ரூ.7,500-க்கும் குறைவான கட்டணங்கள் உள்ள 5 நட்சத்திர விடுதிகளுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைப்பு..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஐந்து நட்சத்திர விடுதிகளாக இருந்தாலும் தங்கும் விடுதியின் கட்டணம் 7,500 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்தினால் போதும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த சமயத்தில் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு வரி விகிதம் 28 சதவீதமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் உள்ள குழப்பத்தைத் தீர்க்கும் விதமாகப் புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

12 சதவீதம் ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி குழு ஹோட்டல், கெஸ்ட் ஹவுஸ் மற்றும் கிளப்புகளில் 1,000 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரையிலான அறை கட்டணங்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விகிதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

18 சதவீத ஜிஎஸ்டி

ஒருவேலை அறையின் கட்டணம் 2,500 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை இருந்தால் 18 சதவீத ஜிஎஸ்டி வரியினைக் கட்டணத்துடன் செலுத்த வேண்டும்.

28 சதவீத ஜிஎஸ்டி

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் டாரிப் கட்டணம் குறைவாக இருக்கும் போதும் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமா என்ற சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பினை வெளியிடுவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்தது.

தங்கும் விடுதிகள்

இதன் மூலம் எந்தத் தங்கும் விடுதிகளாக இருந்தாலும், அது 5 நட்சத்திர தங்கும் விடுதிகளாக இருந்தாலும் 2,500 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டால் 18 சதவீதம் தான் வரி செலுத்த வேண்டும் என்பது உறுதி ஆகியுள்ளது. எனவே தங்கும் விடுதிகளுக்குச் செல்லும் போது ரசீதுகளைச் சரி பார்த்துத் தங்குவது நல்லது.

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

18 percent GST On 5 Star, Other Hotels With Tariff Less Than Rs 7,500

18 percent GST On 5 Star, Other Hotels With Tariff Less Than Rs 7,500
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns