ஏடிஎம்-ஐ கொள்ளையடிக்க பயிற்சி.. பீகாரில் 26வயது இளைஞனின் மோசடி வேலைகள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஏடிஎம்-இல் மோசடி செய்வது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டு மோசடியாளர்களை உருவாக்கி, கிழக்கு இந்திய பகுதிகளில் 4 மாநிலங்கள் மற்றும் நேபால் முதல் விரிந்து கிடக்கும் ஒரு மோசடி கூட்டத்தின் தலைவன் 26 வயதுடைய இளைஞனை பீகார் போலீஸ் கைது செய்துள்ளது.

முசஃப்ர்பூர் மாவட்டம்

பீகார் மாநிலத்தின் முசஃப்ர்பூர் மாவட்ட கிராமத்தை சேர்ந்த பங்கஜ் சஹானி ஒரு இயற்பியல் பட்டதாரி. இவர் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏடிஎம்களில் எப்படியெல்லாம் மோசடி செய்ய முடியும் என்பதற்கான பயிற்சியை அளித்து வருகிறார்.

மோசடிகள்

ஏடிஎம் பயனாளர்களை எப்படி போலியாக உருவாக்குவது, ஏடிஎம் இயந்திரத்தில் இருப்பது திருடுவது என பல மோசடி வழிகளை கற்றுக்கொடுத்து வருக்கிறார் பங்கஜ்.

கைது..

2010-2012 ஆண்டுகள் 4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.40 கோடி ரூபாய் தொகையை ஏடிஎம் மோசடிகள் மூலம் திருடியுள்ளதாக, பங்கஜ் உட்பட இவரின் தொடர்பில் இருக்கும் 4 பேரையும் முசஃப்ர்பூரில் பீகார் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஒப்புதல்

குற்றத்தை ஒப்புக்கொண்ட பங்கஜ் மற்றும் அவரது கூட்டாளிகள், தங்களது நெட்வொர்க் ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம் மற்றும் நேபால் ஆகிய இடங்களில் இயங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

பயிற்சி

2012-2017 ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்ரு தெரியவில்லை, ஏன்னெனில் இக்காலட்டத்தில் கணக்கிடப்படாத இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தோம் எனவும் பங்கஜ் கூறியுள்ளான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Fraudster Runs Training School For ATM Cheats

Fraudster Runs Training School For ATM Cheats
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns