பிப்.1 பட்ஜெட் தாக்கல்.. 100% லாபம் பெற இதல முதலீடு செய்யலாம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் துவண்டுபோய்கிடக்கும் வர்த்தகச் சந்தை முழுவதும் பிப்.1 ஆம் தேதிநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை எதிர்நோக்கியகாத்துக்கிடக்கிறது.

வர்த்தகச் சந்தையைத் தாண்டி இதனை நம்பியிருக்கும் முதலீட்டாளர்களும் பல்வேறு காரணிகளை அடிப்படையில்முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர். பட்ஜெட் அறிக்கை பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரிய அளவிலான தாக்கத்தைஏற்படுத்தும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இத்தகைய சூழ்நிலையில் பட்ஜெட் அடிப்படையாகக் கொண்டு நீண்டகால அடிப்படையில் எந்த நிறுவனங்களில்முதலீடு செய்யலாம் என்பதைக் கணிக்க உதவும் வகையில் கடந்த ஒரு வருடத்தில் பங்கு சந்தையில் எந்தத் துறைபங்குகள் அதிகளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

பட்ஜெட் 2017-18

கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையின் முழுமையான கவனிப்பு உள்நாட்டு உற்பத்தியைக்கவனிப்பதில் இருந்தது. அதிலும் முக்கியமாக விவசாயம், ஊரக வளர்ச்சி, உள்கட்டுமானம் ஆகிய பிரிவில் மத்திய அரசுபெரிய அளவில் முதலீடு செய்தது.

பட்ஜெட் 2018-19

இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை வருகிற பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்நிலையில், நடப்பு நிதியாண்டில் டெக்ஸ்டைல், ஆட்டோ, உணவு பதப்படுத்தல், கட்டுமானம், நிதியியல், விவசாய உரம்ஆகிய துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இரட்டிப்பு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது ஜனவரி 15, 2018 நிலவரத்தின் படி கணக்கிடப்பட்டுள்ளது.

 

விவசாயத் துறை

இத்துறையில் கடந்த ஒரு வருடத்தில் ஜிஎன்எப்சி, சாம்பல் பெர்டிலைசர்ஸ், மேக்மணி ஆர்கானிக்ஸ் ஆகியநிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிகப்படியாக 101 சதவீதம், 123 சதவீதம், 160 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

விவசாய இயந்திரங்கள்

விவசாயத் துறைக்குத் தேவையான இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனமான எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள்கடந்த ஒரு வருடத்தில் 378 ரூபாயில் இருந்து 804 ரூபாய் வரையில் உயர்ந்து சுமார் 112 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல் துறை சார்ந்த துணை நிறுவனங்களான மின்டா இண்டஸ்ட்ரீஸ், என்டியூரன்ஸ் டெக்னாலஜிஸ், பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை கடந்த ஒரு வருடத்தில் 248 சதவீதம், 114 சதவீதம், 103 சதவீதம் வரையில்உயர்ந்துள்ளது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் நாட்டின் முன்னணி நிறுவனங்களாகத் திகழும் சன்டெக் ரியாலிட்டி, ஷோபா மற்றும் காட்ரிஜ் பிரோபர்டீஸ் ஆகிய நிறுவனங்கள் பிப்.1 2017 முதல் ஜனவரி 15, 2018 இடைப்பட்ட காலத்தில் 228 சதவீதம், 121 சதவீதம், 139 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

உள்கட்டமைப்பு

ரியல் எஸ்டேட் துறையைப் போல உள்கட்டமைப்புத் துறையில் திலிப் புலிகான் நிறுவனம் பிப்.1 2017 முதல் ஜனவரி 15, 2018 இடைப்பட்ட காலத்தில் 288 சதவீத அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உணவு நிறுவனங்கள்

இத்துறையில் அவென்டி பீட்ஸ் 350 சதவீதமும், வெங்கி இந்தியா நிறுவனம் 409 சதவீதமும், ஜூப்லியன்ட் 114 சதவீதம்அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

டெக்ஸ்டைல்

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ரேமண்டு 126 சதவீதமும், பாம்பே டையிங் 415 சதவீதமும், அதானிஎன்டர்பிரைசர்ஸ் 118 சதவீதமும், விமார்ட் 223 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

வங்கி துறை அல்லாத நிதி நிறுவனங்கள்

இத்துறையில் இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ் நிறுவனம் பிப்.1 2017 முதல் ஜனவரி 15, 2018 இடைப்பட்ட காலத்தில் மட்டும்சுமார் 1,203 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

இதைத் தாண்டி இத்துறையில் திவான் ஹவுசிஸ் பைனான்சிஸ், மோதிலால் ஆஸ்வால் பைனான்ஸ், யெடெல்விஸ் பின், ஜேம் பைனான்சியல், சென்டிரம் கேபிட்டல் ஆகிய நிறுவனங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைஅடைந்துள்ளது.

 

முக்கியத் துறைகள்

இந்நிலையில் இந்த வருடத்தின் பட்ஜெட் அறிக்கையில் விவசாயத் துறை சார்ந்த நிறுவனங்கள், கல்வி, சுகாதாரம், மலிவான வீடுகள் பிரிவில் இத்துறைக்குச் சாதகமான அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget help stocks in long run..Stocks doubled since Budget 2017

Budget help stocks in long run..Stocks doubled since Budget 2017
Story first published: Tuesday, January 23, 2018, 11:11 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns