ஜிஎஸ்டி-ன் தாக்கத்தை தணிக்க ஊழியர்களின் பாக்கெட்டில் கை வைக்கும் நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய நிறுவனங்கள் பல சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிற ஏற்பட்ட தாக்கத்தினைச் சமாளிக்க முடியாமல் ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனுவுகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நிறுவனங்கள் வழங்கி வந்த வீட்டு வாடகை, தொலைப்பேசி பில் கட்டணங்கள், மருத்துவக் காப்பீடு பீரீமியம், மருத்துவச் சரிபார்ப்புக் கட்டணங்கள், பயணச் செலவுகள், ஜிம் பயன்பாடு, சீருடை அல்லது மீண்டும் ஐடி கார்டு வழங்குதல் போன்றவற்றுக்குக் கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

நிறுவனங்கள் - ஊழியர்கள் இடையிலான சேவை
 

நிறுவனங்கள் - ஊழியர்கள் இடையிலான சேவை

மறுபக்கம் ஊழியர்களுக்குக் கேன்டீன்களில் வழங்கப்பட்டு வரும் குறைந்த விலை உணவிற்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்றும் இதுவும் நிறுவனங்கள், ஊழியர்கள் இடையிலான சேவை தான் என்றும் இதுவும் சம்பளத்தில் திருத்தம் கொண்டு வர வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர்.

வரி வல்லுனர்கள்

வரி வல்லுனர்கள்

வரி வல்லுனர்கள் இது போன்ற எந்தச் சேவைகளுக்கு எல்லாம் நிறுவனங்கள் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்ற அறிக்கையினையும் கேட்க துவங்கியுள்ளனர்.

தவிர்க வாய்ப்புள்ளதா?

தவிர்க வாய்ப்புள்ளதா?

ஒரு வேலை ஊழியர்களிடம் இருந்து உணவு, தொலைப்பேசி பில் போன்றவற்றுக்குக் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கவில்லை என்றால் ஜிஎஸ்டி செலுத்த தேவையிருக்காது என்று கூறுகின்றனர்.

 சம்பளத்தில் திருத்தம்

சம்பளத்தில் திருத்தம்

இதுவே வரியைக் குறைக்க நிறுவனங்கள் முடிவு செய்தால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தும். இல்லை என்றால் கூடுதல் கட்டணத்திற்கு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கும்.

கணக்கிடுவதில் உள்ள சிரமம்
 

கணக்கிடுவதில் உள்ள சிரமம்

நிறுவனங்கள் ஊழியர்களுக்கு உணவு போன்றவற்றை அளிக்க ரசீது ஏதும் நிர்வகிக்காததால் அதனை எப்படிக் கணக்கிட்டு ஜிஎஸ்டி செலுத்துவது என்ற குழப்பமும் நிலவி வருகிறது.

வரியைக் குறைக்க வாய்ப்பில்லை

வரியைக் குறைக்க வாய்ப்பில்லை

வல்லுனர்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு நிறுவனங்கள் கட்டணத்தினை வசூலிக்கவில்லை என்றால் ஜிஎஸ்டி செலுத்த வேண்டி வரும் என்றும் அதில் குறைந்த விலையில் அளிக்கப்படும் உணவுகளும் அடங்கும் என்றும் கூறுகின்றனர்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி இந்தியாவில் ஜூலை 2017 முதல் அமலுக்கு வந்த நிலையில் அதில் உள்ள குழப்பங்கள் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Companies which may affected through GST's impact will pinch employees salary

Companies which may affected through GST's impact will pinch employees salary
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X