மான் வேட்டையாடி சிக்கிக்கொண்ட சல்மான் கானின் சொத்து மதிப்பு ரூ.2,000 கோடியாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் 'ஹம் சாத் சாத் ஹே' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது அறிய வகை மான்கள் இரண்டை வேட்டையாடியதாகச் சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டு 20 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2018 ஏப்ரல் 5-ம் தேதி அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு என்ன போன்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

திரைத்துறை

திரைத்துறை

திரைப்பட கதை ஆசிரியர் சலிம் கான் மற்றும் அவரது முதல் மனைவி சுஷிலா ஷாரக்கிற்குப் பிறந்தவர் தான் சல்மான் கான் ஆவார். 1988-ம் ஆண்டுப் பிபி ஹோ தோ ஐசி என்ற திரைப்படம் மூலம் நடிக்க வந்த இவர் இந்தியாவின் மிகப் பெரிய பாலிவுட் நடிகராக வலம் வருகிறார்.

ஹம் ஆப் கே ஹே கோன் போன்ற பல வெற்றிப் படங்களை அளித்துப் பல விருதுகளை வென்ற சல்மான் கானுக்கு 2009-ம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் வெளியான வாண்டட் (தமிழில் ‘போக்கிரி') என்ற திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

2011-ம் ஆண்டுச் சொந்தமாக சல்மான் கான் பீயிங் ஹூயூமன் ப்ரோடக்‌ஷன் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தினைத் துவங்கி அதன் மூலம் கிடைக்கும் லாபத்தினைப் பீயிங் ஹூயூமன் என்ற தொண்டு நிறுவனத்திற்கு அளித்து வந்தார்.

 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

10 கா தம், பிக்பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவை இரண்டும் மிகப் பெரிய வெற்றி பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானின் பிராண்டு மதிப்பு

சல்மான் கானின் பிராண்டு மதிப்பு

தம்ஸ்அப், ஹீரோ, ரான்பாக்ஸி, பிராட்டினியா எனப் பல்வேறு தயாரிப்புகளின் விளம்பர துதராகவும் சல்மான் கான் இருந்து வருகிறார்.

சல்மான் கான் நிகர மதிப்பு வளர்ச்சி மதிப்பீடு

சல்மான் கான் நிகர மதிப்பு வளர்ச்சி மதிப்பீடு

இந்தியா மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான பாலிவு நடிகராக வலம் வரும் சல்மான் கானின் சொத்து மதிப்பு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 140 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மான் சுட்ட வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 நிகரச் சொத்து மதிப்பு

நிகரச் சொத்து மதிப்பு

சல்மான் கானின் தற்போதைய சொத்து மதிப்பு 1,950 கோடி ரூபாய் எனவும், ஆண்டு வருமானம் 140 கோடி ரூபாய் எனவும் ஃபின் ஆப் தெரிவித்துள்ளது. இந்திய நடிகர்களில் சல்மான் கான் தான திக சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருமானத்தினைக் கொண்டுள்ளார்.

ஆடம்பர வாகனங்கள்

ஆடம்பர வாகனங்கள்

மெர்சிடஸ், பென்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஆடி என 8 ஆடம்பர கார்களைச் சல்மான் கான் பயன்படுத்தி வருகிறார். இதன் மதிப்பு 14 கோடி ரூபாய் வரை இருக்கும்.

வீடு

வீடு

சல்மான் கானிற்கு நொய்டா, சண்டிகர், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் வீடு உள்ளன. அதில் மும்பையில் உள்ள வீட்டின் தற்போதைய மதிப்பு 114 கோடி ரூபாய் இருக்கும்.

சொத்துக்கள் குறித்த முழு விவரங்கள்

சொத்துக்கள் குறித்த முழு விவரங்கள்

நிகர சொத்து மதிப்புRs.1,950 கோடி
ஆண்டு வருமானம் Rs.79 கோடி
திரைப்பட ஊதியம் Rs.38 கோடி
பிராண்ட் ஒப்புதல் கட்டணம் Rs.8 கோடி
ஆடம்பர கார்கள் - 8 Rs.14 கோடி
நன்கொடைகள் Rs.17 கோடி
வங்கி இருப்பு Rs.4 கோடி
வருமான வரி Rs.12 கோடி
முதலீடுகள் Rs.315 கோடி

சாலை ஓரம் உறங்கி இருந்தவர்கள் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கு

சாலை ஓரம் உறங்கி இருந்தவர்கள் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கு

2002-ம் ஆண்டுக் குடித்து விட்டு வேகமாகக் கார் ஓட்டி சென்று சாலை ஓரம் உறங்கி இருந்தவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு தப்பி ஓடி மறைந்த வழக்கில் 2015-ம் ஆண்டுப் பாம்பே உயர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று சல்மான் கானை விடுதலை செய்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salman Khan convicted for blackbuck killing. Salman Khan's property worth Rs 2,000 crore

Salman Khan convicted for blackbuck killing. Salman Khan's property worth Rs 2,000 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X