மாதம் ரூ.1 லட்சம் கோடி வருமானம்.. மோடி அரசின் புதிய திட்டம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

2019ஆம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என மோடி அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.

இதன் காரணமாகவே பட்ஜெட் அறிக்கையில் மருத்துவக் காப்பீடு, விவசாயிகளுக்கு 1.5 மடங்கு அதிக வருமானம், சமானியர்களுக்கு ஸ்டான்டார்டு டிடெக்ஷன் ஆகியவை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்புகளிலும் மக்களுக்குப் பெரிய அளவிலான நன்மைகள் ஏதுமில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், மாதம் 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் வருமானத்தை அடையத் திட்டங்களைத் தீட்டி வருகிறது மத்திய நிதியமைச்சகம்.

1 லட்சம் கோடி ரூபாய்

மோடி அரசு அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி பல்வேறு பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வரும் நிலையில், இதன் மூலம் அடுத்த நிதியாண்டின் முடிவிற்குள் மாதம் 1 லட்சம் ரூபாய் அளவிலான வரி வருமானத்தைப் பெறும் அளவிற்கு வரி ஏய்ப்பு தடுக்கும் வழிமுறைகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தரவுகள் ஓப்பீடு

வரி ஏய்ப்பு தடுக்கும் வழிமுறையில் வரித் தகவல்கள் மற்றும் இணைய வழி (E-Way) பில்களை ஒப்பிட்டு தரவுகளை எடுத்து வரி ஏய்ப்புச் செய்பவர்களைக் கண்டுப்படிக்க உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரி தாக்கல்

ஜிஎஸ்டி வரித் தாக்கல்கள் நிலைப்பெற பின்பு Directorate General of Analytics and Risk Management அமைப்பு 360 கோணத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும் நபர்களின் வருமான வரித் தாக்கல்களை ஒப்பிட்டுச் சரி பார்க்க உள்ளதாக நிதியமைச்சகம் தெரிலித்துள்ளது.

பணி துவக்கம்

2018-19ஆம் நிதியாண்டின் பாதியில் அதாவது 2018 செப்டம்பர் மாத காலத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்தவர்களின் வருமான வரி தாக்கல் அறிக்கையை ஒப்பீடு செய்து தகவல்களைத் திரட்டும் பணிகள் துவங்கப்படும் என நிதியமைச்சகத்தின் ஆதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பொய் கணக்குக் கூறுபவர்கள் சிக்கிக்கொள்வார்கள் என்பது நிதியமைச்சகத்தின் நம்பிக்கை.

 

5 லட்சம் வரை

ஜிஎஸ்டி வரி அமைப்பில் இணைந்துள்ள நிறுவனங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களின் ஆண்டு விற்பனை அளவை வெறும் 5 லட்சமாக மட்டுமே காட்டியுள்ளது.

10 லட்ச நிறுவனங்களின் ஆண்டு விற்பனை அளவுகள் 7 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என வரி தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் 20 லட்ச நிறுவனங்கள் முழுமையான வரி விலக்கு பெற்றுள்ளது.

 

தங்கம் மற்றும் தங்க நகை

மேலும் ஜிஎஸ்டி வரி தாக்கல் தரவுகளுடன் தங்கம் மற்றும் தங்க நகை வாங்குபவர் மற்றும் விற்பவர்களின் தரவுகளைச் சரிபார்க்கும் பணிகளில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தவும் நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வரி வசூல் மற்றும் இலக்கு

கடந்த 8 மாதம் அதாவது ஜூலை 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான காலத்தில் ஜிஎஸ்டி வரி வசூலின் அளவு 4.44 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் அளவு 7.44 லட்சம் கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் மாத வர்த்தகத்தின் வரி ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்பதைக் கவனிக்க வேண்டும்.

 

வரி செலுத்துவோர்

டிசம்பர் 2017 வரை சுமார் 98 லட்சம் வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

ரிஸ்க் அதிகம் லாபம் ஜாஸ்தி

ரிஸ்க் அதிகம் ஆனால் லாபம் ஜாஸ்தி.. பங்கின் விலையோ வெறும் ரூ. 50..!

புதிய அந்தஸ்து!

சென்னைக்கு இல்லாத பெருமை மும்பைக்கு கிடைத்தது.. உலகளவில் புதிய அந்தஸ்து!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After this GST revenue touch 1 lakh crore a month: New Plan

After this GST revenue touch 1 lakh crore a month: New Plan
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns