சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா.. ஜிடிபி 7.2% ஆக உயர்வு.. மோடி அரசு மகிழ்ச்சி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% ஆக உயர்ந்துள்ளது. 2016-ம் ஆண்டுப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் 2017 ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு சரிந்து இருந்த ஜிடிபி தற்போது மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஓரினட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் கனரா வங்கி போன்றவற்றில் நடைபெற்ற மோசடிகளால் பிரதமர் நரேந்திர மோடி அரசினை விமர்சித்து வந்தவர்களுக்கு ஜிடிபி உயந்து இருப்பது மிகப் பெரிய வாய்ப் பூட்டாக உள்ளது.

 மோடி
 

மோடி

வங்கிகளில் வாரா கடன் உயர்வு, பலல் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவது போன்ற காரணங்களால் இரட்டை இருப்புநிலை பிரச்சனையினை அரசு சந்தித்து வருவதாக மோடி கூறிய நிலையில் தற்போது இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த 6.9 சதவீதத்தினை விட அதிகமாக உயர்ந்து 7.2% ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா

சீனா

2017ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் சீனா 6.8 சதவீதம் வரையிலான ஜிடிபி வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியா இக்காலாண்டில் 6.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து செய்தால் 2016இல் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க முடியும் என்று கூறப்பட்ட நிலையில் 7.2 சதவீத வளர்ச்சியுடுன் சீனாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

2017

2017

2017 ஜூன் மாதம் முதல் காலாண்டில் ஜிடிபி மூன்று வருடம் இல்லாத அளவிற்குச் சரிந்து 5.7 சதவீதமாக இருந்தது. இதுவே 2017 செப்டம்பர் மாதம் இரண்டாம் காலாண்டில் 6.2 சதவீதமாக உயர்ந்தது.

வாக்கெடுப்பு
 

வாக்கெடுப்பு

ரெயூட்டர்ஸ் நடத்திய வாக்கெடுப்பில் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி சராசரியாக 6.9 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது 2017ஆம் ஆண்டிலேயே மிகவும் அதிகமான வளர்ச்சி அளவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்காலாண்டில் நாட்டின் வளர்ச்சி அளவு 6.4 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதம் வரையில் இருக்கும் எனவும் இந்த வாக்கெடுப்பின் முடிவில் கூறப்பட்டு இருந்தது.

மூடிஸ்

மூடிஸ்

மூடிஸ் முதலீட்டாளார்கள் சேவை நிறுவனமானது இந்தியாவின் ஜிடிபி 7.6 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்து இருந்தது. 2018-ம் ஆண்டுப் பட்ஜெட்டில் கிராமப் புறங்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அள்ளித்ததால் தான் இந்த 7.2 சதவீத ஜிடிபி கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சீனாவை பின்னுக்கு தள்ளுமா இந்தியா..?

சீனாவை பின்னுக்கு தள்ளுமா இந்தியா..?

சீனாவை பின்னுக்கு தள்ளுமா இந்தியா..? இன்று மாலை முடிவு தெரியும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s GDP growth rises to 7.2% in December quarter

India’s GDP growth rises to 7.2% in December quarter
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X