ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள பொர்டு குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்.

 

எல்ஐசி நிறுவனத்திற்குத் தற்போது ஐடிபிஐ வங்கியில் 7.5 சதவீத பங்குகள் உள்ளது. மீத பங்குகளை மத்திய அரசிடம் இருந்து தற்போது வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுப் பங்குகள்

பொதுப் பங்குகள்

ஐடிபிஐ வங்கி வசம் தற்போது 5 சதவீத பங்குகள் மட்டுமே உள்ள நிலையில் இது பொதுப் பங்குகளை வாங்கும் முடிவு இல்லை என்றும் தேவைப்பட்டால் பொது மக்கள் வசம் உள்ள பொது பங்குகளைப் பைக்பேக் மூலம் எல்ஐசி வாங்கும் என்றும் கூறப்படுகிறது.

அரசு

அரசு

தற்போது அரசு வசம் ஐடிபிஐ வங்கியில் 85.96 சதவீத பங்குகள் உள்ள நிலையில் அவற்றைக் குறைக்கும் முடிவில் அதனை எல்ஐசிக்கு விற்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

 ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி

சென்ற ஆண்டு ஐடிபிஐ வங்கி 8,237.92 கோடி ரூபாய் வரை நட்டம் அடைந்த நிலையில் தொடர் நட்டம் மற்றும் அதிகரித்து வரும் வாரா கடன் காரணங்களால் அதனைத் தனியாருக்கு விற்றுவிடலாம் என்றும் மத்திய அரசு முடிவு செய்து இருந்தது.

வாரா கடன்
 

வாரா கடன்

ஐடிபிஐ வங்கியில் 55,588.26 கோடி ரூபாய் வாரா கடன் உள்ளது. இப்படிப்பட்ட வங்கியினை எல்ஐசி வாங்குவது பல தரப்பில் இருந்து விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC board approves IDBI Bank shares purchase to hold upto 51%

LIC board approves IDBI Bank shares purchase to hold upto 51%
Story first published: Monday, July 16, 2018, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X