விவசாயிகளின் வருவாயினை இரட்டிப்பாக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவசாயத் துறையினை விவசாய உற்பத்தி அடிப்படை திட்டத்தில் இருந்து கிராமப்புற உற்பத்தி அடிப்படை திட்டமாக மாற்ற வேண்டும் என்ற நிலை கட்டாயம் ஆகி வருகிறது.

 

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாயினை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதினை இலக்காகப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வைத்துள்ளது. இதில் மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவது மட்டும் இல்லாமல் விவசாயச் சார்ந்த உற்பத்தியினைப் பெருக்குவதும் கிராமப்புற இந்தியாவினை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இலக்கினை அடைய வேண்டும் என்றால் அது குறித்து விவாதங்களை அதிகளவில் செய்ய வேண்டும். முதலில் இலக்கினை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் வருவாயினை இரட்டிப்பாக்குவது என்பது அவர்கள் விளைவித்த பயிர்களின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவது ஆகும்.

தற்போது விவசாயத் துறையில் உள்ள வளர்ச்சி 3 சதவீதமாக உள்ள நிலையில் விவசாயிகளின் வருவாயினை இரட்டிப்பாக 25 வருடங்கள் ஆகும்.

 விவசாயப் பொருட்கள்

விவசாயப் பொருட்கள்

விவசாயப் பொருட்களினை இந்தியா அதிகளவில் பயன்படுத்துவது என்றில்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் இவர்களுது வருவாய் மட்டும் இன்னும் இரட்டிப்பாகவில்லை.

விவசாயிகளின் நிலத்தில் உள்ள உற்பத்தியினை அதிகரிக்காமல் அதனை எப்படி லாபமாக உயர்த்தலாம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் லாபம் பெறுவது எப்படிப் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

 

 பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கோழி வளர்ப்பு மூலமாக ஒரு குடும்பத்தின் துணை வருவாயினை ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரை உயர்த்திக் காட்டியுள்ளது. இதனை நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டு வரலாம்.

கிராமப்புறங்களில் தகுதி குறைவான இளைஞர்களைக் குறைந்த திறன் தேவையான பயிர் அல்லாத பிற வழிகளில் வருவாயினை உயர்த்த வழிவகைச் செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிற வழிகளில் இருந்தும் வருவாயினைப் பெற முடியும்.

கிராமப்புற வருவாயினை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.

 

மாதவிடாய் சுகாதாரச் சந்தை
 

மாதவிடாய் சுகாதாரச் சந்தை

தமிழ் நாட்டில் 30 வருடங்களுக்கு முன்பு எண்ணெய் மற்றும் ஷாம்ப்பு போன்ற பொருட்களைப் பாக்கெட்களில் விற்பனை செய்ததன் மூலம் இந்தியாவில் மிகப் பெரிய தொழில் புரட்சி வெடித்தது மட்டும் இல்லாமல் இன்று இந்தியாவின் முக்கிய நிறுவனமாகக் கவின் கேர் வளர்ந்துள்ளது. அதே போன்று கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்து அருணாசலம் முருகானந்தம் என்பவரால் கிராமப்புற பெண்களுக்காக எளிய முறையில் மாதவிடாய் காலங்களில் நாப்கீன் உருவாக்கும் முறையினை அறிமுகம் செய்யப்பட்டு அது இந்தியாவில் இன்று மிகப் பெரிய புரட்சியாக வெடித்துள்ளது.

இந்த நாப்கின் திட்டத்தின் கீழ் இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து 5,00,000 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்குப் பயிற்சி அளித்து தினம் 200 நாப்கின் பேடுகளை உற்பத்தி செய்து ஒன்றுக்கு 1 ரூபாய் என லாபம் பார்த்தாலும் அந்தக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 60,000 வரை உயரும். இந்த வணிகங்கள் விநியோகம் மற்றும் பிற வழிகளில் எல்லாம் வேலை வாய்ப்பினை உருவாக்கும்.

இந்த ஒரு திட்டத்தின் கீழ் மட்டும் 5 லட்சம் பெண்களுக்கு நேரடியாகவும் 2.5 லட்சம் நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த உற்பத்தியினைத் துவங்க மற்றும் பயிற்சி அளிக்க, தேவையான இயந்திரங்கள் பொருட்கள் எல்லாவற்றையும் வாங்க எல்லாம் அருணாசலம் முருங்காநந்தம் பல வகையில் உதவி வருகின்றார். இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு குடும்பங்கள் தங்களது வருவாயினைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன.

 

ஆடு வளர்த்தல்

ஆடு வளர்த்தல்

ஆடு வளர்ப்பதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆட்டின் மூலம் ஆண்டுக்கு 1,200 ரூபாய்முதல் 1,300 ரூபாய் வரை வருவாய்க் கிடைப்பதாக ஆய்வு தகவல்கள் கூறுகின்றனர். இதுவே ஆட்டுப்பால்,மற்றும் தோல் மூலம் எல்லாம் வருவாய் ஈட்டும் போது ஆண்டுக்கு ஒரு ஆட்டின் மூக்ல 2,000 ரூபாய் வரை கூட வருவாய் பெற முடியும் என்று கூறப்படுகிறது. சராசரியாக 10 முதல் 15 ஆடுகள் வளர்த்தால் ஆண்டுக்கு 12,000 ரூபாய் முதல் 19,000 வரை குடும்பத்தின் ஆண்டு வருவாய் அதிகரிக்கிறது. இதுவே கறி விற்பனை செய்யும் போது வருவாய் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

ஆட்டுப் பால்-ஐ அருகில் உள்ள பால் கூட்டுறவு விற்பனையகங்களில் விற்பனை செய்வதும் மூலமும் வருவாயினை அதிகரிக்க முடியும். தண்ணீர் பஞ்சம் உள்ள கிராமங்களில் கூட ஆசு வளர்ப்பதன் மூலம் லாபம் கான முடியும்.. ஆட்டுப் பால் மூலம் கிடைக்கும் சீஸ்-க்கு வெளிநாடுகளில் மிகப் பெரிய வர வேர்ப்பு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்திய அசைவ பிரியர்களில் பலருக்கு ஆட்டு மாமிசம் விருப்ப உணவாகவும் உள்ளது.


ஆட்டுத் தோலினை லெதர் ஆடைகள், பைகள் மற்றும் வாலெட்கள் போன்றவற்றைச் செய்ய விற்பது மட்டும் இல்லாமல் உற்பத்தி செய்யவும் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆடு வளர்ப்பு கிராமப்புற பெண்களுக்கு வருவாய் அளிப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கின்றது.

 

தேன் உற்பத்தி

தேன் உற்பத்தி

தேனிகளின் எண்ணிக்கை சமீபகாலமாகக் குறைந்து வரும் நிலையில் செயற்கை தேன் கூடுகள் அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு40 கிலோ தேன் வரை உற்பத்தி செய்ய முடியும் என்றும் ஆண்டுக்கு 30,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்றும் பால் போன்று தேனையும் வீட்டிற்கே வந்து கொள்முதல் செய்வதும் அதிகரித்து வருகிறது.

பயிர்களுக்கான மதிப்பினை கூட்டுதல்

பயிர்களுக்கான மதிப்பினை கூட்டுதல்

சில பயிர்களுக்கு இந்தியாவில் மதிப்பினை கூட்ட முடியும். அதிலும் குறிப்பாக உருளைக் கிழங்கு இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் சில நேரங்களில் கிலோ ஒன்றுக்கு விலை பல மடங்கு சரிந்துவிடுகிறது, இவர்களுக்கு வர பிரசாதமாகவே அன்மை காலங்களில் சிப்ஸ் நிறுவனங்கள் பெரும் அளவில் வளர்ந்து வருவதால் இவர்களுக்கு ஓர் அளவிற்கு நல்ல வருவாய் கிடைத்து வரும் நிலையில் மத்திய அரசு கோதுமை மாவில் ஒரு கிலோவிற்கு 5% உருளை கிழங்கு மாவினை சேர்க்க அனுமதி அளித்தால் இதன் மதிப்பு மேலும் அதிகாரிக்கு.

மஞ்சள் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் மருந்து நிறுவனங்களுக்கு மஞ்சளில் இருந்து தேவையான வேதி பொருட்களை எடுக்கும் வசதிகளைச் செய்து கொடுக்கும் போது இந்த விவசாயிகளும் நட்டம் என்பதை மறந்து லாபத்தினை அதிகம் பெற வாய்ப்புள்ளது.

 

மரபு சாரா எரிபொருள் சந்தை

மரபு சாரா எரிபொருள் சந்தை

விவசாய உற்பத்தியில் கரும்பு, அரிசி பில் மற்றும் பல பொருட்களில் இருந்து மரபு சாரா எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் கிராமப்புற விவசாயிகளுடன் இணைந்து இதற்காகத் திட்டங்களை நிறைவேற்றினால் வீணாகச் செல்லும் கரும்பு சக்கை, பில் போன்றவை மூலம் எண்ணெய் எடுத்து விற்பனை செய்வது மட்டும் இல்லாமல் விவசாயிகளின் வருவாயினை அதிகரிக்கலாம். இதன் மூலம் விவசாயப் பொருட்கள் கழிவும் குறையும்.

தற்போது மத்திய அரசு எடுத்து வரும் எம்எஸ்பி திட்டங்கள் எல்லாம் விவசாயிகளுக்குப் பெரிதாக எந்தப் பயனும் அளிக்காது. அவர்களின் உற்பத்தி மூலம் பல்வேறு வகையில் வருவாயினை ஈட்டுவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொடுப்பதன் மூலம் தான் வருவாய் அதிகரிக்கும்

விவசாயிகளுக்கான மானியத்தினை ரத்து செய்வதால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். தொழிற்சாலைகள் அமைத்தால் கிராமப்புற மக்களுக்கு வேலைக் கிடைக்கும் ஆனால் யார் சோறு போடுவது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

To Double Farmers Income In India What GOVT Should Do?

To Double Farmers Income In India What GOVT Should Do?
Story first published: Monday, June 11, 2018, 11:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X