பெண் தொழில் முனைவோருக்கான 7 சிறந்த பிஸ்னஸ் லோன் திட்டங்கள்!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் படி இந்தியாவில் பல விதமான திட்டங்கள் உள்ளது. அதிலும் இந்தியாவில் தொழில் துவங்க வேண்டும் என்கின்ற பெண்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கப்படுகிறது

தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஆர்வம் காட்டும் அதே நேரம் சிலர் என்ன வணிகம் துவங்க வேண்டும் என்ற எண்ண இல்லாமல் இருப்பதால் பின் வரும் திட்டங்கள் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு தெளிவாக முடிவை எடுங்கள்.

1. அன்னபூர்ணா திட்டம்

சிறிய அளவில் டிபன் சேவை, பேக்டு ஸ்னாக்ஸ் போன்று உணவுப் பொருட்கள் அல்லது கேட்டரிங் சேவையினைத் துவங்க அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை எஸ்பிஐ வங்கிக் கடன் அளிக்கிறது. இந்தக் கடனை 36 மாதத்தில் திருப்பி அளிக்க வெண்டும். கடன் பெறுபவர்கள் மூலதனமாகச் சமையலுக்குத் தேவையான சாதனங்களை வாங்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அன்னபூர்னா திட்டம் கீழ் கடன் பெறும் போது ஒரு மாதம் தவனை மட்டும் இலவசம் ஆகும். கடன் பெற சொத்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வட்டி விகிதம் என்பது சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு இருக்கும்.

 

2. உதயோகிணி திட்டம்

ஸ்மால் ஸ்கேல் பிஸ்னல், ரீடெய்ல் மற்றும் விவசாயக் கடன் போன்றவற்றைப் பஞாப் மற்றும் சிண்டு வங்கி அளிக்கிறது. விதிமுறைகள் நெகிழ்வானவை, மற்றும் வட்டி விகித சலுகைகளும் உள்ளன. 18 வயது முதல் 45 வயது உடையப் பெண்கள் 1 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். கடன் பெறும் போது உங்கள் குடும்ப வருவாய் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

3. ஸ்ரீ சக்தி பேக்கேஜ்

எஸ்பிஐ வங்கி வழங்கும் இந்தக் கடன் பேக்கேஜ் ஆனது 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் கடன் அளிக்கும். 2 இலட்சம் ரூபாய்க்கும் கூடுதலாகக் கடன் பெறும் போது 0.5 சதவீதத்தை வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படும். என்ன தொழிலிற்காகக் கடன் பெறுகிறார்கள் என்பதைப் பொருத்துச் சலுகைகள் மாறும்.

4. தேனா சக்தி திட்டம்

தேனா வங்கி இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயம், சிறு நிறுவனங்கள், ரீடெய்ல் டிரேடு, மைக்ரோ கிரெட்ட், கல்வி மற்றும் ஹவுசிங் திட்டத்தின் கீழ் பெண்களுக்குக் கடன் அளித்து உதவுகிறது.

அதிகபட்ச கடனை பொருத்து வட்டி விகிதமும் மாற்றி அமைக்க வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் போது 0.25 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் அளிக்கப்படுகிறது.

 

5. மகிலா உதையன் நிதி திட்டம்

பெண்களால் நிர்வகிக்கப்படும் சிறு நிறுவனங்களுக்குக் கடன் அளிக்கப் பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. புதிதாகத் துவங்கப்படும் நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் ஏற்கனவே நடத்தி வரும் வணிகத்திற்கும் கடன் அளிக்கப்படுகிறது.

6. செண்ட் கல்யாணி திட்டம்

சிறிய அளவில் உற்பத்தி மற்றும் சேவை துறையில் வணிகம் செய்ய விரும்பும் பெண்களுக்குச் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கடன் அளித்து உதவுகிறது. கைவினை தயாரிப்பாளர்கள், தையல்காரர்கள், மருத்துவர்கள், ப்யூட்டி பார்லர்கள், ஆடை தயாரித்தல், போக்குவரத்துத் தொழில்கள், முதலிய வணிகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதிகபட்சம் 100 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கின்றனர். ரீடெய்ல் வணிகங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்படாது. நிறுவனத்தினைத் துவங்க மூலதனம் மற்றும் சதங்களை வாங்க கடனை இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கின்றனர்.

7. பெண்களுக்கான முத்ரா யோஜனா திட்டம்

மத்திய அரசால் பெண்கள் தனியாகப் பியூட்டி பார்லர், ஆடைகள் தைத்தல், டியூஷன் வகுப்புகள் எடுப்பது போன்ற காரணங்களுக்காக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் புற நகர் இல்லா பகுதிகளில் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இவர்களுக்கு முத்ரா கார்டும் வழங்கப்படும்.

கூடுதல் குறிப்புகள்

சில மதிப்புதக்க வங்கிகள் பெண்களுக்கு வணிகம் மட்டும் இல்லாமல் தனிப்பட்ட செலவுகளுக்கும் கடன் அளித்து வருகிறது.

ஆண்களுக்கு அளிக்கப்படும் 2 சதவீத வட்டி விகிதம் மட்டும் இல்லாமல் 1.5 சதவீதத்தில் பெண்களுக்குக் கல்விக் கடனை அளிக்கிறது.

பெண்களுக்காகக் கிராமங்களில் கழிப்பறை கட்டவும் இந்திய வங்கிகள் கடன் அளிக்கின்றன.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Business Loan Schemes For Women Entrepreneurs in India

7 Business Loan Schemes For Women Entrepreneurs in India
Story first published: Sunday, January 14, 2018, 14:05 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns