் எளிதாக உங்கள் நிதி நிலையை, உங்கள் செலவுகளைக் கண்டறிய முடியும்.

இதனை வைத்துக்கொண்டு வருமான வரித் துறை நீங்கள் வரி செலுத்த வேண்டுமா என்பதைக் கண்டறிந்துவிடும். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மறுப்பது வருமான வரித் துறைக்கு உங்கள் வருவாயினை மறைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படும்.

 

இந்தியாவில் எவ்வளவு நபர்கள் வரி செலுத்துகின்றனர்?

வருமான வரித் துறையில் ஒரு மூத்த அதிகாரியிடம் தற்போதைய நிலை குறித்துப் பேசிய போது 2017 மார்ச் வரை 20 மில்லியன் நபர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் 65 மில்லியனுக்கும் அதிகமான வரி செலுத்துனர்கள் இருந்த போதிலும் 50 மில்லியன் நபர்கள் தான் வரி தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Not linking Aadhaar with PAN could invite Income Tax dept’s wrath

Not linking Aadhaar with PAN could invite Income Tax dept’s wrath
Story first published: Wednesday, July 5, 2017, 13:46 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns