இந்தியாவில் வணிகம் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

உலக வங்கி இந்தியாவில் எளிமையாகத் தொழில் தொடங்குவதில் பல மடங்கு முன்னேறி உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ள அதே நேரத்தில் இந்தியாவில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டும் என்ற ஒருவரின் கனவுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.

இதோ உங்களுக்காக அவரின் கனவு, உழைப்பு பற்றிய உண்மை கதை.

6 வருட போராட்டம்

விமான ஓட்டுநரான அமோல் யாதவ் மும்பையில் உள்ள கண்டுபிடிப்பாளர், இவர் வீட்டு மொட்டை மாடியில் 6 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யும் விமானத்தினை உருவாக்கியுள்ளார். ஆனால் இதனைப் பறக்க அளிக்க வேண்டிய அனுமதியினை இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இவருக்கு வழங்கவில்லை.

மேக் இன் இந்தியா என்பது என்ன வெறும் மேடை பேச்சுக்கு தானா?

யாதவின் இந்தக் கனவிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காதது சும்மா மேடைப் பேச்சுக்கு தான் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவருடைய இந்த முயற்சியை ஊக்குவிக்க மகாராஷ்டிரா அரசு இடன் கொடுத்து அரசியல் ரீதியாக முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

கடுமையான விதிகள்

யாதவின் இந்தக் கனவு தகர்ந்ததற்கு முக்கியக் காரணம் விமானப் போக்கு வரத்துத் துறை நீண்ட நாட்களாக இவரது திட்டத்தினைக் கிடப்பில் போட்டதே ஆகும். 2014-ம் ஆண்டு விமானப் போக்கு வரத்துத் துறை நிறுவனங்கள் மட்டுமே விமானங்களை உற்பத்தி செய்ய முடியும் என்று சட்டத் திருத்தியது.

மோடியின் தலையீடு

இதனால் இந்தத் திட்டத்தினை மோடியிடம் மகார்ஷ்டிரா அரசு கொண்டு செல்ல பிரதமர் தலையீட்டிற்குப் பிறகு செவி சாய்த்த விமானப் போக்குவரத்துத் துறை காலத் தாமதம் ஏதும் செய்யாமல் காற்று தகுதி சோதனையினைச் செய்து காட்டு வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதைப் பார்க்கும் போது புதிய கண்டுப்பிடுப்புகளுக்கு இங்கு அனுமதி பெறுவது என்பது பெறும் தலைவலியாக இருக்கும் என்பது தெரிகின்றது.

 

முக்கியப் பிரச்சனை

இந்தியாவில் இது வரை ஒற்றை இஞ்சின் கொண்ட விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்ததில்லை. இந்தத் திட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா எனப் பொருத்து இருந்து பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Doing business in India may not be all that easy still

Doing business in India may not be all that easy still
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns