ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகளால் வங்கிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகளில் குவிந்துகிடக்கும் 8.5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களைக் குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வரைமுறைகளை அறிவித்துள்ளது. இப்புதிய வரைமுறை நடைமுறையில் இருக்கும் அனைத்துத் திட்டங்களையும் முழுமையாக நீக்கிவிட்டு இப்புதிய அறிவிப்புகள் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

இப்புதிய அறிவிப்பால் வங்கித் துறையிலும், வங்கிகளிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள், பாதிப்புகளையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

புதிய மாற்றங்கள்
 

புதிய மாற்றங்கள்

2000 கோடி மற்றும் அதற்கு அதிகமாக இருக்கும் வாராக் கடன் கணக்குகளுக்கு 180 நாட்களுக்குள் தீர்மான திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஆர்பிஐ அறிவித்துள்ள 180 நாட்களுக்குள் இக்கணக்குகளுக்குத் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனில் அடுத்த 15 நாட்களுக்குள் திவாலாக அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.

அதேபோல் 100 முதல் 2000 கோடி ரூபாய் அளவில் இருக்கும் வாராக் கடன் கணக்குகளுக்கு 2 வருடத்திற்குள் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புகள்

பாதிப்புகள்

முன்பு தீர்மானம் எடுக்கும் காலம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது வெறும் 180 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கி நிதிநிலை அறிக்கையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

 வகைப்படுத்துதல்..

வகைப்படுத்துதல்..

வங்கிகள் வாராக்கடன் பாதிப்புகள் உள்ள கடன்களை, காலத்தை மையப்படுத்தி 3 வகைகளில் special mention accounts ஆக அறிவிக்க வேண்டும்.

அதனை வங்கிகள் கடனின் அசல் தொகை அல்லது வட்டி செலுத்திய தொகை அல்லது மீதமுள்ள தொகை என விருப்பத்தின் படி வகைப்படுத்தலாம்.

SMA-0 (1-30 நாட்கள்), SMA-1 (31-60 நாட்கள்), SMA-2 (67-90 நாட்கள்)

CRILC அமைப்பு
 

CRILC அமைப்பு

வங்கி 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் கடன் விபரங்களை Central Repository of Information on Large Credits அமைப்பிற்கு அளிக்க வேண்டும்.

இந்தக் கணக்குகள் வாராக் கடனாக மாறினால் வங்கிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் CRILC அமைப்புக்குத் தகவல் அளிக்க வேண்டும். இப்புதிய நடைமுறை பிப்.23ஆம் தேதி முதல் துவங்குகிறது.

CRILC அமைப்பு வாராக் கடன் குறித்து அறிவிப்புகளை ஒவ்வொரு மாதமும் வெளியிட வேண்டும், இது வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

இப்படித் தொடர்ந்து வாராக் கடன் விபரங்களை CRILC அமைப்புக்கு அளிக்கப்படுவதால் கடன் பெற்றவர்கள் மற்றும் கடன் கொடுத்த வங்கிகளும் ஆர்பிஐ வளையத்திற்குள் (தொடர் கண்காணிப்பில்) வரும். இதனால் பிற வங்கிகளுக்கும் கவனமுடன் செயலப்படும்.

தீர்மான திட்டம்

தீர்மான திட்டம்

இப்புதிய அறிவிப்புகளின் படி அனைத்து வங்கிகளும் தீர்மான திட்டம் எடுப்பது குறித்த முடிவுகளை எடுக்க ஒற்றை நிர்வாகத்தின் கீழ் வருகிறது, இதனால் எத்தனை நாட்களுக்குத் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பது கூட நிர்வாகம் தான் முடிவு செய்யும்.

இது அனைத்து வங்கிகள், கடன் வழங்கிய அமைப்புகள், இணைந்து அளித்த கடன் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

பாதிப்பு

இதன் மூலம் வங்கிகளே வாராக் கடன் குறித்து முடிவுகளை விரைவாக எடுக்க நிர்பந்தம் செய்யும் நிலை வரைவில் உருவாக்கும்.

தீர்மான திட்டத்தில் இதுவும் உண்டு..

தீர்மான திட்டத்தில் இதுவும் உண்டு..

வாராக் கடன் கொண்டு கணக்காளர்-இன் மீது தீர்மானம் எடுக்கும் போது..

1. சொத்தின் மீது பிற வங்கிகள் அல்லது முதலீட்டாளர்களின் பங்கு இருந்தாலும் விற்பனை செய்யலாம்.

2. உரிமையாளரை மாற்றலாம்

3. கடன் மறுசீரமைப்புச் செய்யலாம்.

பாதிப்புகள்

இதனால் வாராக் கடன் உள்ள கணக்குகளுக்கான தீர்வு எளிதாக எடுக்க முடியும் என்பது மட்டுமல்லாமல் வங்கிகளும் பிரச்சனையில் இருந்து உடனடியாக வெளியேறலாம்.

அபராதம்

அபராதம்

தற்போது அறிவிக்கப்பட்ட வரைமுறையின் படி வங்கிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி அதிகப்படியான அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் வங்கிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

இந்த அபராதம் வங்கிகளின் லாப அளவுகளில் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படும்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

தற்போது அறிவிக்கப்பட்டு வரைமுறைகளின் வாயிலாக வங்கிகளின் வாராக் கடன் அளவுகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் வெளியாகும். இதனால் வங்கி பங்குகள் அதிகளவில் பாதிக்கும்.

ஆகவே முதலீட்டாளர்கள் வங்கித்துறை பங்குகள் மீது முதலீடு செய்யும்போது கவனமாகச் செயல்பட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI’s new framework and its impact

RBI’s new framework and its impact
Story first published: Wednesday, February 14, 2018, 12:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X