தவறை ஒப்புக்கொண்ட ஏர்டெல்.. மக்கள் பீதி அடைய வேண்டாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய தனிநபர் அடையாள ஆணையம் திங்கட்கிழமை ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனங்கள் இரண்டும் ஆதார் மின்னணு சரிபார்ப்புச் சேவையினை முறைகேடாகப் பயன்படுத்திக் கோடிக் கணக்கில் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளில் வைத்து இருப்பதாகவும் இது ஏர்டெல் மொபைல் பயனர்களுக்கே தெரியாது என்றும் எனவே ஏர்டெல் நிறுவனத்திற்கு அதார் மின்னணு சரிபார்ப்பு சேவையில் இருந்து உடனடியாக இடைக்காலத் தடை விதிப்பதாகவும் தெரிவித்தது.

 

தற்போது அந்த ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் உள்ள பணத்தைத் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ள நிலையில் என்ன நடந்தது என்ற முழு விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியும் கூட்டு சேர்ந்து ஏர்டெல் சிம் வாங்கும் பயனர்களுக்கு மின்னணு ஆதார் அடையாள சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் பெயரில் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கை திறந்து இருப்பது தெரிய வந்தது.

பேமண்ட்ஸ் வங்கி சேவை துவங்கி இருந்தால் மட்டும் பரவாயில்லை, எல்பிஜி மானியம் பெறுவதற்கான தேர்வாகவும் ஏர்டெல் பெமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.

 

எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

இந்திய தனிநபர் அடையாள ஆணையமானது சென்ற வாரத்தில் ஏர்டெல் மொபைல் செயலியினை மறு ஆய்வு செய்த போது தான் ஏர்டெல் நிறுவனம் இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மானியம் தொகை தங்களது பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் இருப்பதே தெரியாமல் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்துள்ளனர்.

ஒப்புக்கொண்ட ஏர்டெல்?
 

ஒப்புக்கொண்ட ஏர்டெல்?

ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மின்னணு ஆதார் சரிபார்ப்பு சேவைக்கு இடைக்காலத் தடை விதித்த பிறகு ஏர்டெல் நிறுவனம் செய்த மோசடியினை ஒப்புக்கொண்டது.

 

 

தவரை ஒப்புக்கொண்டால் போதுமா?

தவரை ஒப்புக்கொண்டால் போதுமா?

ஏர்டெல் நிறுவனம் தாங்கள் முறைகேடாகச் செய்த தவரை ஒப்புக்கொண்டது மட்டும் இல்லாமல், தங்களிடம் உள்ள 190 கோடி ரூபாய் பணத்தினை வட்டியுடன் திருப்பிச் சம்மந்தப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தி விடிகிறோம் என்று கூறியுள்ளது.

எவ்வளவு வாடிக்கையாளர்கள்?

எவ்வளவு வாடிக்கையாளர்கள்?

ஏர்டெல் மொபைல் எண் பயனர்களில் மொத்தம் 31 லட்சம் நபர்கள் இதுப்போண்று சிக்கியுள்ளனர். எனவே இதுப்போன்று உங்கள் எண்ணும் எல்பிஜி மானியமும் மாற்றப்பட்டுள்ளதா என்று வாடிக்கையாளர்கள் சரிபார்த்துக்கொள்வது நல்லது.

<strong>உங்கள் ஆதார் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா..? கண்டுபிடிப்பது எப்படி? </strong>உங்கள் ஆதார் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா..? கண்டுபிடிப்பது எப்படி?

 

எண்ணெய் நிறுவனங்கள்

எண்ணெய் நிறுவனங்கள்

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த முறைகேட்டினை அறிந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு மானியத்தினைத் திருப்பி அளிக்குமாறும் அல்லது வாடிக்கையாளர்களின் விவரங்கள் மற்றும் பணத்தினைத் தங்களிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 மின்னணு ஆதார் சரிபார்ப்பு முறை என்றால் என்ன?

மின்னணு ஆதார் சரிபார்ப்பு முறை என்றால் என்ன?

e-KYC எனப்படும் மின்னணு ஆதார் சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்தி எந்த ஒரு பேப்பர் ஆவணங்களும் இல்லாமல் ஆதார் எண் மற்றும் பையோமெட்ரிக் விவரங்களைப் பெற்றுக்கொண்டு சிம், கார்டு அல்லது பிற சேவைகளை அளிக்கலாம். தற்போது உச்சநீதிமன்றத்தின் வலியுறுத்தலின் படி அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆதார் விவரங்களை e-KYC ஆகப் பெற வேண்டும் உத்தரவிட்டுள்ளது. மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 கடைசித் தேதி ஆகும்.

புதிய பணியிடம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்

புதிய பணியிடம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்

<strong>பிரதமர் அலுவலகத்தில் இப்புதிய பணியிடம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்.. சொல்வது யார் தெரியுமா..?</strong>பிரதமர் அலுவலகத்தில் இப்புதிய பணியிடம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்.. சொல்வது யார் தெரியுமா..?

உபர் நிறுவனத்தை காப்பி அடிக்கும் ஓலா..

உபர் நிறுவனத்தை காப்பி அடிக்கும் ஓலா..

<strong>உபர் நிறுவனத்தை காப்பி அடிக்கும் ஓலா.. ஸ்டார்ட்அப் சந்தையில் புதிய போட்டி..!</strong>உபர் நிறுவனத்தை காப்பி அடிக்கும் ஓலா.. ஸ்டார்ட்அப் சந்தையில் புதிய போட்டி..!

ரூ.8,000 கோடி கருப்புப் பணம் சிக்கியது

ரூ.8,000 கோடி கருப்புப் பணம் சிக்கியது

<strong>வருமான வரித்துறையின் அதிரடி வேட்டையில் ரூ.8,000 கோடி கருப்புப் பணம் சிக்கியது..!</strong>வருமான வரித்துறையின் அதிரடி வேட்டையில் ரூ.8,000 கோடி கருப்புப் பணம் சிக்கியது..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In LPG subsidy diversion issue Airtel promises to return Rs 190 crore to original bank accounts

In LPG subsidy diversion issue Airtel promises to return Rs 190 crore to original bank accounts
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X