பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை.. சன் நெட்வொர்க் பங்குகள் உயர்வு!

Written By:
Subscribe to GoodReturns Tamil

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராகத் தயாநிதி மாறன் இருந்த போது முறைகேடாக அதிவேக பிஎஸ்என்எல் இணைப்புகளைச் சன் நெட்வோர்க்கிற்காகப் பெற்றதாகவும் இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டப்பட்டு எழுந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பில் மாறன் சகோதரர்கள் உட்பட 7 நபர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாறன் சகோதரர்கள்

முன்னால் அமைச்சர் தயாநிதிமாறன், அவரது அண்ணன் கலாநிதி மாறன் உட்பட 7 நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுச் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து தங்கலை விடுவிக்க வேண்டும் என்று 2017 அக்டோபர் மாதம் சிபிஐ நீதிமன்றத்தில் மனு ஒன்று 7 பேர் சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை

இந்த மனு மீதான விசாரணையினைச் சிபிஐ சிறப்பி நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இவர்களது சார்பாக டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். ஆனால் சிபிஐ தரப்பு 7 நபர்களையும் விடுவிக்கக் கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்த நிலையில் மார்ச் 14ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

தீர்ப்பு

தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பிற்பகல் 2:30 மணி அளவில் பிஎஸ்என்எல் தொலைப்பேசி இனைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சன் நெட்வொர்க் பங்குகள்

தீர்ப்பு வெளியானதை அடுத்து மாலை 3 மணி அளவில் சன் நெட்வொர்க் பங்குகள் 19.20 புள்ளிகள் என 2.13 சதவீதம் உயர்ந்து 919 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL illegal telephone exchange case verdict Maran brothers released SUN network shares surged

BSNL illegal telephone exchange case verdict Maran brothers released SUN network shares surged
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns