போலி ஜிஎஸ்டி ரசீதுகளை கண்டறிவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு பல வணிகர்கள் ரசீதுகளில் முறையான விவரங்களை அளிக்காமல் போலியான விவரங்களை அளித்து வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் கூடுதல் கட்டணங்களைச் செலுத்தி வருகின்றனர்.

எனவே ஒரு கடைக்கு செல்லும் போது அவர்கள் அளிக்கும் ரசீதை வைத்து ஜிஎஸ்டி-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதா மற்றும் அதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.

தகுதி இல்லை என்றாலும் ஜிஎஸ்டி வசூல் செய்தல்

தகுதி இல்லை என்றாலும் ஜிஎஸ்டி வசூல் செய்தல்

தகுதி இல்லை என்றாலும் ஜிஎஸ்டி வசூல் செய்வதை சில வணிகர்கள் செய்கின்றனர். அதே நேரம் அனைத்து வணிகர்களும் ஜிஎஸ்டி-ன் கீழ் தங்களது நிறுவனத்தினை பதிவு செய்ய வேண்டும் என்பதும் இல்லை. ஆனால் ரசீதுகளில் ஜிஎஸ்டி மூலம் மாநிலம் மற்றும் மத்திய ஜிஎஸ்டி வரியைக் குறிப்பிட்டு இருக்கும் போது பதிதல் அவசியம்.

வருவாய் வரம்பு

வருவாய் வரம்பு

ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் குறைவாக வியாபாரம் செய்யும் சிறு வணிகர்கள் ஜிஎஸ்டி-ன் கீழ் பதிவு செய்யத் தேவையில்லை. இதுவே அசாம், அருணாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், மேகாலயா, நாகாலாந்து அல்லது திரிபுரா மாநிலத்தில் வணிகம் செய்பவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் செய்தால் ஜிஎஸ்டி-ன் கீழ் பதிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 மோசடி
 

மோசடி

சில வணிகர்கள் அவர்களது வியாபாரம் குறைவாக இருக்கும் போதும் ஜிஎஸ்டி-ன் கீழ் பதிவு செய்துள்ள நிலையில் பலர் இன்னும் பதிவு செய்யாமல் ஜிஎஸ்டி வரியைச் சேர்த்து வசூலித்து வருகின்றனர். சில வணிகர்கள் இன்னும் வாட் அச்சிடப்பட்ட ரசீதையே இன்னும் வழங்கி வருகின்றனர்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி ஆட்சி முறை அமலுக்கு வந்துள்ளதால் அனைத்துப் பதிவு செய்யப்பட்ட வணிகர்களும் ஜிஎஸ்டி-க்கு மைகிரேட் செய்ய வேண்டும். மற்றும் ஜிஎஸ்டி டின் எண்ணைப் பெற்று அதனை தங்களது ரசீதுகளில் குறிப்பிட வேண்டும்.

தற்காலிக ஜிஎஸ்டி எண் பேதுமானதா?

தற்காலிக ஜிஎஸ்டி எண் பேதுமானதா?

சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி பெறும் வணிகர்கள் ஜிஎஸ்டி எண்ணுக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அதற்கான எண் வந்த உடன் அரசுக்கு வரி செலுத்திவிடுவோம் என்று கூறுவது தவறு ஆகும்.

ஆனால் தவறான ஜிஎஸ்டி எண்ணை ரசீதுகளில் உள்ளிட்டு வணிகர்கள் உங்களா ஏமாற்றுகின்றார்களா என் எப்படி கண்டறிவது என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

 

ஜிஎஸ்டி இணையதளம்

ஜிஎஸ்டி இணையதளம்

சரியான ஜிஎஸ்டி எண்ணைத் தான் வணிகர்கள் தங்களது ரசீதுகளில் குறிப்பிட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய https://www.gst.gov.in என்ற இணையத்தினை திறக்கவும்.

தேடுதல்

தேடுதல்

பின்னர் சேவை மெனுவில் உள்ள வரி செலுத்துனரை தேடவும் என்ற தெரிவை கிளிக் செய்து அதில் ஜிஎஸ்டிஐஎன்/யூஐஎன் எண்ணைத் தேடுவதற்கான தெரிவை கிளிக் செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டிஐஎன் எண்ணை உள்ளிடுதல்

ஜிஎஸ்டிஐஎன் எண்ணை உள்ளிடுதல்

பின்னர் உங்களுக்குத் தோன்றும் திரையில் ஜிஎஸ்டிஐஎன்-ஐ உள்ளிட்டுத் தேடவும் என்ற எண்ணை உள்ளிட வேண்டும்.

தவறு

தவறு

நீங்கள் உள்ளிட்ட ஜிஎஸ்டிஐஎன்/யூஐஎன் தவறு என்றால் சரியான ஜிஎஸ்டிஐஎன்/யூஐஎன் எண் தவறான எனத் தகவல் காண்பிக்கப்படும். மேலும் மீண்டும் சரியான எண்ணை உள்ளிட்டுத் தேட வேண்டும்.

சரி

சரி

இதுவே நீங்கள் உள்ளிட்ட ஜிஎஸ்டிஐஎன்/யூஐஎன் சரியானதாக இருந்தால் வணிகத்தின் பெயர், மாநிலம், பதிவு செய்யப்பட்ட தேதி, மற்றும் வணிக நிறுவனத்தின் பிரிவுகள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

நிலுவை

நிலுவை

இதுவே சரிபார்ப்பு நிலுவையில் உள்ளது என்று உங்களுக்குக் காண்பித்தலும் சரி. வணிகர் பதிவு செய்துள்ளார் என்று உறுதி செய்துகொள்ளப்படும்.

 ஜிஎஸ்டிஐஎன் வடிவம்

ஜிஎஸ்டிஐஎன் வடிவம்

ஜிஎஸ்டிஐஎன் எண் மொத்தமாக 15 இலக்க எண்ணாக மைந்து இருக்கும். முதல் இரண்டு இலக்குகள் மாநிலம், அடுத்த 10 இலக்க எண் பான் எண், 13 வது இலக்க எண் அந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதன் நிலை, 14வது எண் டிபால்ட் எண். கடைசி எண் குறியீட்டை சரிபாப்பதற்காக அளிக்கப்படுவதாகும். அது எண் அல்லது எழுத்து என ஏதுவாக இருந்தாலும் வரித் துறையின் பயன்பாட்டிற்காக அந்த எண் வழங்கப்படுகின்றது.

புகார்

புகார்

ஒருவேலை அந்த நிறுவனம் தவறாக வாடிக்கையாளர்களை கையாளுகின்றது என்பது உங்களுக்குத் தெரிய வந்தால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கடிதம் எழுதுவதன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

மாநில ஜிஎஸ்டி குறியீடுகள்

மாநில ஜிஎஸ்டி குறியீடுகள்

தமிழ் நாடு 33

அந்தமான் நிகோபார் தீவுகள் 35 

ஆந்திரப் பிரதேசம் 28
ஆந்திரப் பிரதேசம் (புதியது) 37
அருணாச்சல பிரதேசம் 12
அசாம் 18 பீகார் 10
சண்டிகர் 04
சட்டிஸ்கர் 22
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 26
தமன் மற்றும் தியூ 25
டெல்லி 07
கோவா 30
குஜராத் 24
ஹரியானா 06
ஹிமாச்சல பிரதேசம் 02
ஜம்மு மற்றும் காஷ்மீர் 01
ஜார்கண்ட் 20
கர்நாடகம் 29
கேரளா 32
லட்சத்தீவுன் தீவுகள் 31
மத்தியப் பிரதேசம் 23
மகாராஷ்டிரா 27

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to find a fake GST bill in Spot

How to find a fake GST bill in Spot
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X