வங்கி கடனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நீரவ் மோடி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

மும்பை: இந்திய வங்கிகள் மீது இருந்த மிகப்பெரிய நம்பிக்கையை உடைக்கும் வகையில் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டு இருக்கும் மோசடிகள் மூலம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் வங்கிக் கடன் மூலம் விவசாயம் செய்ய டிராக்டர் வாங்கிய விவசாயிடம் வங்கி அதிகாரிகள் செய்த காட்டுமிராண்டித்தனத்தை நாம் மறந்து இருக்க முடியாது. அவ்வளவு ஏன் பலர் கல்விக் கடனுக்காகவோ, வீட்டுக் கடனுக்காகவோ வங்கிகளிலும், வங்கி அதிகாரிகளிடமும் பல மோசமான அனுபவத்தைச் சந்தித்திருப்போம்.

ஆனால் இப்போது நடந்த மோசடிகளில் வங்கி அதிகாரிகளே போலி ஆவணத்தின் மூலம் பல ஆயிரம் கோடிகளை நீரவ் மோடிக்குக் கொடுத்துள்ளனர். இப்படி மக்கள் பணத்தை வங்கியில் கடனாக வாங்கி மோசடி செய்தது மட்டும் அல்லாமல் நீரவ் மோடி சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

நீரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாயிலாகப் பல வங்கி அதிகாரிகளின் துணையோடு 11,300 கோடி ரூபாய் வரையிலான பணத்தை மோசடி செய்துள்ளார் வைர வியாபாரியான நீரவ் மோடி.

சோதனை

இந்த மோசடி வெளியான நாள் முதலே அமலாக்கத் துறை நீரவ் மோடிக்கு சொந்தமான அனைத்து இடத்திலும் சோதனை நடத்தி வருகிறது. இதில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமலாக்க துறை நீரவ் மோடி மீது பணச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளது.

 

ஆடம்பர கார்கள்

இந்தச் சோதனையில் சுமார் 9 ஆடம்பர கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தக் கார்களையும், கார்களின் மதிப்பை கேட்டா ஆடிப்போகும் அளவிற்குச் சொகுசு வாழ்க்கையை வங்கி கடன் பணத்தில் வாழ்ந்துள்ளார், நீரவ் மோடி. தற்போது இவர் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்

ஆடம்பர கார்களுக்குப் பெயர்போன ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முக்கியமான மாடலாகத் திகழும் கோஸ்ட் காரை பயன்படுத்தி வந்துள்ளார் நீரவ் மோடி.

இந்தக் காரின் மதிப்பு 4.7 கோடி ரூபாய்

 

பென்ஸ் ஜிஎல் 350

ரோல்ஸ் ராய்ஸ் அடுத்தாக ஆடம்பர பிரிவில் இருக்கும் முக்கியமான கார் பிராண்ட் பென்ஸ், இதையும் நீரவ் மோடி விட்டு வைக்கவில்லை.

இந்தப் பிராண்டில் சுமார் 2 கார்களை வைத்துள்ளார். பென்ஸ் ஜிஎல் 350 என்பது ஒரு எஸ்யூவி கார் என்பது மட்டும் அல்லாமல் இதன் மதிப்பு சுமார் 77.50 லட்சம் ரூபாய்.

 

பென்ஸ் சி கிளாஸ்

பென்ஸ் ஜிஎல் 350 காரை அடுத்து 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பென்ஸ் சி கிளாஸ் காரையும் 11,300 கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடி பயன்படுத்தியுள்ளார்.

பொர்ஷே பேனேமரா

ஆடம்பர பிரிவில் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பொர்ஷே பேனேமரா என்படும் அதிவேக காரை வைத்துள்ளார் நீர்வ மோடி.

இந்தக் காரின் மதிப்பு 1.5 முதல் 2 கோடி ரூபாய் வரையில் இருக்கும்.

 

பார்சூனர்

நீரவ் மோடியின் உதவியாளர்கள், உயர்மட்ட ஊழியர்கள் பயன்படுத்துவதற்காகவும், அவருடன் பணியாற்றவும் டோயோட்டா-வின் பார்சூனர் காரை பயன்படுத்தியுள்ளார். இதோடு ஒரு இன்னோவா காரையும் வைத்துள்ளார் நீரவ் மோடி

இந்த இரு கார்களின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும்.

 

ஹோண்டா கார்கள்

அமலாக்க துறையின் சோதனையில் மேல குறிப்பிடப்பட்டுள்ள கார்களைத் தவிர 2 ஹோண்டா கார்களையும் வைத்துள்ளார் நீரவ் மோடி. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 40 கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ரா

அதுமட்டும் அல்லாமல் நீரவ் மோடி நிறுவன விளம்பரத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா-விற்கு அளிக்க வேண்டிய சம்பள பணத்தை இன்னும் அளிக்காமல் உள்ளார் நீர்வ மோடி. மேலும் அவர் பல முறை கேட்டும் பணம் அளிக்கவில்லையாம்

இந்த மோசடி வெளியானபோது பிரியங்கா இதனைச் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

ஊழியர்களின் நிலை..

நீரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியாது வேறு வேலையைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று நீரவ் மோடி தெரிவித்துள்ளார். இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றிய 200 ஊழியர்களுக்குச் சம்பள அளிக்காமல் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இப்படி ஒரு வாழ்க்கை..

வங்கிகளில் கடன் பெற்று ஆடம்பர வாழ்க்கையை வாழந்த்து மட்டும் அல்லாமல், ஊழியர்களுக்குச் சம்பள பாக்கி, சொந்த வீட்டுக்கே வர முடியாமல் ஏதோ ஒரு நாட்டில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து இப்படி ஒரு வாழ்க்கை வேண்டுமா என்ற கேள்வியும் இதைப் பார்க்கும் போது வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Nirav modi enjoyed luxurious life with bank loan money

Nirav modi enjoyed luxurious life with bank loan money
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns