மோடிஜி-ய எதிர்த்துப் பேசுனா, மரண அடி தான்... சாவுங்கடா. யார்கிட்ட?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்டோபர் 11, 2014, மோடி, இந்திய கிராமங்களை காக்க வந்த கடவுளாகவும், காவிக் கொடி போர்த்திய காந்தியாகவும் தெரிந்தார் நம் கிராம மக்களுக்கு. அன்று தான் Sansad Adarsh Gram Yojana (SAGY) என்கிற திட்டத்தை துவங்கி வைக்கிறார்.

 

திட்டம் அறிவிப்பு

திட்டம் அறிவிப்பு

கொஞ்சமே கொஞ்சம் இந்திய அரசியல் வரலாறு படித்தவர்களுக்கு கூட ‘சம்பூரன் க்ராந்தி' நினைவில் இருக்கும். அந்த புரட்சியை முழுமையாக வழி நடத்திய ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் பிறந்த நாள் அன்று சரியாக நான்கு வருடத்துக்கு முன் இந்த திட்டத்தைதொடங்கி வைக்கிறார்.

மோடியின் உணர்ச்சி உரை

மோடியின் உணர்ச்சி உரை

"பாய்யோ அவுர் பெஹனோ, இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மூன்று கிராமங்களைத் தேர்வு செய்யலாம். அந்த மூன்று கிராமங்களும் அவர்களின் அவர்களின் தொகுதிக்குள் இருக்கும். அந்த கிராமங்களை வரும் 2019-க்குள் இந்தியாவின் முன் மாதிரி கிராமங்களில் ஒன்றாக விளங்கும். இந்த திட்டத்தின் கீழ் நான் வாராணாசியில் உள்ள ஜெயாநகரைத் தத்தெடுத்துக் கொள்கிறேன்" என்றார் மோடி ஜி. மோடிஜியைத் தொடர்ந்து இன்னும் சில எம்.பிக்கள் கிராமங்களைத் தேர்தெடுத்தார்கள்.

சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா
 

சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா

இந்த திட்டத்தின் படி நல்ல கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதிகள், தொழிற் பயிற்சிகள், அடிப்படை பொருளாதார வாழ்கைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், வீடுகள், நல்ல சாலைகள்... குறிப்பாக இணைய வசதி போன்றவைகளை செய்து கொடுக்க வேண்டும்.

ஜெயாநகர், வாராணாசி ஒரு பார்வை

ஜெயாநகர், வாராணாசி ஒரு பார்வை

ஊருக்குள் நுழையும் போதே, நம் அக்மார்க் மேடு பள்ள இந்தியச் சாலைகள், அதுவும் செங்கல்லைப் பயன்படுத்தி போட்டிருக்கிறார்கள், ஊருக்கு வெளியே மட்டும் தான் நல்ல தார் சாலைகள், கிராமத்தின் உள்ளே பூறாவும் செங்கல் மற்றும் சிமெண்ட் கற்களை அடுக்கி வைத்து விட்டு போன கற்கள். உலகில் முதல் முறையாக பேட்டரிகளே இல்லாத சோலார் மின் விளக்குகள்.

மின்சார இணைப்பு

மின்சார இணைப்பு

மே 2018-ல் நம் மோடி ஜி "இந்திய கிராமங்கள் முழுமைக்கும் மின்சார இணைப்பு கொடுத்துவிட்டோம்" என்று மார்தட்டினார். ஃபோர்ஸ் நிறுவனமே "தம்பி உங்க இந்தியாவுல சுமார் 3.10 கோடி பேருக்கு மின்சாரம்னா என்னன்னே தெரியல. அங்க போய் கொஞ்ச என்னன்னு பாத்துட்டு வந்து வாய் பேசுங்க" என்றது. வெளிநாட்டு பத்திரிகை என்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் பல் இலித்தார் மோடி. இதுவே ஒரு உள்ளூர் பத்திரிகை சொல்லி இருந்தால் உடனடியா இப்போது Quint பத்திரிகை மீது வருமான வரித் துறையை ஏவி மிரட்டி இருப்பார்கள்.

போட்ட சாலையில் புகார்

போட்ட சாலையில் புகார்

"என்னங்க ரோடு போட்டாய்ங்க, ஒரு மழைக்கு கூட தாங்கல, காசு எங்களுக்கு வந்துச்சா தெரியல, வந்த காச ஒழுங்கா செலவு பண்ணாங்களா தெரியல, ஆனா எங்களூக்கு ரோடு போட்ட காண்டிராக்டர் எல்லாம் பட்டனத்துல இருந்து வர்றாங்க, போறாங்க. ஆனா நாங்க மட்டும் இன்னும் ஒரு நல்ல ரோட்டுக்காக எத்தனை காலக் காத்திருக்குணும்" என கிராம வாசி ராஜன் கொந்தளிக்கிறார்.

 தலித் மறுதலிப்பு

தலித் மறுதலிப்பு

"இது மோடியோட கிராமம்ன்னு பேருக்கு வேணும்னா சொல்லிகலாம், ஆனா எல்லா கிராமத்த மாறி தான் இங்கயும். ஜாதி வெறி. இங்க எங்க மொத்த கிராமத்துக்கு வர்ற வசதிகள்ள கடைசி மிச்ச சொச்சம் தான் தலித் ஏரியாக்களுக்கு செலவிடுவாங்க. அதுவும் அரசு அதிகாரிங்க, கான்ட்ராக்டருங்க எல்லாம் சாப்பிட்டு மிச்சம் இருந்தா தான் வரும், இல்லன்ன தலித்துங்க பேசாம போக வேண்டியது தான். ஏன் எங்களுக்கு பண்ணளன்னு எல்லாம் கேட்க முடியாது, கேட்கவும் கூடாது. என்னா நாங்க தலித்" என்று பலம்பிக் கொண்டே தலையில் துண்டைக் கட்டுகிறார் கிராமவாசி ராம்ராஜ்

Beti Bachao Beti Padhao and Digital India

Beti Bachao Beti Padhao and Digital India

மோடி ஜியின் Sansad Adarsh Gram Yojana திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பள்ளியிலேயே மின்சாரம் இல்லை. இதைச் சொன்னது ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ அல்ல, அந்த பள்ளிக் கூடத்தில் வகுப்பு எடுக்கும் ஆசிரியை. இந்த ஸ்மார், டிஜிட்டல் (ஜியோ) பள்ளிக் கூடத்தில் பேட்டரிகளே இல்லாமல் சோலார் பேனல்கள் மட்டும் பொருத்தப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் இது நம்பர் 1 திட்டம் அடுட்த்து நம்ம டிஜிட்டல் இந்தியா. இந்த திட்டங்கள் படி பார்த்தா கூட இந்த பள்ளிக் கூடத்துக்கு மின்சாரம் கிடைத்திருக்க வேண்டும்.

ஆளுக்கு ஒரு மாடு

ஆளுக்கு ஒரு மாடு

"என்னங்க சொல்றீங்க, இப்படி எல்லாம் சொன்னாங்களா, எங்களுக்கு ஒரு மாடு கூட வேண்டாம், ஒரு ஆடு கூட குடுக்கலிங்களே..." என்று ஊர் மக்கள் வருந்திக் கொண்டிருக்க "அதெல்லாம் பிரதமரோடு Sansad Adarsh Gram Yojana திட்டத்துக்கு கீழ தந்திருக்கணும், ஆனா இன்னக்கி வர வரல" என்று ஊர் தலைவர் நாராயண் சொல்கிறார்.

எல்லாம் காகிதத்தில்

எல்லாம் காகிதத்தில்

இப்படி நாட்டின் பிரத மந்திரியே தத்தெடுத்திருக்கும் கிராமத்துக்கு எல்லா நிறுவனங்களும், வந்து எல்லா வேலைகளையும் முடித்தது போல அனைத்து அரசு தஸ்தாவேஜ்களும் சொல்கின்றன. ஆனால் இப்போது சொல்ல வேண்டியது பேப்பர்கள் அல்ல, சுரண்டித் தின்ன அதிகாரிகள் தான். அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மத்தியில் ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்டின் விளைவு தான் எங்கள் ஊருக்கு கிடைத்திருக்கும் நல்லவைகள் எல்லாம் என கடுப்பாகிறார் ஊர் தலைவர் நாராயண். சரி என்ன தான் உங்கள் கிராமத்துக்கு புதிதாக கிடைத்திருக்கிறது என்றால் "மூன்று வங்கிகள் வர வழைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டிருக்கிறது. அதை ஒரு ஓடாத பேருந்து மட்டும் எப்போதும் பயன்படுத்துகிறது. அவ்வளவு தான்" என்கிறார்ஊர் தலைவர் நாராயண்.

