ஓரே நாளில் இந்தியா முழுவதும் டிரென்டான ஸ்லோக மேத்தா.. யார் இவர்..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

பொதுவாகப் பெரிய வீட்டுத் திருமணங்கள் இரு மனங்களின் சங்கமம் என்பதை விட இரு வீட்டாரின் வர்த்தகமும் இணைகிறது என்ற பொருள். இரு வீட்டு வர்த்தகங்கள் அடுத்தகட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பதை மையமாக வைத்தே பெரிய அதாவது பணக்காரர்கள் வீட்டுத் திருமணங்கள் நடந்து வருகிறது. இதைப் பலர் மறுத்தாலும் உண்மை இதுதான்.

இதே பார்வையைத் தான் ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகத் தலைவர் ஆகாஷ் அம்பானி மற்றும் ரோசி ப்ளூ பவுண்டேசன் தலைவர் ஸ்லோக மேத்தா ஆகியோரின் திருமணத்திலும் பார்க்கப்படுகிறது.

ஆகாஷ் அம்பானி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் என்னும் மிகப்பெரிய வர்த்தகச் சம்ராஜியத்தை நிர்வாகம் செய்து வருகிறார். இவரின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியின் திருமணம் குறித்த பல செய்திகள் சமுக வலைத்தளங்களை ஆட்கொண்டது நாம் மறந்திருக்க முடியாது.

இதில் குறிப்பாகப் பத்திரிக்கை வடிவம் மற்றும் அதன் மதிப்பு பற்றிய தகவல்களை நாம் மறந்திருக்க முடியாது.

 

முற்றுப்புள்ளி

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோக மேத்தா ஆகியோர் திருமணம் செய்துக்கொள்ளவதாக இரு வீட்டாரும் கோவாவில் முடிவை எடுத்தனர். இந்நிலையில் ஜூன் மாதம் நிச்சியதார்த்தம் நடத்தி டிசம்பர் மாதத்திற்குள் திருமணத்தினை நடத்தி முடித்துவிடலாம் என்றும் கோவா சந்திப்பில் இரண்டு குடும்பமும் முடிவு செய்துள்ளன.

சித்திவிநாயக் கோவில்

கோவாவில் இரு வீட்டார் மத்தியில் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், ராமநவமியன்று அம்பானி குடும்பத்துடன் ஸ்லோக மோத்தாவும் மும்பையில் இருக்கும் சித்திவிநாயக் கோவில் சென்றனர்.

டிரென்ட்

இந்தத் திருமண அறிவிப்பினால் ஸ்லோக்கா மேத்தாவின் பெயர் இந்தியா முழுவதும் டிரென்டானது.

யார் இவர்..? ஆம்பானி குடும்பத்தில் சமந்தம் வைத்துக்கொண்ட இவரின் பெற்றோர் யார்..?

 

வைர வியாபாரம்

ஜதின் மேத்தா, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோரின் மோசடிக்குப் பின் வைர வியாபாரிகள் என்றால் சந்தேகக் கண் உடன் பார்க்க வேண்டிய சூழ்நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் சம்மந்தி ரசெல் மேத்தா மற்றும் மோனா மேத்தா அவர்களின் இளைய மகள் தான் ஸ்லோக்கா மேத்தா

 

ரோஸ் ப்ளூ டைமென்ட்ஸ்

பி அருண்குமார் அண்ட் கோ-வாக இருந்த நிறுவனம் தான் தற்போது ரோஸ் ப்ளூ டைமென்ட்ஸாக மாற்றியுள்ளது. இந்நிறுவனத்தின் வர்த்தகம் பெல்ஜியம், இஸ்ரேல், ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீனா என 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது.

இளைய மகள்

ரசெல் மேத்தா மற்றும் மோனா மேத்தா தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர் இதில் இளைய மகள் தான் ஸ்கோகா மேத்தா. இவர் தற்போது தென் மும்பையில் பெற்றோர் உடன் வாழ்ந்து வருகிறார்.

பள்ளிப்படிப்பு

2009ஆம் ஆண்டு முதல் ஸ்லோக மேத்தா ரிலையன்ஸ் அறக்கட்டளையின் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்தார், ஆகாஷ் அம்பானியும் இதே பள்ளியில் தான் பள்ளிப்படிப்பை முடித்தார்.

பள்ளிக்காலத்தில் இருந்தே ஆகாஷ் மற்றும் ஸ்லோக நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கல்லூரி

பள்ளிப்படிப்பை முடித்த உடன் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலும், முதுகலை படிப்பை லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லூரியில் சட்ட துறையில் பட்டம் பெற்றார்.

தலைவர் பதவி

தனது பெற்றோர்களின் ரோசி ப்ளூ டைமென்ட்ஸ் நிறுவனத்தின் நேரடி வர்த்தகத்தில் ஈடுப்படாமல் இந்நிறுவனத்தின் அறக்கட்டளை நிறுவனமான ரோசி ப்ளூ பவுண்டேசன் அமைப்பின் தலைவராக ஜூன் 2014 முதல் செயல்பட்டு வருகிறார்.

இதோடு கனெக்ட்பார் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும் உள்ளார்.

 

வைர வியாபாரிகள்

இந்தியாவின் மிகப்பெரிய வைர வியாபார நிறுவனங்களில் ரோஸ் ப்ளூ நிறுவனமும் டாப் 10 பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தான் ரசெல் மேத்தா.

மோசடிகள்

ரோஸ் ப்ளூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரசெல் மேத்தா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திலிப் மேத்தா (ரசெல்-இன் மாமா) ஆகியோர் உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் மற்றும் பேரடைஸ் பேப்பர் மோசடி வெளியிட்டில் இடம்பெற்றுள்ளனர்.

நீரவ் மோடி

ரசெல் மேத்தாவின் தாய் மோனா மேத்தா, பிஎன்பி வங்கியில் 14,000 கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசெல் மேத்தா

நீரவ் மோடி மோசடி பெரிய அளவில் வெடித்துள்ள நேரத்தில் ரசெல் மேத்தா, தான் மற்றும் தன் நிறுவனம் எந்த வங்கிகளிலும் மோசடி செய்யவில்லை, இதுவரை எங்கள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனச் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

குடும்பப் புகைப்படம்

மோனா மேத்தா உடன் அவரது இரண்டு பிள்ளைகள்

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்-இல் வளம் வரும் ஸ்லோக மேத்தாவின் புகைப்படம்.

அதிர்ச்சி அளிக்கும் கதை பின்னணி

ரூ.20,000 கோடி மோசடிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா?

ஜதின் மேத்தா

விஜய் மல்லையா, நீரவ் மோடி விட பெரிய கேடி இந்த 'ஜதின் மேத்தா'.. யார் இவர்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

who is shloka mehta? Trending all over india

who is shloka mehta? Trending all over india
Story first published: Tuesday, March 27, 2018, 14:08 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns