வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி திடீர் நிதியுதவி எதற்காக..?

Posted By: கிருஷ்ணமூர்த்தி
Subscribe to GoodReturns Tamil

இந்திய வங்கிகளில் இருக்கும் ஆபத்து நிறைந்த கடன் மற்றும் சொத்துக்களின் (NPA) மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் வராக் கடன் என்பது மிகப்பெரிய தொகை. 

முக்கிய அறிவிப்பு

மேலும் பல வங்கிகளின் வராக் கடன் அளவு ஆபத்து கட்டத்தையும் தாண்டி உயர்ந்து வருகிறது. இதனால் வங்கிகள் திவாலாகும் நிலைக்குக் கூடத் தள்ளப்படலாம். இத்தகைய சூழ்நிலையைத் தடுக்கவே மத்திய அரசு அவசர அவசரமாகச் செவ்வாய்க்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

நேற்றை அறிவிப்பின் உண்மை பின்னணி என்ன?

ரூ. 2.11 லட்சம் கோடி

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளைக் காக்கும் பொருட்டு மத்திய அரசின் ஒப்புதல்களுடன் நிதியமைச்சகம் 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை உட்செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவரச அறிவிப்பு

இதில் 1.35 லட்சம் கோடி ரூபாயைப் பத்திர விற்பனை மூலம் பெறப்படும் எனத் தெரிவித்த அருண் ஜேட்லி அதை யார் வெளியிடுவார்கள், வட்டி என்ன, முதிர்வு காலம் என்ன என்ற எவ்விதமான தகவல்களையும் நேற்று வெளியிடவில்லை.

பணமதிப்பிழப்பு.. பணப்புழக்கமும்..

பணமதிப்பிழப்புக்குப் பின் வங்கிகளில் பணம் முழுமையாகத் திரும்பி வந்த பின்பு, தற்போது நாட்டின் பணப்புழக்கம் சந்தை 90 சதவீத நிலையை அடைந்துள்ளது என அரசு ஆய்வு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கிகளில் வராக்கடன் குறைவாக இருந்திருந்தால் நிதி தேவை கிடையாது.

தேர்தல் நாள்

எவ்விதமான திட்டமிடலும் இல்லாமல் நிதியமைச்சகம் நிதி உட்செலுத்தல் குறித்து அறிவிக்க முக்கியக் காரணம் குஜராத் மாநிலத்தின் தேர்தல் நாள் இன்று அறிவிக்கப்பட்டது தான்.

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 9, 14 நாட்களில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும்.

ஹிமாச்சல பிரதேசத்தில் வருகிற நவம்பர் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

 

தேர்தல் வாய்ப்பு

நிதியமைச்சகத்தின் 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதி உட்செலுத்தும் அறிவிப்பு மூலம் வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை மறைந்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பின் மூலம் இரு மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் பாஜக தனது வெற்றி வாய்ப்பைக் கூட்டியுள்ளது.

காரணத்தைக் கண்டறிய வேண்டும்

வராக் கடன் மற்றும் சிக்கலில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி, அதனைக் குறைப்பது எப்படி என ஆய்வு செய்வதை விட்டுவிட்டுத் தொடர்ந்து நிதியைச் செலுத்தி வருகிறது மத்திய அரசு.

இந்திய வங்கிகளின் வராக் கடன் அளவு தொடர்ந்து உயரும் பட்சத்தில் வங்கிகள் திவாலாவது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரமும் சீர்குலையும்.

 

ஏர் இந்தியா

தொடர் நிதி உட்செலுத்துவதன் மூலம் என்ன ஆகும் என்பதற்குச் சரியான உதாரணம் ஏர் இந்தியா. வர்த்தகத்தை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் முக்கிய நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏர் இந்தியா மீது வெறுப்பு உருவாக்குவதைக் கவனிக்காமல் அரசுகள் மாறிமாறி பணத்தைக் கொட்டியது. இதனால் தற்போது கடன் அளவு மலையாய் உயர்ந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது ஏர் இந்தியா.

வங்கி திவால்

இந்தியாவில் வராக்கடன் அளவு தொடர்ந்து உயர்ந்தால் நாட்டின் முன்னணி வங்கிகளாக இருக்கும் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கியும் திவாலாகும் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இந்தியாவின் லேமென் பிரதர்ஸாக ஐசிஐசிஐ, எஸ்பிஐ வங்கிகள்.. ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்..!

 

எஸ்பிஐ வங்கி இணைப்பு

வராக் கடன் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டாகவே எஸ்பிஐ வங்கியின் கிளை வங்கிகள் இணைக்கப்பட்டது எனப் பல பொருாதார அறிஞர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் 2019

அதேபோல் நேற்று அறிவிக்கப்பட்ட 85,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலை திட்டமும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மக்களை ஈர்ப்பதற்காகவே அறிவிக்கப்பட்ட திட்டம் எனச் சந்தையில் கருத்து நிலவுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல்

மத்திய அரசுக்கு நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு நிலவி வரும் காரணத்தால் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மக்களை ஈர்க்கவும், நம்பிக்கை அளிக்கவும் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பானியும் அதானியும்

அம்பானியும் அதானியும் கொடுக்க வேண்டிய கடன் தொகை, கேட்டா ஆடிப்போயிடுவிங்க..!

அது கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரகுராம் ராஜன் ஆர்பிஐ தலைவராக இருக்கும் போது வெளியான தகவல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bad loans and stressed assets in banks estimated at 10 trillion rupees

Bad loans and stressed assets in banks estimated at 10 trillion rupees
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns