2018 ஜூன் 16 வரை 41,548 கோடி ரூபாய் ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018 ஏப்ரல் 30ஆம் தேதிவரை தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி கணக்குகளுக்கான திரும்பச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையை முற்றிலுமாகச் செலுத்தும் அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, மறைமுக வரி மற்றும் சுங்க வரிக்கான மத்திய வாரியம், இரண்டாவது இருவார காலப் பணம் திருப்பிச் செலுத்தும் அவகாசத்தை 2018 மே 31ஆம் தேதியிலிருந்து 2018 ஜூன் 16வரை நீட்டித்து, வெற்றிகரமாகப் பணியை நிறைவு செய்துள்ளது.

 அனுமதி
 

அனுமதி

2018 ஜூன் 16ஆம் தேதி முடிய, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரிக்கான ரூ.6,087 கோடியை திரும்பச் செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த இருவாரக் காலத்தில்,

1) சுமார் 1,68,191 கப்பல் சீட்டுகள் செயல்முறைப்படுத்தப்பட்டன.

2) தடைப்பட்டிருந்த புதிய ஏற்றுமதியாளர்கள் 3,500 பேரின் உரிமைக் கோரிக்கைகள் உட்பட 9,293 ஏற்றுமதியாளர்களின் ஐ.ஜி.எஸ்.டி. உரிமைக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, திரும்பச் செலுத்துவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம்

ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம்

இந்தக் காலக் கட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில், மறைமுக வரி மற்றும் சுங்க வரிக்கான மத்திய வாரியத்தின் அனைத்துத் துறை மற்றும் மாநிலங்களின் பணியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி உள்ளனர். நாடு முழுவதும் சிறப்புத் திருப்பிச் செலுத்தும் பிரிவுகள் அமைக்கப்பட்டு, அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

திருப்பிச் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி தொகை

திருப்பிச் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி தொகை

2018 ஜூன் 16 வரை மொத்தம் ரூ.38,062 கோடி தொகை திருப்பிச் செலுத்தப்பட்டது. இதில் ரூ.21,112 கோடி (ஐ.ஜி.எஸ்.டி. ரீபண்ட்), ரூ.9,923 கோடி (ஆர்.எஃப்.டி.-01ஏ சிபிஐசி ரீபண்ட்), ரூ.6,997 கோடி (ஆர்.எஃப்.டி. 01ஏ மாநிலங்கள் ரீபண்ட்) ஆகியவை அடங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TOTAL GST REFUND DISPOSED TILL 16TH JUNE, 2018

TOTAL GST REFUND DISPOSED TILL 16TH JUNE, 2018
Story first published: Saturday, June 23, 2018, 18:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X