 மெட்டீரியல் சப்ளை குஜராத்

மெட்டீரியல் சப்ளை குஜராத்

"ஆமாங்க எங்க ஊர்ல கட்டுன பஸ் ஸ்டாண்டு ஆகட்டும், பள்ளிக் கூடமாகட்டும், ரோடு போட பயன்படுத்தின செங்கல், சிமென்ட் ஆகட்டும் எல்லாமே குஜராத்துல இருந்து தாங்க வந்துச்சு" என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார் ஊர் தலைவர் நாராயண்.

 கூலியா பாக்கலாம்

கூலியா பாக்கலாம்

தொழில் பயிற்சிக்காக காதி அமைச்சகம் தொடங்கிய காதி கைவினை மில் மற்றும் விற்பனையகத்தில் பணி புரியும் 75 பெண்களுக்கு கடந்த நான்கு மாதமாக சம்பளம் கொடுக்கவில்லை. வேலை பார்க்கும் யாருக்கு ஏன் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்கிற காரணமே தெரியாமல் வேலை பார்க்கின்றனர்.

மோடி ஜி தத்தெடுத்த ஜெயாநகர் கிராமத்தில், Quint பத்திரிகை நிருபர்கள் எடுத்த நேரடி வீடியோவைக் காண:

 

Quint

Quint

இந்த விஷயத்தை தான் Quint பத்திரிகை ஒரு வீடியோ பதிவு மூலம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்படி மோடியின் கிராம மக்கள் படும் கஷ்டத்தை சொன்ன Quint நிறுவனர் ராகவ் பால் வருமான வரியில் 118 கோடி முறைகேடு செய்திருப்பதாகச் சொல்லி கடந்த வியாழக்கிழமை என்று காலை 7.45 மணி தொடங்கி வெள்ளிக் கிழமை காலை 6 மணி வரை வருமான வரித்துறையினர் நோண்டி நொங்கு எடுத்திருக்கிறார்கள். வருமான வரித்துறை எந்த ராகவ் பல் முறைகேடு செய்ததற்கான எந்த ஒரு சிறிய ஆதாரம் கூட கிடைக்கவில்லை. வருமான வரித்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு முறையான் பதில்களை ஆதாரங்களோடு காட்ட வருமான வரித் துறை "ஸாரி சார்" என பல் இழித்திருக்கிறது.

ராகவ் பல்

ராகவ் பல்

நாங்கள் அரசுக்கு என்ன வரிகளைச் செலுத்த வேண்டுமோ அவைகளை முழுமையாக செலுத்தி வருகிறோம். எனக்கும் சரி, என் நிறுவனத்துக்கும் சரி வந்த வருமானங்களை ஒழுங்காக கணக்கு காட்டி அந்த அந்த வருடங்களிலேயே வரி செலுத்தி வந்திருக்கிறோம். இனியும் அரசுக்கு முறையாக வரி செலுத்துவோம். மேற் கொண்டு வரும் அனைத்து பிரச்னைகளையும் நீதி மன்றங்களில் தீர்வு காண்போம். பத்திரிகைகளுக்கு ஆளும் வர்கத்தினரிடம் இருந்து எதிர்ப்புகள் வருவது உலகம் முழுவதும் நடப்பது தான். இந்த யுத்தங்கள் போராட வேண்டியவைகள், வெற்றி பெற வேண்டியவைகள், வெற்றி பெறுவோம்" என்றார் ராகவ் பல்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: modi mp மோடி
English summary

If someone criticise modi adopted village, he has to face income tax raids

If someone criticise modi adopted village, he has to face income tax raids
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X