யாரை ஏமாற்ற இந்த திட்டம்.. முகேஷ் அம்பானி-யின் மாஸ்டர் பிளான்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 40வது வருடாந்திர கூட்டத்தில் இதன் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, அதனை அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்து, போட்டி நிறுவனங்களான ஐடியா, ஏர்டெல் ஆகியவற்றைப் பதம்பார்த்தது.

முகேஷ் அம்பானி அறிவித்தத்த திட்டத்தில் மிகப்பெரிய மோசடி வேலை ஒழிந்திருக்கிறது. இவர் அறிவித்த 4ஜி பியூச்சர் போன் திட்டம் வரி ஏய்ப்புச் செய்யக் கூடியதாக உள்ளது.

4ஜி பியூச்சர் போன்

1500 ரூபாய் செக்யூரிட்டி டெப்பசிட் மீது 0 ரூபாயில் 4ஜி பியூச்சர் போனும், தற்போது ஜியோ வாடிக்கையாளர்கள் பெற்று வரும் தன் தானா தன் ஆஃபரை 50 சதவீத கட்டண தள்ளுபடியில் வெறும் 153 ரூபாய்க்கு அளிப்பது தான் முகேஷ் அம்பானி அறிவித்த திட்டம்.

இந்தத் திட்டத்தினை ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவித்த போது ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியில் திளைத்தது.

 

பிரச்சனை

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இந்திய வரி அமைப்பில் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது டெலிகாம் சேவையின் மீதான வரியும் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இத்தகை சூழ்நிலையில் முகேஷ் அம்பானி வெறும் 1,500 ரூபாய் டெப்பாசிட்க்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்பது தான் தற்போது வெடித்துள்ள மிகப்பெரிய பிரச்சனை.

 

மிகப்பெரிய உத்தி

வாடிக்கையாளர்களிடம் பெறும் 1500 ரூபாய் செக்யூரிட்டி டெப்பசிட் ஆகப் பெற்று முகேஷ் அம்பானி தனது நிறுவனத்திற்கு முதலீடு செய்வார் அல்லது வட்டிக்கும் கூடக் கொடுத்துப் பணம் சம்பாதிப்பார் என்று மக்கள் ஒரு பக்கம் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைத் தளங்களில் கூறி வந்தாலும் இதில் மிகப் பெரிய உத்தியை அம்பானி கையாண்டு உள்ளார் என்று கூறலாம்.

வட்டியில்லா பணம் திரட்டல்

முகேஷ் அம்பானி தற்போது அறிவித்துள்ள திட்டத்தின் படி சரக்கு மற்றும் சேவை ஆகிய இரண்டுக்கும் தனித்தனியாகப் பணத்தை வசூல் செய்கிறார். இதற்கு ஜிஎஸ்டி வரியை வாடிக்கையாளர்கள் செலுத்துகின்றனர்.

வருடம் 5,508 ரூபாய் வருமானம்

ஜியோ போன்(சரக்கு) ரூ.0 என்றாலும் டெலிகாம் சேவைக்கு (சேவை) மாதத்திற்கு ஒரு முறை 153 ரூபாய்க்கு நாம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் 3 வருடத்திற்கு 5,508 ரூபாய் வரை நாம் கட்டணமாகச் செலுத்துகின்றோம்.

ஜிஎஸ்டியில் மிகப்பெரிய ஓட்டை

மூன்று வருடத்திற்குப் பிறகு செக்யூரிட்டி டெப்பசிட் பணத்தினை வாடிக்கையாளர்கள் போனை திருப்பி அளிக்கும்போது மட்டுமே டெப்பாசிட் பணத்தை ஜியோ திரும்ப அளிக்கிறது. இத்தகைய செக்யூரிட்டி டெப்பசிட் பணத்திற்கு ஜிஎஸ்டி கீழ் எவ்விதமான வரியுமில்லை.

வட்டியில்லா பணம்...

இந்தச் செக்யூரிட்டி டெப்பசிட் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எவ்விதமான வட்டியும் இல்லாமல் மகிப்பெரிய அளவில் பணத்தைத் திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்காகவே 4ஜி போனை 500 ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்ட முகேஷ் அம்பானி 1500 ரூபாய் செக்யூரிட்டி டெப்பசிட்க்கு அளிக்க முடிவு செய்தார்.

இதில் அப்படி எவ்வளவு பணம் கிடைத்துவிடும்.

 

அடேங்கப்பா

ஜியோ சேவையினை 125 மில்லியன் நபர்கள் இந்தியாவில் தற்போது பயன்படுத்துகின்றார்கள். உதாரணத்திற்கு இப்போது அதே அளவிலான வாடிக்கையாளர்கள் 125 மில்லியன் ஜியோ போனை வாங்கினால் அம்பாணிக்கு 187,500,000,000 ரூபாய் (18,750 கோடி ரூபாய்) கிடைக்கும்.

18,750 கோடி ரூபாய்

இதனை வங்கியில் கடனாக வங்கியிருந்தால் குறைந்தபட்ச வட்டியாக 15 சதவீதம் செலுத்த வேண்டியிருக்கும், அன்னிய முதலீடாகத் திரட்டியிருந்தால் முதலீட்டாளர்களுக்கு நிறுவன பங்குகளைத் தாரைவார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய தொகையை முதலீடாகத் திரட்ட வேண்டுமெனில் முகேஷ் அம்பானி ஏதாவது ஒரு விதத்தில் இழப்பைச் சந்திக்க வேண்டும்.

மத்திய அரசு

இவ்வளவு பணத்தினை மக்களிடம் இருந்து பெற்று தனது வணிகத்தினை அம்பானி பெருக்குவார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மத்திய அரசுக்கு செக்யூரிட்டி டெப்பசிட் பெற்றுவிட்டு அதனைத் திருப்பி அளிப்பதினால் ஜிஎஸ்டி வரியினைச் செலுத்த தேவையில்லை.

இதன் மூலம் மத்திய அரசுக்குத் தான் வரிப் பணம் பெரிய அளவில் நஷ்டம். இதனை ஜிஎஸ்டியில் வரியை அமலாக்கம் செய்யும்போதே மாற்றியிருக்க வேண்டும். மத்திய அரசு இதில் மிகப்பெரிய தவறு செய்துள்ளது.

 

வரி நஷ்டம்

இதனால் மத்திய அரசுக்கு, ஜியோ செய்யும் மொபைல் விற்பனையின் மூலம் 22,500,000,000 ரூபாய் (2,250 கோடி ரூபாய்) வரி நஷ்டம்.

மாற்றுத்திட்டம்..

1,500 ரூபாய் செக்யூரிட்டி டெப்பசிட்டை மொபைலின் விலையாக (வரி அனைத்தும் உட்பட) விற்பனை செய்தால் அரசுக்கு வரி கிடைக்கும். அதேபோல் ஜியோவிற்குப் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கும்.

தற்போது இருப்பதைப் போலவே 3 வருடத்திற்குப் பின் மொபைலை திருப்பி அளிக்கும் போது 1,500 ரூபாய் பணத்தைக் கொடுத்து விடலாம்.

 

விளக்கம்

தற்போது ஜியோ அறிவித்திருக்கும் இத்திட்டத்தைப் பற்றி விளக்கம், இதில் உள்ள ஆஃபர்கள் சரியானதா என டெலிகாம் துறை வல்லுனர்கள் நிதியமைச்சகத்துடன் விளக்கம் கேட்டு உள்ளனர். இதற்கான விளக்கம் அடுத்தச் சில நாட்களில் வெளியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Master Stroke by Reliance jio phone Scheme

Master Stroke by Reliance jio phone Scheme
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns