உங்கள் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? உஷார் அதற்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ஆதார் கார்டு விவரங்களைத் திருத்தம் செய்யாமல் இருக்கின்றீர்களா, உஷார்.. விரைவில் ஆதார் கார்டு திருத்தம் செய்வதற்கான கட்டணத்திற்கும் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க இருப்பதாக இந்திய தனி நபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

 

ஊடகங்களுக்குக் கிடைத்துள்ள செய்திகளின் படி சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கீழ் ஆதார் திருத்தத்திற்கும் சேவை என்று வரி விதிக்கப்பட இருக்கின்றது என்று கூறுகின்றனர்.

கட்டணம் எவ்வளவு?

கட்டணம் எவ்வளவு?

தற்போது ஆதார் மையங்களில் முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், பாலினம் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் திருத்த 25 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் பையோமெட்ரிக் போன்ற தகவல்களைத் திருத்த 25 ரூபாய் கட்டணமும் வசூலிக்கின்றனர். இதுவே குழந்தைகளுக்கு இலவசமாகத் திருத்தம் செய்யப்படுகிறது.

 

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஆதார் கார்டு திருத்தங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படத் துவங்கினால் கூடுதலாக 4 ரூபாய் 50 காசுகள் கட்டணத்தினைச் செலுத்த வேண்டி வரும். 50 காசுகள் தற்போது பயன்பாட்டில் இல்லை என்பதால் 30 ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

 உதவி மையம்
 

உதவி மையம்

ஆதார் குறித்து மக்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு 1957 என்ற இலவச எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலைத் தொடர்புகொள்க.

 குழந்தைக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி?

குழந்தைக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி?

குழந்தைக்கு அடையாள் அட்டை அல்லது முகவரி சான்றிதழ் இல்லை என்றால் ஆதார் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

பிறந்த குழந்தைக்கு அடையாள ஆவணங்கள் மற்றும் முகவரி சான்றிதழ் போன்ற இருக்காது என்பதால் பெற்றோர் தங்களது ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றை வைத்து ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். 5 வயதுக்கு உடப்படக் குழந்தைகளுக்கு நீல நிற அட்டை வழங்கப்படும். இது 5 வயது வரை மட்டுமே செல்லும். பின்னர் வேறு ஆதார் கார்டினை பெற வேண்டும்.

 

ஆதார் திருத்தம் செய்யத் தேவையான ஆவணங்கள்

ஆதார் திருத்தம் செய்யத் தேவையான ஆவணங்கள்

அதார் திருத்தம் செய்யப் பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி பாஸ்புக் என 18-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அடையாள மற்றும் முகவரி சான்றாக ஏற்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Want to update your Aadhaar? Get ready to pay more as UIDAI may impose 18% GST

Want to update your Aadhaar? Get ready to pay more as UIDAI may impose 18% GST
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X