மகப்பேறு சலுகைகளால் 18 லட்சம் பெண்களின் வேலைக்கு வந்த புதுச் சிக்கல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அரசு பெண்களுக்கான மகப்பேறு சலுகைகளை அதிகரிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

மறுபக்கம் புதிய மகப்பேறு சலுகைகளால் பல பெண்கள் வேலையினை இழக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக டீம்லீஸ் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.

 மூன்றாம் இடத்தில் இந்தியா
 

மூன்றாம் இடத்தில் இந்தியா

கனடா மற்றும் நார்வேக்குப் பிறகு மகப்பேறு காலங்களில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பெண்களுக்கான சலுகையினை இந்திய அரசு அதிகளவில் வழங்கும் விதமாகச் சட்டங்களை இயற்றியுள்ள நிலையில் அதிகளவில் பெண்களை வேலைக்கு எடுப்பது குறைந்துள்ளதாகவும், சிறு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான் இப்படிச் செய்கின்றன என்று தரவுகள் கூறுகின்றன.

வேலை இலக்கும் பெண்கள்

வேலை இலக்கும் பெண்கள்

டீம்லீஸ் நிறுவனமானது இந்தியாவின் 10 முதன்மையான துறைகளில் எடுத்த ஆய்வில் 1.1 மில்லியன் முதல் 1.8 மில்லியன் பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் இந்தச் சர்வேயினை எடுத்தால் அடுத்த ஒரு வருடத்தில் 1 முதல் 1.20 கோடி இந்திய பெண்கள் மகப்பேறு காலங்களில் தங்களது வேலையினை இழக்கக் கூடும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

பெண்கள் வேலைக்குச் செல்வது குறைந்து வருகிறது!

பெண்கள் வேலைக்குச் செல்வது குறைந்து வருகிறது!

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டுக்கு முன்பு வரை 36 சதவீதமாக இருந்து வந்த நிலையில் அது 2016-ம் ஆண்டு 24 சதவீதமாகச் சரிந்தது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2025-ம் ஆண்டு வரை இந்தியாவில் அதிகப் பெண்கள் வேலைக்குச் சேந்தால் இந்தியாவின் உற்பத்தி 700 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் என்று மெக்கென்சி கூறுகிறது.

பெண்களின் நிலை
 

பெண்களின் நிலை

இந்தியாவில் இன்று வரை அதிகச் செல்வம் படைத்த குடும்பங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதிப்பதில்லை. அதே போன்று நடுத்தரக் குடும்பங்களிலும் பல பெண்கள் குடும்பப் பொறுப்பு காரணங்களுக்காக வேலைச் செல்வதில்லை.

பெண்கள் அதிகளவில் வேலைக்குச் சென்றால்..!

பெண்கள் அதிகளவில் வேலைக்குச் சென்றால்..!

ஒருவேளை இந்தியாவின் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தால் இந்திய பொருளாதாரம் பல மடங்கு உயரும் என்று கூறப்படும் நிலையில் அவர்களுக்கு அளிக்கப்படும் மகேப்பேறு சலுகைகளுக்காக நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு எடுப்பதைக் குறைப்பது மற்றும் பணி நீக்கம் செய்வது என்பது தவறான செயல் என்று புரிந்துகொண்டால் நல்லது.

வீடியோ

18 லட்சம் பெண்கள் வேலை இழக்க கூடும்.. எச்சரிக்கை சர்வே!- வீடியோ

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Due To Maternity Perks 1.8 Million Indian Women Going To Lose their Jobs

Due To Maternity Perks 1.8 Million Indian Women Going To Lose their Jobs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X