இந்திய வங்கிகளை டிரை கிளீன் செய்யும் ரிசர்வ் வங்கி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் வங்கிகளில் வாராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்தது.

 

இந்நிலையில் வாராக் கடன் பிரச்சனையை மற்றும் அதன் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கை சிறப்பாக உள்ளது பல தரப்புகள் பாராட்டி வருகிறது.

முக்கியமான நடவடிக்கை

முக்கியமான நடவடிக்கை

இப்புதிய நடவடிக்கையின் முதல் கட்டமாக நடைமுறையில் இருந்த கார்ப்ரேட் கடன் மறுசீரமைப்புத் திட்டம், SDR, S4A வரைமுறைகள் நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் திவாலாகும் சட்டதிட்ட இல்லாத காரணத்தால் மேலே குறிப்படிட்ட வரைமுறைகள் இருந்து வந்தது.

தற்போது IBC நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரைமுறைகள் எளிமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

 CRILC அமைப்பு

CRILC அமைப்பு

வங்கி 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் கடன் விபரங்களை Central Repository of Information on Large Credits அமைப்பிற்கு அளிக்க வேண்டும். இந்தக் கணக்குகள் வாராக் கடனாக மாறினால் வங்கிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் CRILC அமைப்புக்குத் தகவல் அளிக்க வேண்டும். இப்புதிய நடைமுறை பிப்.23ஆம் தேதி முதல் துவங்குகிறது.

CRILC அமைப்பு வாராக் கடன் குறித்து அறிவிப்புகளை ஒவ்வொரு மாதமும் வெளியிட வேண்டும், இது வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

6 மாத காலம்
 

6 மாத காலம்

2000 கோடி மற்றும் அதற்கு அதிகமாக இருக்கும் வாராக் கடன் கணக்குகளுக்கு 6 மாதங்களுக்குள் தீர்மான திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஆர்பிஐ அறிவித்துள்ள 180 நாட்களுக்குள் இக்கணக்குகளுக்குத் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனில் அடுத்த 15 நாட்களுக்குள் திவாலாக அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.

இந்த 6 மாதம் காலம் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் துவங்குகிறது.

ரிசர்வ் வங்கி அதிரடி

ரிசர்வ் வங்கி அதிரடி

ஆர்பிஐ ஜூன்2017இல் 12 கணக்குகளின் மீது திவால் நடவடிக்கை எடுக்க அறிவித்தது, 6 மாதங்களுக்குப் பின்பு 28 கணக்குகள் மீது திவால் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது 9 மாத இடைவேளையில் 2000 கோடி ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் அனைத்தும் திவால் நடவடிக்கை எடுக்கும் அளவிற்குப் புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கண்துடைப்பு இல்லை..

கண்துடைப்பு இல்லை..

இப்புதிய நடவடிக்கைகள் கண்துடைப்பாகத் தெரியவில்லை காரணம் CRILC அமைப்பிற்கு 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் கடன் நிலைப்பாடுகள் தொடர் தகவல் அளித்தல், 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் கடன்களை, முதலீட்டுக் கடனாக இருந்து மறுசீரமைப்பு கடனாக மாற்றுதல்.

500 கோடி ரூபாய் கடனுக்கு 2 அமைப்புகளிடம் இருந்து முதலீட்டுத் தரத்தை அளிக்க வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகள் இந்திய வங்கித்துறையை முழுமையாக மாற்றும் ஒரு நடவடிக்கையாகவே தெரிகிறது.

அபராதம்

அபராதம்

அதேபோல் தற்போது அறிவிக்கப்பட்ட வரைமுறையின் படி கால அளவுகளுக்குள் வங்கிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி அதிகப்படியான அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் வங்கிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கிகளுக்கு நெருக்கடியான சூழ்நிலை மட்டும் அல்லாமல் மக்கள் பணத்திற்கு முழுமையான நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New bad loan rules: RBI's Dry Clean method is strong

New bad loan rules: RBI's Dry Clean method is strong
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X