2ஜி வழக்கு எதிரொலி மத்திய அரசுக்கு வந்த அடுத்த தலைவலி..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் என்று கூறப்பட்டு வந்த 2ஜி வழக்கில் உரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வந்த நபர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து நிறுவனங்களும் விடுதலை செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து விடியோகான் டெலிகாம் நிறுவனம் சிபிஐ உயர் நீதிமன்றம் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று கூறியுள்ளதால் 10,000 கோடி ரூபாய் இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

இழப்பு

விடியோகான் நிறுவனத்திற்கு இந்த வழக்கால் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் 10,000 ரூபாய்க்கு மட்டும் இழப்பீடு கேட்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

2ஜி வழக்கு

2008-ம் ஆண்டு 2ஜி அலைகாற்று ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்து இருப்பதாக அப்போது டெலிகாம் துறை அமைச்சராக இருந்த ஆ ராசா போன்றோர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நடந்து வந்த காலக் கட்டத்தில் 122 2ஜி ஸ்பெக்டர்ம் டெலிகாம் உரிமம் வழங்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

விடியோகான்

விடியோகாம் நிறுவனம் இந்த நேரத்தில் 1,500 கோடி ரூபாய் கொடுத்து 15 2ஜி அலைகாற்று உரிமங்களை டெலி நிறுவனம் துவங்க வாங்கியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து பிஹார், உத்திர பிரதேசம் (கிழக்கு), உத்திர பிரதேசம் (மேற்கு), ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகியவற்றில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விடியோகான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 2,221.44 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

கடன்

மேலும் விடியோகான் டெலிகாம் நிறுவனம் வணிகத்தினைப் பெருக்க 25,000 கோடி ரூபாய் வரை கடன் வங்கி முயற்சி செய்தும் பெரிதாக எடுபடவில்லை. பின்னர் 2012-ம் ஆண்டுத் தன் வசம் இருந்த ஸ்ப்டர்மகளைத் திருப்பி அளிக்க ஏர்டெல் நிறுவனம் இதனைக் கைப்பற்றியது.

பிற நிறுவனங்கள்

விடியோகான் நிறுவனத்தினை அடுத்துப் பிற டெலிகாம் நிறுவனங்களும் மத்திய அரசிடம் ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டால் வந்த கூடுதல் செலவுகளைக் கேட்பது குறித்து விவாதித்து வருவதாக நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

2G spectrum case: Videocon Telecommunications to file Rs 10,000 crore damage claim against government

2G spectrum case: Videocon Telecommunications to file Rs 10,000 crore damage claim against government
Story first published: Sunday, December 24, 2017, 12:04 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns