பிளிப்கார்ட் தலைவர்கள் மீது பாய்ந்த ‘மோசடி’ வழக்கு!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் மற்றும் மூன்று முக்கிய ஊழியர்கள் மீது மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்த வணிகர் ஒருவர் தன்னிடம் 9.96 கோடி ரூபாயினை ஏமாற்றியதாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து இவர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் முகாந்திரம் ஏதும் இல்லை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்கள் இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் புகர்களுக்கும் மறுப்பும் தெரிவித்துள்ளனர்.

வழக்கில் தடர்புடையவர்கள்

பெங்களூரைச் சேர்ந்த இந்திரா நகர் காவல் துறையினர் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் மற்றும் விற்பனை இயக்குனர் ஹரி, கணக்குத் துறை நிர்வாகி சுமித் ஆணந்த் மற்றும் ஷாராகியூ உள்ளிட்டோர் மீது சி-ஸ்டோர் நிர்வாகி நவீன குமார் அளித்த புகாரை பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கையினைப் பதிவு செய்துள்ளனர்.

எதனால் புகார் அளிக்கப்பட்டுள்ளது?

சி-ஸ்டோர் அளித்த புகாரில் 2015-ஜூன் முதல் 2016 ஜூன் வரை பிளிப்கார்ட் நிறுவனம் தன்னிடம் இருந்து 14,000 மடிக் கணினிகளைப் பெற்றுக்கொண்டதாகவும், அதில் விற்பனையாகாததைத் திருப்பி அளித்த பிறகும் தனது அளிக்க வேண்இய 9.96 கோடி ரூபாய் பணத்தினை அளிக்கவில்லை என்ற கூறப்பட்டுள்ளது.

வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரிவுகள்

இந்திரா நகர் காவல் துறையினைப் புகாரை பெற்றுக்கொண்டு ஐபிசி பிரிவு 34 (பொதுவான நோக்கம்), 406 (நம்பிக்கை துரோகம்), 420 (மோசடி) உள்ளிட்ட பிறிவுகளில் வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வழக்கைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள முடிவு

பிளிப்கார்ட் நிறுவனம் தங்களது நலன்களைப் பாதுகாக்கும் அனைத்துச் சட்ட சாத்தியக்கூறுகளையும் ஆராய்கிறது என்றும் இந்த அவதுர வழக்கைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நித்தின் சேத்

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இ-காமர்ஸ் நிறுவனத்தின் மீது முன்னால் தலைமை இயக்க அதிகாரியான நித்தின் சே தன்னைப் பணியில் இருந்து நீக்கியதற்கு எதிராகவும் அன்மையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

யார் இந்த நித்தின் சேத்?

நித்தின் சேத் பிளிப்கார்ட் நிறுவனத்தில் தலைமை இயக்க அதிகாரியாக மட்டும் இல்லாமல் இ-கார்ட் எனப்படும் லாஜிஸ்டிக் பிரிவு மற்றும் வாடிக்கையாளர்கள் அனுபவ பிரிவையும் கவனித்து வந்துள்ளார்.

கிருஷ்னமூர்த்தி

பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் முன்பு ஃபிடிலிட்டி இண்டர்னேஷனல் இந்தியாவில் நிர்வாக இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கிருஷ்ணமூர்த்திப் பொறுப்பேற்கும் போது நித்தின் சேத் தலைமை இயக்க அதிகாரிக்காக இருந்துள்ளார்.

ஆனால் கிருஷ்ணமூர்த்தி வருகைக்குப் பிறகு இவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Flipkart co founders booked for ‘cheating’ businessman

Flipkart co founders booked for ‘cheating’ businessman
Story first published: Tuesday, November 28, 2017, 15:55 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns