ஹோட்டல்களில் இப்படியும் மோசடி நடக்கிறது.. உஷாரா இருங்க..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் வர்த்தகச் சந்தையில் மாற்றங்களுக்கும், குழப்பங்களுக்கும் பஞ்சமில்லை. இதன் அமலாக்கத்தின் பின் பல கடைகளில் பல விதமான மோசடிகளும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த ஒரு மோசடி அனைவருக்கும் ஒரு புரிதலை அளித்துள்ளது.

ஜிஎஸ்டிக்குப் பின்..

ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட நாட்களில் ஹோட்டல்களில் செய்யப்படும் மோசடிகள் வெளிவந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஹோட்டல் பில்-இன் மொத்த தொகையை மட்டும் பார்த்துப் பணம் செலுத்து விட்டு வருவது இயல்பாகிவிட்டது.

ஆனால் இன்னமும் பல மோசடிகள் நடந்து வருகிறது.

 

புனே..

புனே நகரில் ஜகதீஷ் என்பவர் ஒரு சிறிய உணவகத்தில் உணவைச் சாப்பிட்டு உள்ளார். பில் வரும் போது அவர் வழக்கத்திற்கு மாறாக ஹோட்டல் பில்லை கவனித்துள்ளார்.

இதில் ஜிஎஸ்டிக்குப் பதிவு செய்யப்படாத அந்த ஹோட்டல் அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்தும் ஜிஎஸ்டி வரி வசூலித்து வருகிறதை அவர் கண்டுகொண்டார்.

 

25 ரூபாய் வரி

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தான் சாப்பிட்ட உணவிற்கான தொகை 140 ரூபாயாக இருந்த நிலையில், ஜிஎஸ்டி வரியான 18 சதவீதத்துடன் 25 ரூபாய் சேர்த்து 165 ரூபாயை ஹோட்டல் நிர்வாகக் கோரியுள்ளது.

சட்டம்..

ஜிஎஸ்டி வசூலிக்கும் அனைத்து நிறுவனங்களும், வர்த்தக ஸ்தாபனங்களும் தங்களது பில்-இல் ஜிஎஸ்டி பதிவு எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.

இதன் பிடி ஜகதீஷ் பெற்ற ஹோட்டல் பில்-இல் ஜிஎஸ்டி எண்ணுக்குத் தாங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நிர்வாகம் தெரிவித்திருந்தது. பதவு செய்வதற்கு முன்பாக எப்படி வாடிக்கையாளர்களிடம் இருந்து நீங்கள் வரி வசூலிக்கலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

வரி ரத்து..

இதன் மூலம் ஹோட்டல் நிர்வாகம் ஜகதீஷ் அவர்களின் உணவு மீது விதிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரியை ஹோட்டல் நிர்வாகம் ரத்துச் செய்து உணவுக்கு உண்டான பணத்தைப் பெற்றும் பெற்றுக்கொண்டது.

பேஸ்புக் பதிவு..

இதுகுறித்த ஜகதீஷ்-இன் பேஸ்புக் பதவு இப்பகுதி மக்களுக்கு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.

தெரிந்துகொள்ள வேண்டியவை..

1. வர்த்தக நிறுவனங்கள் அளிக்கும் பில்களில் முதல் ஜிஎஸ்டி எண் இருக்க வேண்டும். இல்லையெனில் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டாம்.
2. கடைக்காரர்கள் சரியான அல்லது தங்களுக்கான ஜிஎஸ்டி எண்ணைத் தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ள https://services.gst.gov.in/services/searchtp இந்த இணையதளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.

வரி விதிப்பு

12 சதவீத வரி: ஏசி இல்லா மற்றும் மதுபானம் அளிக்காத ஹோட்டல்கள் 12 சதவீத வரி மட்டுமே விதிக்க வேண்டும் கூடுதலாக விதித்தால். கேள்விகேட்கும் உரிமை உங்களுக்கு உண்டு. இதில் 6% மத்திய ஜிஎஸ்டி, 6% மாநிலஜிஎஸ்டி

18 சதவீத வரி: ஏசி மற்றும் மதுபானம் அளிக்கும் ஹோட்டல்கள் 18 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்க வேண்டும்.

 

சேவைக் கட்டணம்

சேவை வரி வேறு.. சேவைக் கட்டணம் வேறு. பல ஹோட்டல்கள் சேவை கட்டணம் அதாவது Service Charge என்ற பெயரில் அதிகளவிலான கட்டணத்தை வசூலிக்கிறது.

அரசு சட்ட விதிகளின் படி Service Chargeஐ விருப்பம் இருந்தால் கொடுக்கலாம் இல்லையெனில் அளிக்கத் தேவையில்லை. இது முழுமையாக வாடிக்கையாளர்களின் உரிமை.

 

அனுபவம்

ஜிஎஸ்டிக்கு பின் இதுபோன்று நீங்கள் சந்தித்த மோசடிகள், ஏமாற்றுவேலைகள் ஏதேனும் இருந்தால் கருத்து பதிவிடும் தளத்தில் பதிவிடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Hotels can Cheat you with the name of GST

Hotels can Cheat you with the name of GST
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC