வருமான வரி துறையின் அதிரடியால் மோசடியாளர்கள் கவலை.. பிக்ஸட் டெபாசிட்-இல் வரி ஏய்ப்பு..!

Written By:
Subscribe to GoodReturns Tamil
வங்கி வைப்பு நிதி, நிறுவன வைப்பு நிதிகள் மூலம் அதிகளவில் வருமானம் பெறுபவர்கள், அதனை வருமான வரி அறிக்கையில் கணக்குக் காட்டாமல் கருப்புப் பணமாகப் பதுக்கிவைக்கின்றனர்.

இதனைக் கண்டறிந்த வருமான வரித்துறை வைப்பு நிதிகள் மூலம் அதிகவருமானம் பெறுவோர் மீது தனிப்பட்ட கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து முழுமையான செய்தியை படிக்க இதைக் கிளிக் செய்யவும்.

வருமான வரித்துறை

இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக மத்திய அரசும், வருமான வரித்துறையும் சேர்ந்து இப்புதிய கண்காணிப்பு பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், பலருக்கு பல்வேறு முதலீட்டுத் திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.

ஆசாமிகள்

இதுவரை தனிநபர்கள் வைப்பு நிதியின் கீழ் கிடைக்கும் வருமானம் அனைத்தும் வருமான வரித்துறையிடம் இருந்து மறைக்கப்பட்ட ஆசாமிகள், இனி வரி அறிக்கையில் குறிப்பிட்டு ஆகவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இல்லையெனில் வருமான வரித்துறை அதிகளவிலான அபராதம் விதிக்கும் என்பதை மறந்து விடவேண்டாம்.

ஒரு ஆண்டுக்கு...

வைப்பு நிதி அல்லது தொடர் வைப்பு நிதியின் கீழ் ஒரு ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் நீங்கள் பெற்றால் வங்கியே அதற்கான வரியைப் பிடித்துக்கொள்ளும்.

கணக்குக் காட்டுதல்

வங்கி பிடிக்கப்பட்ட தொகையை நீங்கள் 26AS படிவத்தில் தெரிந்துகொள்ளலாம். ஆதேபோல் வங்கி வரியைப் பிடித்துக்கொண்டால் வைப்பு நிதிக்கு எவ்விதமான வரியும் செலுத்த தேவையில்லை.

வரி விதிப்புகள்

10,000 ரூபாய் வரையிலான வரி வருமானத்திற்கு 10 சதவீதம் மட்டுமே வரி. ஆனால் வைப்பு நிதியின் உரிமையாளர், அதிக வரி விதிப்புப் பட்டியலில் இருந்தால், கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

திட்டங்களும் வரி விதிப்புகளும்

வங்கி சேமிப்பு கணக்கு - வருடத்திற்கு 10,000 ரூபாய் வரை வரி விலக்கு உண்டு
வைப்பு நிதி - முழுமையான வரிக்கு உட்பட்டது
தொடர் வைப்பு நிதி - முழுமையான வரிக்கு உட்பட்டது
வரிச் சேமிப்பு வைப்பு நிதி - முழுமையான வரிக்கு உட்பட்டது
பிபிஎப் - வரி விலக்குப் பெற்ற திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜ்னா - வரி விலக்குப் பெற்ற திட்டம்
வரியில்லா பத்திரங்கள் - வரி விலக்குப் பெற்ற திட்டம்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) - முழுமையான வரிக்கு உட்பட்டது
கிஸான் விகாஸ் பத்திர - முழுமையான வரிக்கு உட்பட்டது
முத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் - முழுமையான வரிக்கு உட்பட்டது

மேலே குறிப்பிட்ட திட்ட முதலீட்டில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிப்புகளின் நிலைகள் இதுவே. வரி விலக்கு இல்லாத திட்டத்தில் கிடைக்கும் வருமானத்தை மொத்த வருமானத்துடன் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டும்.

 

ஏமாற்ற வேண்டாம்..

பலர் வரி விதிப்பில் இருந்து தப்பிக்கப் பல வங்கியில் தங்களது பணத்தை வைப்புச் செய்வார்கள். உதாரணமாக ஒருவர் 1 லட்சம் ரூபாயை ஒரு வங்கியில் வைப்பு செய்தால் 5 வருடத்திற்குப் பின்னும் 10,000 ரூபாய் கிடைக்காது. இதனால் பலர் பல வங்கிக் கணக்கில் அதிகளவிலான தொகையை வைப்பு நிதியில் முதலீடு செய்து ஏமாற்றி வந்தனர்.

ஆதார் மற்றும் பான் எண் மகிமை..

ஆனால் இப்போது அனைத்து வங்கி கணக்கிற்கும் ஆதார் மற்றும் பான் எண் இணைக்கப்படும் காரணத்தால் இத்தகைய மோசடியைச் செய்ய முடியாது. ஆகவே தாமாகவே முன்வந்து வரியை தெலுத்திவிட்டால் 10 சதவீத வரியுடன் முடிந்துவிடும். இல்லையெனில் 50 சதவீதம் வரையிலான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

15G மற்றும் 15H படிவங்கள்

வைப்பு நிதியின் மூலம் கிடைக்கும் பணத்தின் தொகை 10,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் வங்கி தானாக வரியைப் படித்துக்கொள்ளும், இந்நிலையில் உங்களுக்கு ஆண்டு வருமானம் 2,50,000 ரூபாய்க்குக் குறைவாக இருந்தால் 15G மற்றும் 15H படிவங்கள் வருமான துறைக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் பிடிக்கப்பட்ட வரியைத் திரும்பப் பெறலாம்.

இதனைப் பயன்படுத்திப் பல ஆசாமிகள் மிகப்பெரிய அளவில் மோசடி செய்து வருகின்றனர். ஆனால் பான் எண் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி இந்த உட்டாலக்கிடி வேலை எல்லாம் செய்ய முடியாது.

 

90 சதவீத மக்கள்

சமீபத்தில் டாக்ஸ்ஸ்பேனர் என்ற வருமான வரி தாக்கல் சேவை அளிக்கும் நிறுவனம் செய்த ஆய்வில் சுமார் 90 சதவீதம் பேர் வங்கி வைப்பு நிதியின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கில் காட்டுவதில்லை என்று தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை

இதன் காரணமாகவே தற்போது வருமான வரித்துறை வைப்பு நிதியைக் கொண்டு மோசடி செய்யும் ஆசாமிகளுக்கு வலை வீசியுள்ளனர். எனவே அனைவரும் சரியான வருமானத்திற்கு முழுமையான வரியைச் செலுத்துவதே சிறந்த வழி.

பிஸ்னஸ் ஐடியா

வெறும் 70,000 ரூபாய் முதலீட்டில் சூப்பரான பிஸ்னஸ் ஐடியா..!

புதிய ஃபார்முலா..!

100 ரூபாயில் கோடிஸ்வரர் ஆகும் வாய்ப்பு.. இளைஞர்களை கவரும் புதிய ஃபார்முலா..!

யூடியூப் தமிழர்கள்..!

யூடியூப் சேனல்கள் மூலம் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் தமிழர்கள்..!

ஜாக்பாட்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச சம்பளமே 21,000 ரூபாயாம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Fixed Deposits Interest income under tax scrutiny

Fixed Deposits Interest income under tax scrutiny
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns